Showing posts with label பதிவர்வட்டம். Show all posts
Showing posts with label பதிவர்வட்டம். Show all posts

Tuesday, December 22, 2009

ஈரோடு திருவிழா


நான் சில நேரங்களில்..சில நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டும் என தீர்மானித்திருப்பேன்..ஆனால் நிகழ்ச்சியன்று மறந்திருப்பேன்..அல்லது வேறு முக்கிய நிகழ்ச்சி வந்து..இருகோடுகள் தத்துவத்தில் அதி முக்கியநிகழ்ச்சியில் கலந்துக் கொள்வேன்.அல்லது..கொல்லன் பட்டறையில் ஈ க்கு வேலையில்லை என தெரிந்தால்..நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளமாட்டேன்.

ஈரோடு நகரில் பதிவர் சங்கமம் நிகழ்ச்சிப் பற்றி கேள்விப்பட்டதுமே..ஈரோடு பதிவர்கள் மட்டுமே கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சி அது என நினைத்தேன்.பின் வந்த பதிவுகளையும்..செய்திகளையும் பார்த்துவிட்டு..இது ஒரு மா பெரும் விழாவாக இருக்கும் என நினைத்தேன்.உடன் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் எண்ணம் வந்தது.அப்துல்லாவோ,கேபிளோ ஒரு வார்த்தை சொல்லி இருந்தால்..கண்டிப்பாக அவர்களுடன் வந்திருப்பேன்.

ஒரு கதை உண்டு..

ஒரு நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியது.நாட்டு மன்னன் ஒரு தொட்டியைக் கட்டி..மக்கள் ஒவ்வொருவரும் ஒரு குவளை பாலைக் கொணர்ந்து அதில் கொட்ட வேண்டும் என கட்டளையிட்டான்.வறுமை நிலையில் மக்கள் பாலுக்கு எங்கே போவார்கள்?நாம் ஒரு குவளைத் தண்ணீரைக் கொட்டினால்..பாலுடன் தண்ணீர் கலந்துவிடும்..மன்னனுக்கும் தெரியாது என ஒவ்வொருவரும் எண்ணி தண்ணீரைக் கொண்டு வந்துக் கொட்டினர்.காலையில் மன்னன் பார்த்தால் தொட்டி முழுதும் தண்ணீர்.

அதுபோல நாம் ஒருவர் போகாவிட்டால் என்ன ஆகிவிடப் போகிறது என எண்ணிவிட்டேன்.ஆனால் நிகழ்ச்சி முழுதும் மக்கள் பாலைக் கொட்ட..தண்ணீரைக் கொட்ட நினைத்த எனக்கே நஷ்டம்.

..நடந்த நிகழ்ச்சிகளையும்..விருந்தோம்பலும் பார்க்கும் போது எவ்வளவு முக்கிய நிகழ்ச்சிக்கு செல்ல வாய்ப்பிருந்தும்..அதை இழந்திருக்கிறேன் என்ற வருத்தம் ஏற்பட்டது.

தனித்தனியாக பெயர் குறிப்பிடாமல்..நிகழ்ச்சிக்கு பொறுப்பேற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்கள் மீது சற்று பொறாமை ஏற்பட்டாலும்..யாம் பெறாத இன்பத்தைப் பெற்ற அவர்களுக்கு பாராட்டுகள்.

மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை ஈரோடு பதிவர்கள் எனக்கு கொடுக்காமலா இருந்துவிடப் போகிறார்கள்.பார்த்துக் கொள்ளலாம்.

அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை என் வாழ்த்துகள்.

Wednesday, December 9, 2009

அகநாழிகை பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள்


டிசம்பர் 30 முதல் ஜனவரி 10ஆம் நாள்வரை நடைபெற உள்ள 33ஆவது சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு அகநாழிகை பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள் வர உள்ளன.விவரம் வருமாறு..

நாள் - டிசம்பர் 11 மாலை 5.30 அளவில்

இடம் - டிஸ்கவரி புக் பேலஸ்
6,மகாவீர் வணிக வளாகம்
முனுசாமி சாலை
கே.கே.நகர் (மேற்கு)
(பாண்டிச்சேரி ஹவுஸ் எதிரில்)
சென்னை - 60078

அனைத்து புத்தகங்களும் வெளியீட்டுவிழாவில் 10% தள்ளுபடியில் கிடைக்கும்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளால் மேடைநாடகங்கள் உயிரிழந்துக் கொண்டிருக்கின்றன..என்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும்..விஞ்ஞான வளர்ச்சிகளை தடுக்க முடியாது.ஆனால் இன்றும் நாடகங்கள் இங்கொன்றும்..அங்கொன்றுமாய் நடந்துக் கொண்டுதான் வருகின்றன.

சி.டி., டி.வி.டி., வருகையால் திரைப்படங்கள் பாதிக்கப் படும் என்று சொல்லப்பட்டது.இந்த கூற்றிலும் உண்மை இருந்தாலும்..நல்ல திரைப்படங்களை மக்கள் திரையரங்குகளில் சென்று பார்க்கவே விரும்புகின்றனர்.அதனால்தான் சமீபத்திய சில படங்கள் போட்டி போட்டுக்கொண்டு வசூலில் சாதனைகள் செய்து வருகின்றன.

..இணையத்தில் தினசரிகளும்,பத்திரிகைகளும் படிக்கும் வாய்ப்பிருந்தாலும்..வீடு தேடி அச்சு வாசனையுடன் காலையில் வரும் தினசரிகளைப் படிப்பதையே மக்கள் விரும்புகின்றனர்.கண்களுக்கு அதிகம் சிரமத்தைக் கொடுக்காமல் அச்சிட்ட பத்திரிககளையே படிக்க விழைகின்றனர்.

இந்நிலையில் நண்பர் பொன்.வாசுதேவன் இணைய எழுத்தாளர்களின் படைப்பை அச்சில் கொண்டுவந்து..அப்புத்தகங்கள் வெளீயீட்டு விழாவை நடத்துகிறார்.அவரின் இம் முயற்சிக்கு அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்..

