சின்னத்திரை நடிகர்களை சந்தித்தது குறித்து கோவி சார் ஒரு பதிவு போட்டிருந்தார்.அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் போட்டிருந்தார்.அதற்கு பின்னூட்டமாக நான் 'கோவி நீங்களுமா?' என பின்னூட்டம் இட்டிருந்தேன்.சமீபத்தில் ஒரு கேள்விக்கு பதில் சொன்ன கோவி 'சின்னத்திரை நடிகர்களை சந்தித்தது குறித்து எழுதியபோது "நீங்க எல்லாம் இதை பெரிய விஷயமாக எழுதுகிறீர்களே"என உயர்வை கற்பித்து ஒரு கேள்வி இட்டிருந்தனர்' என்றிருக்கிறார்.
அது என்னைத்தான் என்பதால்..இது குறித்து அவருக்கு பதில் எழுத வேண்டியது என் கடமை ஆகிறது.
கோவி சார்..நானும் ஒரு நாடக எழுத்தாளன்,நாடக இயக்குநர்,நாடக நடிகன் தான். என்னுடைய 4 கதைகள் பொதிகையில் ஒலி/ஒளி பரப்பப்பட்டிருக்கிறது.காவிரி தண்ணீர் பிரச்னை பற்றி நான் எழுதிய 'சொல்லக் கொதிக்குது நெஞ்சம்'2006ல் சிறந்த நாடக விருதை பெற்றது நாடகவிழாவில்.
இதையெல்லாம் ஏன் சொல்கிறேன்..என்றால்..நானும் கலைஞர்களை மதிப்பவன்தான்..ஏனெனில் நானும் ஒரு கலைஞன்.
ஆனால் கலைஞர்கள் இதை வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றக்கூடாது.
ஒரு உதாரணம்
சமீபத்தில் சின்னத்திரையில் பிரபல நடிகர் ஒருவர்..பழைய நாடகம் ஒன்றை மீண்டும் போட்டார் திடீரென.
அதற்கு சொல்லப்பட்ட காரணம்..இந்த நாடகத்தை..சிங்கப்பூர்,மலேசியா,துபாய் ஆகிய இடங்களில் போட்டால்...சில்லறை தேற்றலாம் என்பதுதான்...
இப்போது சொல்லுங்கள்..இவர்கள் உண்மை கலைஞர்களா? அல்லது மக்களை ஏமாற்றுபவர்களா?
கலைஞ்ர்களைப் பொறுத்தவரை...பணம் சம்பாதிக்கும் இடங்களாகவே..சிங்கையும்,மலேசியாவும்,துபாயும் உள்ளன.
அங்குவாழ் மக்கள்..தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை..சக்திக்கு மீறி கொடுத்து டிக்கட் வாங்குகின்றனர்.
இதைத்தான் சொல்ல ஆசைப்பட்டேனே தவிர..உயர்வு..தாழ்வு என்ற பேச்சுக்கே அதில் இடமில்லை.
இது என் தன்னிலை விளக்கமாகக்கூட கொள்ளலாம்.
19 comments:
me the first
சம்பந்தமில்லாமல் நான் மூக்கை நுழைப்பதற்கு மன்னிக்க!
பணம் சம்பாதிப்பதில் தப்பில்லை. தனது பழைய நாடகத்தை போட்டால் சில்லறை தேறும் என்று அந்த நடிகர் செய்தால், அதில் தவறென்ன? மற்றொருவர் நாடகத்தை தன்னுடையது என்று போட்டால் தான் தவறு. (தவிர, பழைய நாடகத்தை பெயர் மாற்றி, புது நாடகம் என்று விளம்பரம் செய்தாலும் தவறே, அது ஏமாற்று).
