Tuesday, July 5, 2011

சிரிப்பில் இத்தனை வகையா?




கலைவாணர் என்.எஸ்.கே., ஒரு படத்தில் வித விதமான சிரிப்பைப் பற்றி  ஒரு பாடல் பாடுவார்.

அதுபோல இந்த வார பாக்யா இதழில் ஒரு கேள்விக்கு பாக்கியராஜ் சிரிப்பில் எத்தனை வகை என வித்தியாசமாக சிந்தித்து ஒரு கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.அவர் சொல்லியுள்ள வகைகளைப் பார்ப்போமா?

ஓயாமல் சிரிப்பவன் பைத்தியக்காரன்

ஓடவிட்டு சிரிப்பவன் வஞ்சகன்

இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் கோமாளி

இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன்

கண்பார்த்து சிரிப்பவன் கஞ்சன்

கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்

மோகத்தில் சிரிப்பவன் வெறியன்

மகிமையில் சிரிப்பவன் மன்னன்

தெரியுமென்று சிரிப்பவன் பசப்பாளி

தெரியாதென்று சிரிப்பவன் நடிகன்

இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி

நிலைகண்டு சிரிப்பவன் காரியவாதி

கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்

கொடுக்கும்பொழுது சிரிப்பவன் சூழ்ச்சிக்காரன்

மாண்பில் சிரிப்பவன் பண்பாளன்

வெற்றியில் சிரிப்பவன் வீரன்

விளையாமல் சிரிப்பவன் வீணன்

தற்பெருமையில் சிரிப்பவன் கோழை

அருளுக்கு சிரிப்பவன் ஆண்டி

நின்று சிரிப்பவன் நினைவுள்ளவன்

நினைவோடு சிரிப்பவன் அறிவாளி

குழைந்து சிரிப்பவன் சந்தர்ப்பவாதி

துன்பத்தில் சிரிப்பவன் மனிதன்

அன்பால் சிரிப்பவள் அன்னை

காதலால் சிரிப்பவள் மனைவி

நிலை மறந்து சிரிப்பவள் காதலி



டிஸ்கி- (இது நாம்)இதை படித்த பெருமிதத்தில் சிரிப்பவன் அறிவை போற்றுபவன்

 

3 comments:

ஹேமா said...

இத்தனை சிரிப்பா...புன்சிரிப்போடு பின்னூட்டமிடுகிறேன் !

goma said...

அவரது எழுத்து எப்பொழுதுமே சிந்திக்க வைப்பவைதான்,சுவாரசியமானவைதான் ஆனாலும் ,கொஞ்சம் சரியாக வாசித்துப் பாருங்கள்.பாக்கியராஜ் இங்கே சிரிப்பின் வகைகளை எழுதவில்லை....அவரவர் சிரிப்பை வைத்து மனிதனின் குணத்தைக் கூறியிருக்கிறார்.

goma said...

இதே டாபிக் வேறு கோணத்தில் என் கருத்தாக விரைவில் பதிவாகும்....