வாசு..உங்களுக்கு எங்கள் வாழ்த்துகளும்..பாராட்டுகளும்..

நாமும் அவரின் இம்முயற்சி வெற்றிபெற ..மேன்மேலும் சிறக்க..வெளியீட்டு விழாவில் கலந்துக் கொள்வதுடன்..அப்புத்தகங்களையும் வாங்கி..நம் ஒத்துழைப்பை அவருக்கு தர வேண்டும்.

அன்று வெளிவர இருக்கும் புத்தகங்கள்...

கவிதைகள்

1.கருவேல நிழல் - பா.ராஜாராம்

2.கோவில் மிருகம்- என்.விநாயகமுருகன்

3.நீர்க்கோல வாழ்வை நச்சி - 'உயிரோடை' லாவண்யா

4.கூர்தலறம் - டி.கே.பி.காந்தி

சிறுகதைகள்

1.அய்யனார் கம்மா - நர்சிம்

கட்டுரைகள்

1.பார்ப்பன சிபிஎம்+அமார்க்கியம் = ஈழ விடுதலை எதிர்ப்பு அரசியல் -தொகுப்பாசிரியர் வளர்மதி

புத்தகங்களை எழுதியுள்ள அனைத்து எழுத்தாளர்களுக்கும்..உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்.

Thursday, October 15, 2009

தீபாவளி நல்வாழ்த்துகள்


தீபாவளி ஐப்பசி மாதம் அமாவாசை அன்று கொண்டாடப்படும் ஒரு பண்டிகை.

அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டத்தை..வெள்ளை மாளிகையில் வேத மந்திரங்கள் பின்னணியில் ஒபாமா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.இது செய்தி.

தீபம் என்றால் ஒளி..ஆவளி என்றால் வரிசை..வரிசை..வரிசையாய் விளக்கேற்றி..இருள் நீக்கி ஒளி தரும் பண்டிகையென தீபாவளி கொண்டாடப்படுகிறது.

கிருஷ்ணர்..நரகாசுரன் என்னும் அரக்கனை கொன்ற போது..அவன் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்ற கேட்ட வரத்திற்கேற்ப தீபாவளி கொண்டாடப்படுவதாக கதை உண்டு.

ராமாயணத்தில்..ராமர்..ராவணனை அழித்து விட்டு..தன் வனவாசத்தை முடித்து..மனைவி சீதை,தம்பி லட்சுமணனுடன் அயோத்தி திரும்பிய நாள்..மக்கள் விளக்கேற்றி..மகிழ்ச்சி அடைந்தனராம்.அதுவே தீபாவளி என்றும் கதை உண்டு.

ராமாவதாரத்திற்குப்பின்னர் தான் கிருஷ்ணாவதாரம்..அதனால் ராமர் காலத்தில் தீபாவளியே கிடையாது என்பாரும் உண்டு.

ஸ்கந்தபுராணப்படி..சக்தியின் கேதார விரதம் முடிந்து, சிவன் சக்தியை தன்னில் பாதியாக்கி அர்த்தநாரீஸ்வரர் ஆன தினம் என்றும் சொல்லப்படுகிறது.

1577ல் தங்கக்கோவிலுக்கான கட்டுமானப்பணிகள் தொடங்கியதால்..இந்த நாளை சீக்கியர்கள் கொண்டாடுகின்றனர்.

மகாவீரர் நிர்வாணம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து..சமணர்கள் கொண்டாடுகின்றனர்.

எது எப்படியோ..

பண்டிகை தினம் என்றாலே...மகிழ்ச்சியும்..கொண்டட்டமும் தானே!

அனைத்து பதிவர்கள், திரட்டிகள்,பின்னூட்டாதிபதிகள் அனைவருக்கும்..என் தீபாவளி நல்வாழ்த்துகள்.

வாழ்க..வளர்க

Thursday, October 8, 2009

அந்த மூன்று பிரபல பதிவர்கள் மீது மன வருத்தம்

நம் வலைப்பக்கம் அதிகம் படிக்கப் பட வேண்டும்..நிறைய பின்னூட்டங்கள் வர வேண்டும்..என்றெல்லாம் ஆசைப்படாத பதிவர்களே இருக்க முடியாது.அதுவும் பிரபல/மூத்த பதிவர்கள் பின்னூட்டங்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.

அதேபோல..நமக்கு வரும் follwers அதிகரிக்க அதிகரிக்க..நம் ஆனந்தம் எல்லை மீறுகிறது.அதுவும் பிரபல பதிவர் நமக்கு ஃபாலோயர் ஆனால்..!!!!

ஆனால்..அப்படி ஆனந்தப்பட்ட எனக்கு அதிர்ச்சியும்..ஏமாற்றமுமே ஏற்பட்டது.

என் வலைப்பக்கத்திற்கு..மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் மூன்று பிரபல பதிவர்கள் ஃபாலோயர்ஸ் ஆனார்கள்..இவர்களெல்லாம்..இணையதளத்தில்..எவ்வளவு நாட்களாக இருக்கிறார்கள்..இவர்கள் மேல் மதிப்பும்..மரியாதையும் கொண்டேன்.

ஆனால்..அவர்கள் மீதான மதிப்பு..இவ்வளவு விரைவில் அழியும் என எண்ணவில்லை.

முதல் பதிவர்..அவர் புகைப்படம் என் வலைப்பூவின் முகப்பில்..இருந்தவரை ஃபாலோயராக இருந்துவிட்டு..அது மறைந்ததும்..தன் பெயரை டெலிட் செய்து விட்டார்.

எல்லோரும் அப்படியிருக்க மாட்டார்கள் என்று எண்ணினேன்..ஆனல்..அடுத்த சில நாட்களில் மற்றொருவர் இதே போல செய்தார்.

இரு தினங்களுக்கு முன்னர்..மீண்டும் ஒருவர் இதே போல கழண்டுக்கொண்டார்.