ஆனால், மக்கள் ஏன் இது போன்ற நாடகங்களை எல்லாம் பார்க்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. அடுத்து தமிழ் சினிமாக்காரர்கள் நடத்தும் கலை நிகழ்ச்சி. இதையெல்லாம் கூட காசு கொடுத்து பார்க்கிறார்கள். அது ஏன் என்பது எனக்கு இதுவரை புரியாத மர்மம்.
நானும் கலைஞர்களை மதிப்பவனே. டாக்டர்கள், வக்கீல்கள், நர்சுகள், ஆசிரியர்கள் போல கலைத்தொழில் செய்பவர்கள் மீதும் எனக்கு மதிப்புண்டு. ஆனால், "சிறப்பு" மதிப்பெல்லாம் இல்லை.
மீ த செகண்டு :0)
//இதைத்தான் சொல்ல ஆசைப்பட்டேனே தவிர..உயர்வு..தாழ்வு என்ற பேச்சுக்கே அதில் இடமில்லை.
இது என் தன்னிலை விளக்கமாகக்கூட கொள்ளலாம்.//
இராதகிருஷ்ணன் ஐயா,
நீங்கள் தவறாக பொருள் கொண்டதாகவே உணர்கிறேன்.
//'kanchana Radhakrishnan said...
கோவி நீங்களுமா?
1:42 AM, August 17, 2008
//
' என்றதில் நீங்கள் என் எழுத்தை உயர்வாக நினைத்து... அதாவது என்னைப் பற்றி உயர்வாக நினைத்து .... இப்படி எழுதுபவர் சின்னத்திரை நட்சத்திரம் குறித்து எழுதலாமா என்று ஆதங்கப்பட்டதை' ...என் மீது உயர்வு கற்பிப்பதாக சொன்னேன். உங்களைக் குறித்து அல்ல.
நீங்கள் உயர்ந்தவர் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை. தொடர்ந்து உங்களை எழுத்துக்களையும், நீங்கள் புகழ்பெற்ற நடிகர்களை வைத்து அந்த காலத்தில் நாடகம் போட்டதெல்லாம் பற்றி எழுதிய பதிவுகளை படித்து இருக்கிறேன் ஐயா.
மோகன் கந்தசாமிக்கு பதில் எழுதும் போது அப்படி என்னிடம் 'கோவி நீங்களுமா?' கேட்டது நீங்களா ? தருமி ஐயாவா ? என்று சரி பார்க்க சற்று சோம்பலாக இருந்ததால்....பெயர் குறிப்பிடாமல் எழுதி இருந்தேன். மற்றபடி குத்தலாக கேட்க வேண்டும் என்கிற நோக்கம் எதுவும் இல்லை.
உள்ளுணர்வால் எப்போதும் பெரியவர்களை மதிக்கிறேன்.
டாக்டர்கள், வக்கீல்கள், நர்சுகள், ஆசிரியர்கள் போல கலைத்தொழில் செய்பவர்கள் மீதும் எனக்கு மதிப்புண்டு.
*******எழுத்தாளர்கள், ஓவியர்கள், நடிகர்கள் போன்ற அறிவியல் விற்பன்னர்கள மதிக்காத அது சரி....நீரு எல்லாம் ஒரு மனுஷனா ? ******
// rapp said...
me the first//
வருகைக்கு நன்றி rapp
//பணம் சம்பாதிப்பதில் தப்பில்லை. தனது பழைய நாடகத்தை போட்டால் சில்லறை தேறும் என்று அந்த நடிகர் செய்தால், அதில் தவறென்ன?//
அதுசரி..அவர் பழைய நாடகத்தைப் போட்டதை தவறு என்று நான் சொல்லவில்லை.,சின்னத்திரையில் பிரபலமானதும்..நாடகமேடையை மறந்த அவர்..பணம் வேண்டும் என்றதும் நாடகம்..சிங்கப்பூர்..என்று சொல்வதைத்தான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
//அது சரி said...
