Thursday, October 11, 2012

கொடிது..கொடிது..ஃபேஸ்புக் கொடிது...




இளமையில் வறுமை கொடிது... என்பார்கள்..

ஆனால்..இப்போது எல்லாவற்றையும் விட ஃபேஸ்புக் பழக்கம் கொடிது என ஒரு ஆய்வு அறிக்கை சொல்கிறதாம்.
 
சிகாகோ பல்கலைக்கழகத்தின் பூத் பிசினஸ் பள்ளி இதுதொடர்பாக ஒரு ஆய்வை நடத்தியது. அதில் பேஸ்புக், டிவிட்டர், பிளாக்பெர்ரி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தும் நபர்களை வைத்து ஆய்வு நடத்தினர். 7 நாட்கள் இந்த ஆய்வு நடந்ததாம்.
.
ஆன்லைன் மூலமாக நடந்த இந்த சர்வேயில் 250 பேர் கலந்து கொண்டனராம்.. அதில் செக்ஸ், சிகரெட் பழக்கத்தை விட மிக மோசமான முறையில் பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு மக்கள் அடிமையாகிக் கிடப்பது தெரிய வந்ததாம்.

செக்ஸ், சிகரெட்டை விட பேஸ்புக்கும், டிவிட்டரும்தான் அனைவரையும் அதிகம் தூண்டுகிறதாம். ஒரு நாளைக்கு சராசரியாக 7 முறையாவது பேஸ்புக், டிவிட்டர் பக்கம் போய் விடுகின்றனராம் அதற்கு அடிமையானவர்கள். மேலும் ஒரு நாளைக்கு சராசரி 14 மணி நேரத்தை இதற்காக செலவிடுகிறார்களாம்.

இன்னும் படுக்கை அறையில்  கூட பேஸ்புக் அல்லது டிவிட்டர் பற்றி நினைக்கிறார்களாம்.

இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், செக்ஸ், சிகரெட், போதைப் பழக்கம், விளையாட்டு என அனைத்தையும் தகர்த்துத்
 தரைமட்டமாக்கும் அளவுக்கு இந்த பேஸ்புக், டிவிட்டர் பழக்கம் விஸ்வரூபம் எடுத்து நிற்பதாக கூறியுள்ளனர்.

6 comments:

Unknown said...

ஆமாம், உண்மையான தகவல் தான்.... நான் கூட குறைந்தபட்சம் ஆறு முறையாவது facebook லாகின் செய்கிறேன்...

Unknown said...

அருமை சகோ நன்றிகள் பல பல எங்க பக்கமும் வந்து போறது

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Ayesha Farook

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Mohan

goma said...

True
I lost touch in writing articles and puthukavithai in blogs

T.V.ராதாகிருஷ்ணன் said...

அதுதானே கோமா வை இவ்வளவு காலம் காணுமேன்னு பார்த்திருந்தேன்.
வருகைக்கு நன்றி