அவர்கள் ஃபாலோயராக இருப்பதும்..இல்லாததும் அவர்கள் விருப்பம்..ஒருவேளை..நம் வலைப்பூவின் தரம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் அவர்கள் அப்படி செய்திருக்கலாம்..ஆனால்..சரியாக அவர்கள் முகம் முகப்பில் மறைந்ததும் தான்..கழண்டுக் கொண்டுள்ளார்கள்..அவர்கள் விளம்பரப் பிரியர்கள் என்ற எண்ணத்தை இது தோற்றுவிக்கிறது.அதற்கு இ.வா.,க்கள் நாமதானா கிடைத்தோம்.

அவர்கள் மீது நான் வைத்திருந்த மதிப்பும்..மரியாதையும் சென்றுவிட்டது.

நாகரிகம் கருதி..அவர்கள் பெயரை நான் குறிப்பிடவில்லை..இப்பதிவு கண்டதும்..மீண்டும் இணைவார்கள் என்றால்..அவர்கள் பெயரை நான் டெலிட் செய்து விடுவேன்..

இது உங்களுக்கும் நடந்திருக்குமேயானால்..தமிழ்மணம்,தமிழிஷ் இரண்டிலும் ஓட்டளியுங்கள்

Wednesday, September 16, 2009

அ..முதல் ஃ வரை...தொடர் பதிவு

1. A - available/single? Not available & not single - கல்யாணமாலை மோகனுக்கு என்னிடம் வேலை இல்லை

2B-.Best friend - இதைப்படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் என்று சொல்ல விருப்பம்

3.C- Cake or Pie- பையில் பேக் செய்து கொடுக்கப்படும் கேக் :-)))

4.D - Drink of Choice - H2 O

5.E- Essential item you Use every day- Blade

6.F-favorate color- நிற பேதம் இல்லை

7.G-gummy bears or worms - அப்படியென்றால்?

8.Home Town - திருவையாறு (தஞ்சை)

9.I-Indulgence -பயணம்

10.J- january/february -இரண்டுமே இல்லை..இரண்டிலும் வரி இருப்பதால்

11.K-Kids and their Names- ஒரே மகள்..அவள் பெயர் சித்திரத்தில் உண்டு..ஓவியத்தில் இல்லை

12.L-Life is incomplete with out- any achivement

13.Marriage Date- ஆசிரியர் தினம்

14.N - Number of sibilings- 6(2+4)

15.O-Orange or Apples- மருத்துவரை தூரத்தே துரத்துவது

16.P- Phobias/fears- அச்சம் என்பது மடமையடா

17.Q-Quote for today - சமையல் மோசமானால் ஒரு நாள் நஷ்டம்
அறுவடை மோசமானால் ஓராண்டு நஷ்டம்
கல்வி மோசமானால் வாழ்நாள் முழுதும் நஷ்டம்

18.R-Reason to Smile- நல்ல பதிவகளை படிக்கவே ..நம்ம கடையிலே கூட்டம் வராது..இதையெல்லாம் யார் வந்து படிக்கப் போறாங்க என்ற எண்ணம்

19.S-Season-பேருந்து என்றால்..மாத சீசன்தான்.புகைவண்டி எனில் குவார்டெர்லி சீசன் சீப். :-))))

20.T-Tag4 People- வால்பையன், குடுகுடுப்பை, வெங்கட், மணிகண்டன்

21.U-Unknown fact about me- Unknown

22.V-Vegetable you won't Like- (உங்களுக்கு பிடிக்காதது எனக்கு எப்படி தெரியும்? :-))) ) காலிஃப்ளவர்

23.W-worst Habit - தன்னையே கொல்லும் ...

24.X- Xrays you had - Blue ray சரி ,அது என்ன X ray அப்படி ஏதாவது வந்திருக்கா?

25.Y-Your favorate Food- சைவ உணவு எதுவாயினும் ஓகே

26.Z-Zodiac sign- கும்பம்

அன்புக்குரியவர்கள் - என்பும் உடையர் பிறர்க்கு

ஆசைக்குரியவர்- அவதிப்படுவர்

இலவசமாய் கிடைப்பது - கலைஞரிடம் இருக்கிறது அப்பட்டியல்

ஈதலில் சிறந்தது- கல்வி கற்பித்தல்

உலகத்தில் பயப்படுவது- பிரபல பதிவர்கள் கண்டு (என்று என்னை திட்டப்போகிறார்களோ என்று)

ஊமை கண்ட கனவு - சொல்லத்தெரிவதில்லை

எப்போதும் உடன் இருப்பது- நிழல்

ஏன் இந்த பதிவு-ஸ்டார்ஜனும்,கோவியும் இழுத்து விட்டதால்

ஐஸ்வர்யத்தில் சிறந்தது- செவிச்செல்வம்

ஒரு ரகசியம்- கிட்ட வாங்க சொல்றேன்

ஓசையில் பிடித்தது- முரசின் ஒலி

ஔ வை மொழி ஒன்று- வரப்புயர

அஃறிணையில் பிடித்தது- ஃ

Friday, July 10, 2009

ஏன் இப்படி...?

பூமி வெப்பமயமாகிக் கொண்டிருக்கிறது...

பூமியில் வாழும் நாமும் அப்படி ஆகிக் கொண்டிருக்கிறோமா..?

ஆமாம்..என்கிறது இணைய தளம்..

எவ்வளவு சூடு பறக்கும் பதிவுகள்.ஒருவர் மீது ஒருவர் சேற்றை வீசிக் கொண்டிருப்பது ஏன்? தனிப்பட்ட முறையில் பேசுவதற்குக் கூட இப்போது பயமாய் இருக்கிறது.

நம்மிடம் புரிதல் இல்லை என்பதையே இது காட்டுகிறது.

சமிப காலங்களில் பாருங்கள்..சாரு,பைத்தியக்காரன்,லக்கிலுக் பதிவுகள்..நாகர்ஜுனிடம்..பைத்தியக்காரன் பகிரங்க மன்னிப்பு.

