Monday, May 30, 2011

தமிழகத் தேர்தலில் காங்கிரஸ் தோற்கக் காரணம்..தி.மு.க., வா?





நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் தோற்கக் காரணம் என்ன என்பதை தமிழக வாக்காளர்கள் அனைவரும் அறிவர்.

இலங்கைத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் காங்கிரஸின் துரோகத்தை மறக்கமுடியுமா?

நோய்டாவில் விவசாயிகள் நிலம் கையகலப்படுத்தியதற்கு ஓடிய ராகுல்...தமிழகத்தின் அப்பாவி மக்கள் வேதனையையை ஏன் கண்டுக்கொள்ளவில்லை.

தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களை சேர்த்து...அடையாள அட்டை வழங்கினால் மட்டும் போதுமா?

நேற்று அப்படி திண்டுக்கல்லில் அடையாள அட்டை வழங்கும் விழாவில் கலந்து கொண்ட தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் பேசுகையில்..'தமிழகத்தில்..எங்கள் கருத்துகளைக் கேட்டு மேலிடம் நடந்திருந்தால் 234 தொகுதிகளிலும் காங்கிரஸ் வென்றிருக்கும் என்றார்.

அதாவது காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டிருந்தால்..வென்றிருக்கும் என்ற பொருள்பட.

அவர் மேலும் கூறுகையில் 'தி.மு.க. அமைச்சர்கள் முதல் வார்டு உறுப்பினர்கள் வரை புரிந்திருந்த ஊழலால் காங்கிரஸ் தோற்றது என்றுள்ளார்.



டிஸ்கி- ஐந்து இடங்களில் அவர்களுக்கு வெற்றி வாங்கிக் கொடுத்த தி.மு.க., விற்கு..இதுவும் வேண்டும்..இன்னமும் வேண்டும்

3 comments:

vijayan said...

இந்திரா குடும்ப ஆதிக்கத்திலிருந்து காங்கிரஸ் வெளியே வந்து உட்கட்சி ஜனநாயகத்தை நிலைநிறுத்தினால் தான் உருப்பட முடியும்.பிரணாப் முகர்ஜி,பசி,மணிசங்கர் அய்யர் ,நொந்த பாலு போன்ற வெகுஜன ஆதரவு இல்லாத ஆட்கள் ஆட்சிக்கு வருவதற்காக ஒவ்வொரு மாநிலத்திலுமுள்ள கருணாநிதி,ஜெயலலிதா போன்ற ஊழல் சக்ரவர்த்திகளுடன் உடன்பாடு கண்டால் இதுதான் கதி.

Robin said...

//ஐந்து இடங்களில் அவர்களுக்கு வெற்றி வாங்கிக் கொடுத்த தி.மு.க., விற்கு..இதுவும் வேண்டும்..இன்னமும் வேண்டும்// இதில் குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் வென்ற மூன்று தொகுதிகளிலும் பெற்ற வெற்றி தன் சொந்த செல்வாக்கினால் பெற்றது. நெல்லை எங்கள் எல்லை, குமரி என்றும் தொல்லை என்று சொன்னது யார்?

இந்த தேர்தல் தோல்விக்கு தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்புதான் முக்கியமான காரணம். இலங்கை பிரச்சினையில் காங்கிரஸ் செயல்பாடு தவறு, அதைப்போல கருணாநிதியும் கண்டுகொள்ளவில்லை. கடந்த தேர்தலிலேயே இலங்கை தமிழர் பிரச்சினை ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

palanikumar said...

nellaiyil BJP ovvoru thogudhiyilum sumaar 30000 vakkugal petrathaal congress 3000,4000 vaakkugal vithiyaasthil vetri petru vittadhu