Saturday, October 27, 2012

ஆஜீத் வெற்றீ முன்னரே தீர்மானிக்கப்பட்டதா...??
சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 போட்டியில் ஆஜீத் வெற்றி பெற்றுள்ளார்.அவருக்கு வாழ்த்துகள்..

ஆனால்...இந்த முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டதா? என்ற கேள்வி பரவலாய் இருக்கிறது.முந்தைய ஜூனியர் 2 போட்டியில் சந்தேகமின்றி அல்கா வெற்றி பெற்றது குறித்து எள்ளளவும் சந்தேகம் எழவில்லை.

ஆனால் இந்த போட்டி...

ரஹ்மான் வருவது ரகசியமாய் வைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது.ஆனால்..அஜீத்தை உனக்குப் பிடித்தவர் யார் என்று கேள்வி கேட்கப்பட்டு அவனும் ரஹ்மான் சார்தான் தனக்குப் பிடித்தவர் என்றான்.

ரஹ்மான் பாடிய பாடல்களே அவன் பாடினான்.தவிர்த்து வந்தே மாதரம் பாடலை போட்டியில்..அதுவும் ஃஃபைனலில் யாரும் பாடமாட்டார்கள்.அப்பாடல் முதலில் கிளாஸிகள் பாடலோ..படப்பாடலோ இல்லை.

(போட்டிமுடிவு எப்படிருந்தாலும்..ஏதேனும் குறைகள் சொல்லக்கூடும்..சந்தேகங்களும் வரும் )

(முன்னதாக..கௌதம் ஒருமுறை 'பிச்சைப்பாத்திரம்:" பாடல் பாடிய போது..'இது இச் சுற்றுக்கு ஏற்றபாடல் இல்லை' என மறுக்கப்பட்டது..நினைவிருக்கலாம்)

எது எப்படியோ...இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தியமைக்கு விஜய்டீவிக்கு பாராட்டுகள்.

லட்சக்கணக்கில் எஸ் எம் எஸ் அனுப்பி...எதிர்பாராத வருவாயை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கிய மக்களுக்கும் பாராட்டு (?!)

பிரகதி இரண்டாம் இடத்தில் இருந்தாலும்..கண்டிப்பாக முதலிடத்திற்கு தகுதியானவர்.

சுகன்யா தான் சற்றே ஏமாற்றிவிட்டார்.

(டிஸ்கி - தலைப்பு வெற்றீ என்று போடப்பட்டுள்ளதே எனக் கேட்கலாம்..வெற்றி...இழுக்கப்பட்டால்..? அதற்கு அர்த்தம் என்ன..உங்களுக்கேப் புரியும் )

9 comments:

கோவி.கண்ணன் said...

பையன் பெர்மாமன்ஸ் சூப்பர், பையனும் தமிழ்நாட்டுப் பையன், அவன் என்ன பாட்டு பாடி இருந்தாலும் பாடிய விதம், வெளிப்படுத்திய விதம் சூப்பர்.

பிரகதி இரண்டாம் இடத்தில் வந்ததும் வருத்தமே, அவரும் சிறப்பாகவே செய்திருந்தார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஆஜீத் திறமையாகப் பாடினான் என்பதில் சந்தேகமில்லை..ஆனால்..முடிவை சந்தேகப்படும் வகையில் வைக்கக்கூடாது.மேலும்..மனோ இருவருக்கும் அரை மதிப்பெண்தான் வித்தியாசம்..என தேவையில்லாததைக் கூறியது..'அப்பன் குதிருக்குள் இல்லை' என்பதைப் போல இருந்தது.
வருகைக்கு நன்றி கோவி

T.V.ராதாகிருஷ்ணன் said...

பின்னூட்டம் இடுபவர்கள் தயவு செய்து ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.இது ஆஜீத்தை குறை சொல்லும் பதிவல்ல.அதே சமயம் இப்போட்டிகளின் முடிவுகள் சந்தேகத்திற்கு இடமின்றி இருக்க வேண்டும்.சந்தேகப்படவைக்கும் விஷயங்களை மக்கள் மத்தியில் வைக்கக்கூடாது என்பதே.
இன்னும் சொல்லப் போனால்..பிரகதி..முதல் முப்பதிற்குள் வரவில்லை..பின் ஒருவர் விலக அவர் உள் நுழைந்தார்.ஆஜீத்..இதே நடுவர்களால் டாப் 5ந்துக்குள் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
ஆஜீத் திறமை குறைத்து நான் மதிப்பிடவில்லை.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தல., ஒரு ஓட்டு ஒரு எஸ்.எம்.எஸ் மூணே மூணு ரூபா.., ஒரு லட்சம் எஸ்.எம்.எஸ். மூணு லட்சம் ரூபா., பரிசுத் தொகை?

(டிஸ்கி:- நான் வெற்றி பெற்றவர் பெயரையோ, விதத்தையோ பேசவில்லை. பேசவே இல்லை)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஒரு ஓட்டு , ஒரு எஸ்.எம்.எஸ் மூணு ரூபா., ஒரு லட்சம் ஓட்டு மூணு லட்சம் ரூபா

(டிஸ்கி:- நான் வெற்றி பெற்றவர் பற்றி எதுவும் பேசவில்லை. வைல்டு கார்டு பற்றியும் எதுவும் பேச விரும்பவில்லை. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு)

மலரின் நினைவுகள் said...

இது அங்கீகரிக்கப் பட்ட போட்டி அல்ல..
WWF & IPL போல Just a Show...
ASS (Airtel Super Singer) is neither a sport nor a competition.
இந்த விளம்பரதாரர் நிகழ்ச்சியை விமர்சிப்பது நாமே இலவசமாக விளம்பரம் செய்வது போலாகும்.

GANESH said...

for me YAZHINI is No1.She can sing any type song superb in this age :)

Aajith can sing only high pitch songs not rytham based songs and also not much good voice!!!

Peoples vote Aajith for performance acting not for music talent!!!!

peoples vote correctly :)

விஜய் said...

பொதுமக்களை ஓட்டுப்போட சொன்னால் பெரும்பாலும் அவர்களுக்கு பிடித்தவர்களுக்குதான் ஓட்டு போடுவார்கள். அப்புறம் எதற்கு நடுவர்கள்? இவ்வளவு நாள் ஆர்ப்பாட்டம் எதற்கு? எனக்கு ஆஜித்தின் ஸ்டைல் பிடிக்கும். நன்றாக பாடுவான். ஆனால் இந்த பட்டம் கண்டிப்பாக பிரகதிக்கு கிடைக்க வேண்டியது.

Jayadev Das said...

\\லட்சக்கணக்கில் எஸ் எம் எஸ் அனுப்பி...எதிர்பாராத வருவாயை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கிய மக்களுக்கும் பாராட்டு (?!)\\ நிகழ்ச்சி 11:30 மணிக்கே முடிஞ்சுபோய் வெற்றியாளர்களை தீர்மானித்த பின்னரும், தொலைக்காட்சியில் லைவ் என்று பொய் சொல்லி விடிய விடிய SMS மில் ஒட்டு போடு, இன்டர்நெட்டில் வேட்டு போடு என்று காசை கரந்திருக்கானுங்க பாஸ், அங்க தான் இவனுங்க நேர்மை இடிக்குது............