பரிசல் பதிவில்..அதிஷா ஏதோ பின்னூட்டமிட..மணிகண்டன் அதற்கு பதில் சொல்ல..பரிசல் பகிரங்க மன்னிப்பு.

இப்போது..

நர்சிம்,தீபா..பதிவுகள்.

பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்..

உங்கள் தளத்தில் நீங்கள் உங்கள் கருத்துகளை பதிவிடுவதில் தவறில்லை.

ஆனால்..அதற்குமுன்..இது தனிப்பட்ட முறையில்..யாரையாவது புண்படுத்துமா? என யோசியுங்கள்...யோசிக்காமல் எழுதிவிட்டு..பின் மன்னிப்பு என்பதில் என்ன லாபம்

வார்த்தைகளை கொட்டி விட்டால்..அள்ள முடியாது..

வரும் நாட்களில்...

நகைச்சுவை என்றாலும்..அதனால் பிறர் மனம் துன்படும் என்றால்..அப்பதிவு வேண்டாமே....

மறப்போம்...மன்னிப்போம்..

ப்ளீஸ்...

Sunday, June 7, 2009

தமிழ்மணமும்..நெகடிவ் ஓட்டுமுறையும்...

நான் இவ்வளவு நாட்கள்..இந்த ஓட்டுக்களைப் பற்றிக் கவலைப் பட்டதில்லை.

ஆனால்..சமிபத்தில்..எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது..என்னுடைய பதிவு ஒன்று.

அதற்கு தேவையே இல்லாமல் ஒரு நெகடிவ் ஓட்டு விழுந்திருந்தது..பிறகுதான் இதில் நான் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்..குறிப்பிட்ட தலைவரைப் பற்றி நான் எழுதினால்..அனேகமாக எல்லோருமே
தம்ப்ஸ் டௌன் தான்..நான் நிறைய அத்தலைவரைப் பாராட்டி பதிவு போடுவதால்...என் பதிவு என்றாலே..அதைப் படித்தும் பார்க்காது..குறிப்பிட்ட சிலர் ..நெகடிவ் ஓட்டு போடுவதாக எனக்கு ஐயம்.

நெகடிவ் ஓட்டு என்பதே..தவறானது என்பது என் எண்ணம்..ஒரு பதிவை பாராட்டி வரும் பதிவை மட்டுமே தமிழ் மணம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்..அது இயலாநிலை எனில்..நெகடிவ் ஓட்டிற்கு..ஏற்கனவே விழுந்த பாசிடிவ் ஓட்டிலிருந்து ஒன்றை கழிப்பதையாவது நிறுத்த வேண்டும்.

ஏனெனில்..பாராட்டுவோர் ஒட்டின் மதிப்பு..ஒன்று எனில்..எதிர்ப்பவர்களுக்கு அது இரட்டிப்பாய் விடுகிறது அல்லவா?

பாராட்டி எவ்வளவு...எதிர்த்து எவ்வளவு என்று பார்ப்பதே சரி என கொள்ள வேண்டும்.

நெகடிவ் ஓட் பார்ப்பதற்கு..இது..என்ன மெடிகல் நுழைவு தேர்வா?

Sunday, May 31, 2009

மீண்டும் ஒரு தொடர் பதிவு..

நண்பர் முரளிக்கண்ணன் என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார்.அவருக்கு நன்றி..இனி கேள்விகளும்..பதில்களும்..

1.உங்களுக்கு ஏன் இப்பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
எனக்கு என்ன..ஆரியபடைக் கடந்த நெடுஞ்செழியன்..அப்படி..இப்படின்னு கொடுத்த பெயரா..இது..என் பெற்றோர் வைத்தது..லக்கி மாதிரி பெற்றோராய் இருந்திருந்தால்..மாற்றியிருப்பேன்.

2.கடைசியாக அழுதது எப்போது..?
தினமும் அழுகிறேன்..யூ டியூபில்..இலங்கைதமிழர் துயர் பற்றிய வீடியோ கிளிப்பிங்கைப் பார்க்கும் போது என்னை அறியாது கண்களில் கண்ணீர் கொப்பளிக்கிறது.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?
நான் எழுதியதை..நானே படிக்கத் தடுமாறும்போது..என் கையெழுத்தை வெறுப்பேன்.

4.பிடித்த மதிய உணவு..
நான் கொஞ்சம் சாப்பாட்டுபிரியன்.விஜிடேரியன் உணவு எதுவானாலும்..மதிய உணவை ஒரு வெட்டு வெட்டிடுவேன்.

5.நீங்கள் வேறுயாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
ஒருவரைப் பார்த்ததுமே..தக்கார்..தகவிலர் என்பது தெரிந்துவிடும்.

6.கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
வீட்டில்..பாத் ரூமில்..ஆனந்தமாக ஷவரில் குளிக்கப் பிடிக்கும்..

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதைக் கவனிப்பீர்கள்..
அவர்கள் நம்முடன் பழகும் முறையை

8.உங்க கிட்ட உங்களுக்கு..பிடித்த விஷயம் என்ன..பிடிக்காத விஷயம் என்ன?
சிலர் செய்யும் கேடுகளை காலவரையின்றி பொறுத்துக் கொண்டிருப்பேன்..திடீரென ஒரு நாள் கோபம் வந்து இவ்வளவு நாட்கள் பொறுத்ததை அழித்திடுவேன்..இந்த இரண்டு குணங்களுமே எனக்குப் பிடிக்காது.

9.உங்க சரிபாதி கிட்ட உங்களுக்கு பிடித்த,பிடிக்காத விஷயம்..
எந்த ஒரு வேலையையும்..தள்ளிப்போடாமல் உடனே செய்யவேண்டும் அவர்களுக்கு.இதில் நான் சோம்பேறி.இந்த ஒன்றுதான்..இரண்டுக்கும் பதில்.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்கறதுக்கு வருந்துகிறீர்கள்?
இதை இப்போ படிக்கற உங்கக் கூட இப்ப இருக்க முடியலேன்னு வருத்தம்.

