சென்னையில் தான் நான் பல வருஷங்களாக வசித்து வருகிறேன்., இந்நகரில் பஸ் போக்குவரத்து அதிகம்.முன்பெல்லாம் சிவப்பு நிறத்தில் மட்டுமே பஸ்கள் இருக்கும். இப்போது பல வண்ணங்களில் பேருந்து (இப்படித்தான் சொல்ல வேண்டும்...பஸ்..என சொல்லக்கூடாது)கள் ஓடுகின்றன.சாதாரண கட்டணமுள்ள பேருந்து,விரைவுப் பேருந்து.சொகுசுப் பேருந்து.குளிர் சாதன பேருந்து என பல ஓடுகின்றன.ஒவ்வொன்றிற்கும் ஒரு மாதிரி கட்டணம்..விரைவுப் பேருந்து வேகமாகச் செல்லும் என எண்ணி சிலர் ஏறுவர்..கடைசியில் ஏமாறுவர்..ஏனெனில் அந்த பேருந்துகளும் எல்லா நிறுத்தத்திலும் நிற்கும்.பேருந்தில் 25 பயணிகள் மட்டுமே நிற்கலாம்..ஆனால் 2க்கு முன்னால் 1செர்த்து 125 பயணிகள் கூட இருப்பார்கள்.எந்த வாகன ஒட்டும் சட்டமும் இதை கண்டுக்கொள்ளாது.
சரி..ரயிலில் போகலாம் என்றால்..நீங்கள் மாதாந்திர சீசன் அட்டை வைத்திருந்தால்..பிழைத்தீர்கள்..இல்லவிட்டால்..நீங்கள் நிலயத்தில் டிக்கட் வாங்க நிற்கும் நேரத்தில்...நடந்தே செல்லும் இடத்துக்கு சென்று விடலாம்.சென்னை கடற்கரை நிலையத்திலிருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில் உண்டு.உடனே ரயில் பறக்குமா என கேட்கக்கூடாது.அந்த ரயில் செல்லும் பாதை
நிலமட்டத்திலிருந்து உயரத்தில் இருப்பதால் இந்த பெயர்.ஊருக்குள்ளே ஓடும் ரயில் இது என்று சொல்லலாம்.
இது எல்லாம் வேண்டாம்...ஆட்டோ வில் செல்லலாம் என்று நீங்கள் நினைத்தால் அதற்கும் வசதி உண்டு.ஆட்டோவிற்கு மீட்டர் உண்டு..ஆனால் டிரைவர்கள் மீட்டர் போட மாட்டார்கள்.வாய்க்கு வந்த கட்டணம் கேட்பார்கள்..மீட்டர் போட்டால் தான் வருவேன்..என்று புத்திசாலியாக சொல்லலாம்...அப்படி மீட்டர் போட்டு பயணம் செய்தால் ஆட்டோ டிரைவர்..முதலில் கேட்ட தொகையை வட மீட்டர் இரு பங்கு காட்டும்.(மீட்டர் சூடு போட்டதாக இருக்கும்)..நீங்கள் அதைக் கொடுத்துவிட்டு...சூடுபட்ட பூனையாய்..அடுத்த நாள் முதல் ஆட்டோவைக் கண்டால் காத தூரம் ஓடுவீர்கள்.இதையும் போலிஸ் கண்டுக்கொள்வதில்லை...பல ஆட்டோக்கள் போலிசாருடையது என்கிறார்கள்.அந்த காரணமாயும் இருக்கலாம்.
சென்னையில் தங்க சொந்தமாக ஒரு இடம் இருந்தால் தப்பித்தீர்கள்.இல்லாவிட்டால்..நீங்கள் வாங்கும் சம்பளத்தில் வீட்டு வாடகை பாதியை விழுங்கி விடும்.அபார்ட்மெண்டில் வசித்தால் மெயிண்டனேன்ஸ் என 500ஓ 1000மோ அதகப்படியாக மினி ரெண்ட் போலஆகிவிடும்.வாடகை பாதி.போக்குவரத்து செலவு கால் பகுதி..போக..மீதி கால் பகுதியில் தான் உணவு,உடை,குழந்தைகள் பள்ளிச்செலவு.மருத்துவ ச்செலவு.பொழுதுபோக்கு செலவு எல்லாம்.சிதம்பரத்தின் நாட்டு பண வீக்க கவலையை விட..நமக்கு நம்ம வீட்டு பணவீக்கம் கவலையைத் தரும்.
முக்கியமாக சொல்ல மறந்தது...சம்பளத்தன்று...பேருந்தில் வந்தால் ..பிக்பாக்கட்டுக்களால் முழு சம்பளத்தையும் இழக்க நேரிடும்.பிறகு கடன்தான் மாத செலவுக்கு.
மறந்து போன மற்றவை அடுத்த பதிவில்
12 comments:
எவ்ளோதான் பிரச்சினைகள் இருந்தாலும்....
மெட்றாஸ் மெட்றாஸ்தாங்க!!!!
(பாகம் 1)அ மறந்துட்டீங்க போலிருக்கு
// விஜய் ஆனந்த் said...
எவ்ளோதான் பிரச்சினைகள் இருந்தாலும்....
மெட்றாஸ் மெட்றாஸ்தாங்க!!!!//
ஆமாங்க,...எவ்வளவு மக்கா இருந்தாலும் நம்ம பையன் நமக்கு புத்திசாலிதான்.
//// மருதநாயகம் said...
(பாகம் 1)அ மறந்துட்டீங்க போலிருக்கு//
ஆமாங்க..நல்ல வேளை..ஞாபகப்படுத்திட்டீங்க
இருக்கிறவனுக்கு எங்கும் சொர்கம், இல்லாதவனுக்கு சொர்க்கமும் நரகம்
// rapp said...
இருக்கிறவனுக்கு எங்கும் சொர்கம், இல்லாதவனுக்கு சொர்க்கமும் நரகம்//
சரியாக சொன்னீர்கள் ராப்
சொர்க்கமே ஆனாலும் நம்ம ஊரைப்போலாகுமா?
//Anonymous said...
சொர்க்கமே ஆனாலும் நம்ம ஊரைப்போலாகுமா?//
உண்மை..உண்மை..உண்மை
//சொர்க்கமே ஆனாலும் நம்ம ஊரைப்போலாகுமா?//
டடண்டட டண்டட டண்டண்...
ரிப்பீட்டே.....:-))
// ச்சின்னப் பையன் said...
//சொர்க்கமே ஆனாலும் நம்ம ஊரைப்போலாகுமா?//
டடண்டட டண்டட டண்டண்...
ரிப்பீட்டே.....:-))
:-))))))
ரிப்பீட்டே.....:-))
//rapp said...
இருக்கிறவனுக்கு எங்கும் சொர்கம், இல்லாதவனுக்கு சொர்க்கமும் நரகம்//
ரிபிட்டேய்
//வடகரை வேலன் said...
//rapp said...
இருக்கிறவனுக்கு எங்கும் சொர்கம், இல்லாதவனுக்கு சொர்க்கமும் நரகம்/
ரிபிட்டேய்//
ரிபிட்டேய்
Post a Comment