மீ த செகண்டு :0)//
வருகைக்கு நன்றி அதுசரி
இராதகிருஷ்ணன் ஐயா,
நீங்கள் தவறாக பொருள் கொண்டதாகவே உணர்கிறேன்.//
உங்களைத் தவறாக நான் எண்னவில்லை..எண்ணவும் தோன்றாது..என்னை நீங்கள் தவறாக எண்ணக்கூடாது என்றுதான் அந்த பதிவு கோவிசார்
வருகைக்கு நன்றி அவனும் அவளும்
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்...
இவர்கள் உண்மை கலைஞர்களா? அல்லது மக்களை ஏமாற்றுபவர்களா?
கலைஞ்ர்களைப் பொறுத்தவரை...பணம் சம்பாதிக்கும் இடங்களாகவே..சிங்கையும்,மலேசியாவும்,துபாயும் உள்ளன.
அங்குவாழ் மக்கள்..தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை..சக்திக்கு மீறி கொடுத்து டிக்கட் வாங்குகின்றனர்.
இதைத்தான் சொல்ல ஆசைப்பட்டேனே தவிர..//
இராதகிருஷ்ணன் ஐயா,
உங்கள் கருத்தை ஒட்டியது தான் இந்த லிங்க் படிச்சு பாருங்க !
//சின்னத்திரை நடிகர்களை சந்தித்தது குறித்து கோவி சார் ஒரு பதிவு போட்டிருந்தார்.
//
கோவி சார் இல்லை, வெறும் கோவி தான் ! பெரியவங்க 'சார்' போடுவது எனக்கு ஏற்புடையது அல்ல. :) உங்கள் புகைப்படத்தைப் பார்த்தாலே எங்க உயர்நிலை பள்ளி ஆசிரியர் போல இர்க்கு, நீங்க என்னைப் போய் சார் போட்டு எழுதுவது நல்லா இல்லை !
இங்கே மேற்கண்ட பின்னூட்டத்தை இட்டுவிட்டு சென்று பார்த்தேன்...மேலே நான் குறிப்பிட்ட அந்த பதிவில் உங்கள் பின்னூட்டமும் இருக்கு !
:)
//சின்னப் பையன் said...
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்...//
நன்றி ச்சின்னப்பையன்
//கோவி சார் இல்லை, வெறும் கோவி தான் !//
பல விஷயங்களில் நம் எண்ணங்கள் ஒத்துப்போவதால்தான்..உங்கள் பதிவுகளும் எனக்குப் பிடிக்கும்...உங்களையும் பிடிக்கும் கோவி(சார் போடலே..பார்த்தீங்களா)
மீ தி 16 பதிவும் பின்னூட்டங்களும் படிச்சேன் என்னத்த சொல்ல!?!?
என்ன இருந்தாலும் கோவி.கண்ணன் அண்ணன் தீபா வெங்கட்டுக்கு அவ்ளோ பக்கத்துல நின்னு போட்டோ எடுத்துகிட்டது தப்பு அத ப்ளாக்ல போட்டு காதுல பொகை வர வெச்சது அதைவிட தப்பு
:)))))))))))))
//மங்களூர் சிவா said...
மீ தி 16 பதிவும் பின்னூட்டங்களும் படிச்சேன் என்னத்த சொல்ல!?!?//
எதையாவது சொல்ல உங்களுக்கு சொல்லியாத் தெரியணும் சிவா
//மங்களூர் சிவா said...
என்ன இருந்தாலும் கோவி.கண்ணன் அண்ணன் தீபா வெங்கட்டுக்கு அவ்ளோ பக்கத்துல நின்னு போட்டோ எடுத்துகிட்டது தப்பு அத ப்ளாக்ல போட்டு காதுல பொகை வர வெச்சது அதைவிட தப்பு
:)))))))))))))//
ஆஹா..சிவா நமக்கு ஆதரவா இருக்கார்னு நினைச்ச உடனேயே அடுத்த வரியிலே காலை வாரிட்டீங்களே
Post a Comment