11.இதை எழுதும்போது என்ன வர்ண உடை அணிந்துள்ளீர்கள்?
சிகப்பு டீ ஷர்ட்,கட்டம் போட்ட லுங்கி..

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறீங்க..
ஒரு சமயத்தில் என்னால் ஒரு காரியத்தில்தான் ஈடுபாடோடு செயல்பட முடியும்.

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கறுப்பு..(கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு)

14.பிடித்த மணம்..
மல்லிகை மணம்...

15.நீங்க அழைக்கப்படும் பதிவரிடம்..உங்களுக்கு பிடித்த விஷயம்..அவரை அழைக்கக் காரணம்..
கோவி.கண்ணன் - எந்த ஒரு விஷயத்தையும்..நமக்குத் தோன்றாத புதுக் கோணத்தில் யோசிப்பவர்..பழக இனியவர்.
அக்னிப்பார்வை- வெள்ளை உள்ளம் படைத்தவர்..எதிர்ப்பார்ப்புக்குமேல் விஷயம் தெரிந்தவர்.
அத்திரி-இவரை சந்தித்தது இல்லை..ஆனால்..எனக்கு வந்த ஆரம்பகாலம் முதல் ஃபாலோயர்.இவரை சந்திக்க ஆசை உண்டு.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்கு பிடித்த பதிவு..
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., இடங்கள் பற்றிய பதிவு. (சிறுகிராம..கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாக்கனியா) http://muralikkannan.blogspot.com/2009/05/blog-post_10.html

17.பிடித்த விளையாட்டு...
கிரிக்கெட் தான்..வேறு என்ன..

18.கண்ணாடி அணிபவரா?
அணிபவன்...

19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்...
யதார்த்தமான படங்கள்

20.கடைசியாக பார்த்த படம்..
S.M.S.,

21.பிடித்த பருவ காலம்...
என் இளமைப் பருவ காலம்.
.
22.இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்
புதுமைப்பித்தன் கதைகள் தொகுப்பு

23.உங்க டெஸ்க் டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்//
நான் அதை செய்வதில்லை...என்னில் சரிபாதி அவ்வப்போது மாற்றிவிடுவார்.

24.உங்களுக்கு பிடித்த சத்தம்...பிடிக்காத சத்தம்...
எங்கேனும் ஊருக்கு போய் திரும்புகையில்...என் பெட்டிகளை சுமக்கும் போர்ட்டர்களுக்கு கொடுக்கும் சத்தம் பிடிக்கும்..
மீட்டருக்கு மேல் ஆட்டோக்காரருக்கு கொடுக்கும் சத்தம் பிடிக்காது.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்ச தொலைவு
அமெரிக்கா...(இப்போதும் அக்டோபர் வரை அமெரிக்க வாசம்தான்)

26.உங்களுக்கு ஏதேனும் தனித்திறமை இருக்கிறதா?
திறமை என்றால் என்ன?

27.உங்களால் எற்றுக் கொள்ளமுடியா ஒரு விஷயம்..
எந்த ஒருவரையும் அறிவாளி என்று சொல்வதை

28.உங்களுக்குள் இருக்கும் சாத்தான்..
தட்டச்சில் டைப் அடிக்கச் சொல்லிக்கொண்டிருக்கிறது.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலாத்தலம்..
அடிக்கடி பெங்களூர் செல்ல விருப்பம்

30.எப்படி இருக்கணும்னு ஆசை..
எப்போதும் சிரித்துக்கொண்டிருக்கும் மனிதனாய்..

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்...
அப்படி ஏதேனும் இருக்கிறதா?

32.வாழ்வு பற்றி ஒருவரி சொல்லுங்க..
எவ்வளவு காலம் வாழ்ந்தோம் என்பதைவிட..எப்படி வாழ்ந்தோம் என நமக்குப் பின் பிறர் பேச வேண்டும்.

Thursday, May 7, 2009

பதிவர்களின் மனிதநேயம்...

பதிவர்கள் பெரும்பாலும் ஒருவருக்கு ஒருவர் பதிவுகள் மூலமே அறியப்படுபவர்கள்..ஆனாலும்..ஒரு பதிவருக்கு ஏதேனும் உடல் நலம் சரியில்லையெனில்..பதை பதைப்போர் எவ்வளவு பேர்?
நமக்குள் இந்த அன்னியோனியம் எப்படி வந்தது?

ஒருவருக்கு உடல்நிலை சரியில்லையெனில்..அவருக்காக பிரார்த்தனை செய்பவர்கள் எவ்வளவு பேர்?

கலைஞர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக சேர்ந்து..சிகிச்சை முடிந்து வெளியேறியதும்...மருத்துவ மனையில்..தினசரி நடந்த நிகழ்ச்சிகளை எழுதினார்..அதை சற்று கிண்டல் செய்யும் விதத்தில்..எனக்கு..தலைவலி என்றும்...மருத்துவமனையில் அனுமதி...என ஒரு பதிவிட்டேன்..

உடன்...அந்நிகழ்ச்சியை உண்மையாக நினைத்து..கோவி சிங்கையிலிருந்து தொலைபேசி நலம் விசாரித்தார்.

பதிவர் இயற்கையோ...எதோ ..இதோட போயிற்றே..என என் உடல்நிலை குறித்து கவலைப்பட்டார்.எவ்வளவு வெள்ளந்தி மனம் படைத்தவர் இவர். மனம் கனத்தது..

தினசரி குறைந்தது இரு பதிவாவது இடும் நான்..கடந்த சிலநாட்களாக எப் பதிவும் இடவில்லை..உடன் மணிகண்டன்..எங்கே போயிட்டீங்க? என்கிறார்.

எனக்கும்...மென் துறை யில் வேலை புரியும் பதிவர்கள்..தொடர்ந்து சில நாட்கள் பதிவிடவில்லையெனில்..'ஐயோ..அவர்களுக்கு வேலையில் பிரச்னை ஏற்பட்டிருக்குமோ? என கவலை ஏற்படுகிறது..

