Monday, May 30, 2011

தேசிய விருதும்..வாலியும்..





இதுவரை வெளியாகியுள்ள திரைப்படங்களின் பாடல்களில் பாதிக்கும் மேல் வாலியும், கண்ணதாசனுமே எழுதியிருப்பார்கள்.

தேசியவிருதுகளின் வயது ஐம்பத்தெட்டு.ஆனால் தமிழ்த் திரையுலகம் பாடலுக்காக எட்டு விருதுகளையே பெற்றுள்ளது.

பாரத விலாஸ் படத்தில்..'இந்திய நாடு என் வீடு..இந்தியன் என்பது என் பேரு' என்று வாலி எழுதிய பாடல் ஒன்று உண்டு.

தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் பாடல் என்பதால், வாலிக்கு தேசிய விருது பரிந்துரைக்கப்பட்டு அவரைப் பற்றிய குறிப்புகள் கேட்டு ஃபிலிம் சேம்பருக்கு ஒரு கடிதம் அனுப்பினர்.ஆனால் வாலியோ பதில் அனுப்பவில்லை..அதற்கான காரணம்..வாலி சொன்னது..

'எனக்கு விருது தர வேண்டுமென்றால் அவர்களுக்கு என்னைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும்.இல்லை..அந்தப் பாடல் நன்ராக இருக்கிறெதென்றால் அதை யார் எழுதியிருந்தாலும் விருதை அறிவித்திருக்க வேண்டும்

இத் தகவலை பழநிபாரதி அவர்கள் குங்குமம் இதழில் தெரிவித்திருக்கிறார்.

மேலும் சொல்கையில்..'சென்ற ஆண்டு பின்னணி இசைக்காக இளையராஜா அவர்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. பழசிராஜா என்னும் படத்திற்காக.நான் ஒரு பூங்கொத்து வாங்கிக் கொண்டு அவரைப் பார்க்கச் சென்றேன்..அவர் சிரித்தபடியே கேட்டார்..

'இசைக்கும் விருதுக்கும் என்னப்பா சம்பந்தம்'



டிஸ்கி..விருதுகள் நம்மைத் தேடி வர வேண்டும்..நாம் அதைத் தேடிச் செல்லக் கூடாது

6 comments:

MANO நாஞ்சில் மனோ said...

டிஸ்கி டாப்பே....!!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி மனோ

கோவி.கண்ணன் said...

//மேலும் சொல்கையில்..'சென்ற ஆண்டு பின்னணி இசைக்காக இளையராஜா அவர்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. பழசிராஜா என்னும் படத்திற்காக.நான் ஒரு பூங்கொத்து வாங்கிக் கொண்டு அவரைப் பார்க்கச் சென்றேன்..அவர் சிரித்தபடியே கேட்டார்..

'இசைக்கும் விருதுக்கும் என்னப்பா சம்பந்தம்'//

ரஹ்மான் ஆஸ்கார் வாங்கியதிலிருந்து இளையராஜாவுக்கு விருது என்றாலே 'ச்சீ....' என்றாகிவிட்டது.

வெங்காயம் said...

//அந்தப் பாடல் நன்ராக இருக்கிறெதென்றால் அதை யார் எழுதியிருந்தாலும் விருதை அறிவித்திருக்க வேண்டும்//
ithu mettaru

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கோவி.கண்ணன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வெங்காயம்