கோடிக்கணக்கில் செலவழித்து எடுக்கப்படும் படங்கள் வசூலில் வேண்டுமானால் வெற்றி பெறுகின்றன.ஆனால் உண்மையில் அவை தோல்வி படங்களே.
பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்கள் வெளியாகும் போதே 1000 ப்ரிண்டுகளுக்கு மேல் போடப்பட்டு..1000க்கும் மேற்பட்ட அரங்குகளில் (குறிப்பாக மல்டிபிளக்ஸ்- டிக்கெட் 120 ரூபாய்) திரையிடப்படுவதால், வெளியான சில நாட்களில், படத்தைப் பற்றிய விமரிசனம் வருவதற்குள் ஓரளவு பணத்தை ஈட்டிவிடுகின்றன.
சமீபத்தில் வெளிவந்த, பில்லா-2, தாண்டவம், சகுனி ஆகியவை சில உதாரணங்கள்.சமீபத்தில் மாற்றானும் இப்பட்டியலில் சேர்ந்து விட்டது.
இதற்குக் காரணங்கள் என்ன?
கதையில் புதுமையாக ஏதும் கிடையாது..
அப்படியே இருக்கும் பட்சத்தில்...அதற்கான காரணம்..வழக்கமான பழிவாங்கல்.
படம் வெளிவருவதற்கு முன் ஏராளமான எதிர்பார்ப்பை மக்களுக்கு ஏற்படுத்திவிடுதல்.(படம் வெளிவந்த பின் மக்கள் ஏமாற்றம் அடைகின்றனர்)
அதைப் பற்றிய கவலை எங்களுக்கு இல்லை..எங்கள் குறியே கலெக்க்ஷன்தான் என்றால்...
மன்னித்துக் கொள்ளுங்கள்...
நீங்கள் செய்வதும் விபச்சாரம் தான்.
ஆகவே..தயாரிப்பாளர்களே, நடிகர்களே, இயக்குநர்களே..புதிதாக சிந்தியுங்கள்...
தமிழில் ஏராளமான நாவல்கள் உள்ளன.அவற்றை படியுங்கள்..
எங்கள் வழி இதுதான் என்றால்..மக்கள் EXITஐ காட்டிவிடுவார்கள்..
7 comments:
இன்னும் கொஞ்சம் அதிகமான வழிமுறைகளை சொல்லுங்க சார்,
எப்பதான் புரிஞ்சுக்க போறாங்களோ?
நல்ல அலசல், புதிய கோணம்த்தில் தகவல் ...
வருகைக்கு நன்றி Kathir Rath
வருகைக்கு நன்றி indrayavanam.blogspot.com
hi,
Very good criticism.I like very much.
It shows the shortage of story and
imagination.
வருகைக்கு நன்றி Chitra
Post a Comment