பதிவுகள் இடுவதில் லாபம்..இருக்கிறதா என எண்ணுபவர்களுக்கு...இப்படிப்பட்ட நட்பு கிடைக்கிறதே...அது போதாதா?

நட்பைவிட சிறந்தது என்ன இருக்க முடியும்?

(யூத்ஃபுல் விகடனுக்கு நன்றி)

Thursday, April 16, 2009

ராகுல் திராவிடும்...காம்பீரும்...மற்றும் நானும்

இந்திய கிரிக்கட்டில் சுவர் என்று வர்ணிக்கப்பட்டவர் ராகுல் திராவிட்..ரன் எடுக்காமலேயே..களத்தில் அதிக பந்துகளையும் சந்தித்து..மேட்சை டிரா செய்துள்ளார்.

இதற்கு முன்னால் ஓட்டங்கள் எடுப்பதில் ஆமையுடன் ஒப்பிடப்பட்டவர் ரவிசாஸ்திரி..

ஒருநாள் போட்டியில்37 ஓட்டங்களே எடுக்க அதிக பந்துகளை சந்தித்த சாதனையாளர் கவாஸ்கர்.

சமீபத்தில் நியூஸிலாந்த்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில்...இரண்டாவது மேட்சில்...காம்பீர்..நின்று நெடு நேரம் களத்தில் நின்றதால்...அந்த மேட்ச் டிரா ஆனது.காம்பீரும் திராவிடுடன் ஒப்பிடப்பட்டு இரண்டாவது சுவர் என அழைக்கப்பட்டார்.

ஆமாம்...இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்கிறீர்களா...கிட்டத்தட்ட 10 மாதங்களாக தமிழ்மணத்தில் பதிவிட்டு வரும் எனக்கு...இன்று 50 ஆவது ஃபாலோயர் வந்திருக்கிறார்.

இது...திராவிடின் சாதனையையும் முறியடிக்கும் சாதனைதானே..

(இப்பதிவிடும்போது 50 பேர்..சொல்லமுடியாது...இந்நேரம் ஓரிருவர் கழட்டிக்கோண்டிருந்தாலும் கழட்டிக்கொண்டிருப்பர்.)

Tuesday, April 7, 2009

ஜெ.ஜெ. பிக்சர்ஸ் பெருமையுடன் வழங்கும் "இம்சை அரசி"

நண்பர் ஒருவர் கூகுள் சர்ச்சில்..ஏதோ தேடும்போது..'இம்சை அரசி" பற்றி ஒரு குறிப்பு இருந்ததையும்..அதற்கு திரைக்கதையில் என் பெயர் இருப்பதையும் பற்றியும் கேட்டார்.அப்போதுதான் இந்த செய்தி பார்த்தேன்.இதை இதை வன்மையாக கண்டிக்கிறேன்.இதில் டோண்டு பெயரும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Date: Wednesday, 03 Dec 2008 09:30
தயாரிப்பு: செல்வி ஜெயலலிதா
கூட்டு தயாரிப்பு: தோழி சசிகலா
பட்ஜெட்: எந்திரன் 100 கோடி எல்லாம் ஒரு பட்ஜெட்டா இந்த படத்தில் ஒரு கல்யாண சீனுக்கே பல நூறு கோடிகள் செலவழித்துள்ளார்கள்
கதை: உலகமகா மேதாவி 'சோ'ராமசாமி
திரைக்கதை: மூத்த பதிவர் T.V.Radhakrishnan
இயக்கம்: செல்வி ஜெயலலிதா
வசனம்: வைகோ
மொழிபெயர்ப்பு: டோண்டு ராகவையங்கார்
பாடலகள்: 'மானாட மார்பாட' ஞாநி
வில்லன்: சுதாகரன்
வில்லி: சந்திரலேகா
அறிமுக வில்லன்: சங்கராச்சாரியார்
காமெடி: சுப்பிரமணிய சுவாமி
சண்டை பயிற்சி: வால்டர் தேவாரம்
உதவி இயக்குநர்கள்:
மதுசூதனன் ராமானுஜம்
வீ தெ பீப்பிள்
மாயவரத்து 'ஜெ' அடிவருடி மற்றும் பல பதிவுலக மேதாவிகள்

கதைச் சுருக்கம்: இது ஒரு முழு நீள நகைச்சுவை திரைப்படம். 'சோ'ராமசாமியும் டீமில் இருப்பதால் காமெடிக்கு பஞ்சமே கிடையாது. மதமாற்ற தடைச் சட்டம் பின்னர் வாபஸ், அரசு ஊழியர்கள் பணி நீக்கம் பின்னர் வாபஸ் போன்று ரசிகர்களின் வயிற்றை பதம் பார்க்கும் நகைச்சுவை காட்சிகள் ஏராளம்

பாடல் காட்சிகள்களுக்கு வெளிநாடு செல்லாமல் உள்ளூர் கொடாநாட்டிலேயே படம் பிடித்து இருப்பது மிகப் பெரிய ஆறுதல்

கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் ஒரு பேரூந்தை தீ வைப்பது போன்ற மயிர் கூசச் செய்யும் காட்சிகளும் உண்டு

பின் குறிப்பு: சிங்கப்பூர் விநியோகஸ்தருக்கு ஒரு நல்ல ஆளாக தேடிக் கொண்டு இருப்பதாக கேள்வி. ஆர்வம் இருப்பவர்கள் விண்ணப்பிக்கவும்

(உடன்பிறப்பு (noreply@blogger.com)" Tags: "அரசியல்")

Sunday, April 5, 2009

விருது பெறும் பதிவர் அக்னிபார்வைக்கு வாழ்த்துகள்

தமிழ் ஸ்டுடியோ.காம் வழங்கும் ஏப்ரல் மாத சிறந்த வலைப்பதிவர் விருது
நாள்: சனிக்கிழமை (11-04-09)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: காலை 10 முதல் இரவு 7 வரை

10 AM - 2 PM - உலகப் படங்கள் / உலகக் குறும்படங்கள் / ஆவணப்படங்கள் திரையிடல்

3 PM - 7 PM - குறும்பட வட்டம்

முதல் பகுதி: (3 PM-4 PM) - இலக்கியமும் குறும்படங்களும்

இலக்கியம் பகுதியல் இம்மாதம் "புன்னகை உலகம்" சிற்றிதழின் ஆசிரியர் திரு. "சுசி திருஞானம்" அவர்கள் பங்குபெற்று இலக்கியமும் குறும்படங்களும் என்கிற தலைப்பில் உரையாற்றுகிறார். இவர் "வெற்றியின் அறிவியல்", "நேர நிர்வாகம்", "உனக்குள் ஒரு மேதை", போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார். "விஜய்" தொலைக்காட்சியின் செய்திப் பிரிவில் இன்புட் எடிட்டர் ஆக இருந்துள்ளார். மேலும் சன் நியூஸ் தொலைக்காட்சியின் சேனல் ஹெட் ஆகவும் இருந்துள்ளார். இவர் இம்மாதம் இலக்கியப் பிரிவில் மிகச்சிறந்த சமூதாய தாக்கத்துடன் வெளிவந்த ஒரு சிறுகதை அல்லது நாவலின் ஒரு பகுதி பற்றி நம்மிடையே விரிவாக பேசியும், மேலும் அந்த சிறுகதையை எப்படி படமாக்கலாம் என்று தன்னுடைய விரிவான ஆலோசனையும் வழங்க உள்ளார்.

மேலும் சிறந்த பதிவருக்கான விருது வழங்கும் விழாவும் நடைபெறும். இம்மாதம் சிறந்த பதிவருக்கான விருது பெறுபவர் திரு. வினோத் அவர்கள். இவரது வலைப்பூ.http://agnipaarvai.blogspot.com/

தமிழ் ஸ்டுடியோ.காம் சிறந்த பதிவருக்கான விருது வழங்கும் விழா மாதந்தோறும் சிறந்தப் பதிவர் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றது. விருது வழங்கப்படும் மாதத்திற்கு முந்தைய மாதத்தில் பதிவர் எழுதிய கட்டுரைகள், பதிவுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

Friday, November 7, 2008

நான் படித்த சில அருமையான வரிகள்..

1.உங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்த பயனும் இல்லை.

2.உங்க கோபம்..எல்லோரையும் ..உங்க கிட்டே இருந்து அந்நியப்படுத்தி விடும்.

3.எண்ணங்கள் தான்.. வாழ்க்கை..நம் எண்ணங்கள் தான்..நம் குணத்தை..நம் வாழ்வை தீர்மானிக்கின்றன.

4.தீபத்தின் ஒளியில்..திருக்குறளும் படிக்கலாம்...ஒரு ஊரையும் கொளுத்தலாம்.

5.வளைஞ்ச மூங்கில் பல்லக்கு ஆகும்..வளையா மூங்கில் பாடையாகும்.

6.நமக்கு தேவையில்லாததை வாங்க ஆரம்பிச்சா..நம்ம கிட்டே இருக்கிற தேவையானதை விற்க வேண்டி இருக்கும்

7.வரவுக்கு ஏத்த செலவு இருக்கணுமே தவிர..செலவுக்கு ஏத்த வரவுன்னு அலையக் கூடாது.

8.உங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பாருங்கள்..தேவைகளை தெரிந்துக் கொள்ளுங்கள்..வாய்ப்புகளை கண்டு பிடியுங்கள்..அவற்றை வெற்றியாக்கிடுங்கள்.

9.லட்சியத்தை மறந்துட்டு..மனுஷ உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.

10.எல்லாம் உனக்குத் தெரியும் என்ற இறுமாப்பு வேண்டாம்...ஆனான பட்ட ஔவைக்கே சுட்டப்பழத்தை சொன்னவன் யாதவ சிறுவன்.

இவற்றை எழுதியவர்களுக்கு நன்றி...

Monday, September 15, 2008

சென்னையைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்

சென்னையில் தான் நான் பல வருஷங்களாக வசித்து வருகிறேன்., இந்நகரில் பஸ் போக்குவரத்து அதிகம்.முன்பெல்லாம் சிவப்பு நிறத்தில் மட்டுமே பஸ்கள் இருக்கும். இப்போது பல வண்ணங்களில் பேருந்து (இப்படித்தான் சொல்ல வேண்டும்...பஸ்..என சொல்லக்கூடாது)கள் ஓடுகின்றன.சாதாரண கட்டணமுள்ள பேருந்து,விரைவுப் பேருந்து.சொகுசுப் பேருந்து.குளிர் சாதன பேருந்து என பல ஓடுகின்றன.ஒவ்வொன்றிற்கும் ஒரு மாதிரி கட்டணம்..விரைவுப் பேருந்து வேகமாகச் செல்லும் என எண்ணி சிலர் ஏறுவர்..கடைசியில் ஏமாறுவர்..ஏனெனில் அந்த பேருந்துகளும் எல்லா நிறுத்தத்திலும் நிற்கும்.பேருந்தில் 25 பயணிகள் மட்டுமே நிற்கலாம்..ஆனால் 2க்கு முன்னால் 1செர்த்து 125 பயணிகள் கூட இருப்பார்கள்.எந்த வாகன ஒட்டும் சட்டமும் இதை கண்டுக்கொள்ளாது.
சரி..ரயிலில் போகலாம் என்றால்..நீங்கள் மாதாந்திர சீசன் அட்டை வைத்திருந்தால்..பிழைத்தீர்கள்..இல்லவிட்டால்..நீங்கள் நிலயத்தில் டிக்கட் வாங்க நிற்கும் நேரத்தில்...நடந்தே செல்லும் இடத்துக்கு சென்று விடலாம்.சென்னை கடற்கரை நிலையத்திலிருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில் உண்டு.உடனே ரயில் பறக்குமா என கேட்கக்கூடாது.அந்த ரயில் செல்லும் பாதை
நிலமட்டத்திலிருந்து உயரத்தில் இருப்பதால் இந்த பெயர்.ஊருக்குள்ளே ஓடும் ரயில் இது என்று சொல்லலாம்.
இது எல்லாம் வேண்டாம்...ஆட்டோ வில் செல்லலாம் என்று நீங்கள் நினைத்தால் அதற்கும் வசதி உண்டு.ஆட்டோவிற்கு மீட்டர் உண்டு..ஆனால் டிரைவர்கள் மீட்டர் போட மாட்டார்கள்.வாய்க்கு வந்த கட்டணம் கேட்பார்கள்..மீட்டர் போட்டால் தான் வருவேன்..என்று புத்திசாலியாக சொல்லலாம்...அப்படி மீட்டர் போட்டு பயணம் செய்தால் ஆட்டோ டிரைவர்..முதலில் கேட்ட தொகையை வட மீட்டர் இரு பங்கு காட்டும்.(மீட்டர் சூடு போட்டதாக இருக்கும்)..நீங்கள் அதைக் கொடுத்துவிட்டு...சூடுபட்ட பூனையாய்..அடுத்த நாள் முதல் ஆட்டோவைக் கண்டால் காத தூரம் ஓடுவீர்கள்.இதையும் போலிஸ் கண்டுக்கொள்வதில்லை...பல ஆட்டோக்கள் போலிசாருடையது என்கிறார்கள்.அந்த காரணமாயும் இருக்கலாம்.
சென்னையில் தங்க சொந்தமாக ஒரு இடம் இருந்தால் தப்பித்தீர்கள்.இல்லாவிட்டால்..நீங்கள் வாங்கும் சம்பளத்தில் வீட்டு வாடகை பாதியை விழுங்கி விடும்.அபார்ட்மெண்டில் வசித்தால் மெயிண்டனேன்ஸ் என 500ஓ 1000மோ அதகப்படியாக மினி ரெண்ட் போலஆகிவிடும்.வாடகை பாதி.போக்குவரத்து செலவு கால் பகுதி..போக..மீதி கால் பகுதியில் தான் உணவு,உடை,குழந்தைகள் பள்ளிச்செலவு.மருத்துவ ச்செலவு.பொழுதுபோக்கு செலவு எல்லாம்.சிதம்பரத்தின் நாட்டு பண வீக்க கவலையை விட..நமக்கு நம்ம வீட்டு பணவீக்கம் கவலையைத் தரும்.
முக்கியமாக சொல்ல மறந்தது...சம்பளத்தன்று...பேருந்தில் வந்தால் ..பிக்பாக்கட்டுக்களால் முழு சம்பளத்தையும் இழக்க நேரிடும்.பிறகு கடன்தான் மாத செலவுக்கு.
மறந்து போன மற்றவை அடுத்த பதிவில்

Tuesday, September 2, 2008

சின்னத்திரை நடிகர்களை சந்திப்பது குறித்து...ஒரு தன்னிலை விளக்கம்...

சின்னத்திரை நடிகர்களை சந்தித்தது குறித்து கோவி சார் ஒரு பதிவு போட்டிருந்தார்.அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் போட்டிருந்தார்.அதற்கு பின்னூட்டமாக நான் 'கோவி நீங்களுமா?' என பின்னூட்டம் இட்டிருந்தேன்.சமீபத்தில் ஒரு கேள்விக்கு பதில் சொன்ன கோவி 'சின்னத்திரை நடிகர்களை சந்தித்தது குறித்து எழுதியபோது "நீங்க எல்லாம் இதை பெரிய விஷயமாக எழுதுகிறீர்களே"என உயர்வை கற்பித்து ஒரு கேள்வி இட்டிருந்தனர்' என்றிருக்கிறார்.
அது என்னைத்தான் என்பதால்..இது குறித்து அவருக்கு பதில் எழுத வேண்டியது என் கடமை ஆகிறது.
கோவி சார்..நானும் ஒரு நாடக எழுத்தாளன்,நாடக இயக்குநர்,நாடக நடிகன் தான். என்னுடைய 4 கதைகள் பொதிகையில் ஒலி/ஒளி பரப்பப்பட்டிருக்கிறது.காவிரி தண்ணீர் பிரச்னை பற்றி நான் எழுதிய 'சொல்லக் கொதிக்குது நெஞ்சம்'2006ல் சிறந்த நாடக விருதை பெற்றது நாடகவிழாவில்.
இதையெல்லாம் ஏன் சொல்கிறேன்..என்றால்..நானும் கலைஞர்களை மதிப்பவன்தான்..ஏனெனில் நானும் ஒரு கலைஞன்.
ஆனால் கலைஞர்கள் இதை வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றக்கூடாது.
ஒரு உதாரணம்
சமீபத்தில் சின்னத்திரையில் பிரபல நடிகர் ஒருவர்..பழைய நாடகம் ஒன்றை மீண்டும் போட்டார் திடீரென.
அதற்கு சொல்லப்பட்ட காரணம்..இந்த நாடகத்தை..சிங்கப்பூர்,மலேசியா,துபாய் ஆகிய இடங்களில் போட்டால்...சில்லறை தேற்றலாம் என்பதுதான்...
இப்போது சொல்லுங்கள்..இவர்கள் உண்மை கலைஞர்களா? அல்லது மக்களை ஏமாற்றுபவர்களா?
கலைஞ்ர்களைப் பொறுத்தவரை...பணம் சம்பாதிக்கும் இடங்களாகவே..சிங்கையும்,மலேசியாவும்,துபாயும் உள்ளன.
அங்குவாழ் மக்கள்..தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை..சக்திக்கு மீறி கொடுத்து டிக்கட் வாங்குகின்றனர்.
இதைத்தான் சொல்ல ஆசைப்பட்டேனே தவிர..உயர்வு..தாழ்வு என்ற பேச்சுக்கே அதில் இடமில்லை.
இது என் தன்னிலை விளக்கமாகக்கூட கொள்ளலாம்.