சர்ச்சைக்குரிய பாடல் வரிகளை தனது நீர்ப்பறவை படத்திலிருந்து சீனு ராமசாமி நீக்கினார். கவிப்பேரரசு வைரமுத்துவின் சம்மதத்துடன் இது நடந்ததாக கூறப்படுகிறது.
நீர்ப்பறவையில் கிறிஸ்தவ மீனவர்களின் வாழ்க்கையை சீனு சொல்லியிருக்கிறார். கதையோட்டம் எப்படியோ அதே ஓட்டத்தில் பாட்டு அமைக்கிறவர் வைரமுத்து. அப்படி அமைத்ததால் தென்மேற்குப் பருவக்காற்று அவருக்கு கிரீடமாக அமைந்தது.
நீர்ப்பறவையின் களம் கிறிஸ்தவ மீனவர்கள் என்பதால் விவிலிய வார்த்தைகளை பயன்படுத்தி மொத்தப் பாடல்களையும் எழுதியிருந்தார். இது பலராலும் சிலாகிக்கப்பட்டது. ஆனால் அதில் சில வரிகள் சர்ச்சையை கிளப்பியது. காதலன் காதலியைப் பார்த்து சத்தியமும் ஜீவனும் நீயே என்று சொல்வது போல் அமைந்த வரி கிறிஸ்தாவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அவர்களைப் பொறுத்தவரை சத்தியமும் ஜீவனும் ஏசு மட்டுமே.
பாடல் வரிகளை நீக்க வேண்டும் என்ற போராட்டத்தை தொடர்ந்து யார் மனதையும் புண்படுத்த நான் அப்படி எழுதவில்லை என வைரமுத்து விளக்கமளித்தார். ரிலீஸ் நேரத்தில் படத்தைப் பற்றி பேசுவதற்குப் பதில் இந்த சர்ச்சை பாடுபொருளாகிவிடக் கூடாது என்று அந்த வரிகளையே நீக்கிவிட்டார் சீனு ராமசாமி.
(வெப்துனியா)
டிஸ்கி- இந்து மதம் தவிர எந்த மதத்தினர் பற்றி எழுதினாலும் நாங்கள் சும்மாயிருக்கமாட்டோம்.
4 comments:
பயனுள்ள நல்ல பதிவுகளை கொண்டுள்ளது இத்தளம். பதிவுகளுக்கு நன்றி!
நன்றி!சுப்ரமணியன்.
செய்தி ஒரு காமடி.
டிஸ்கியை தான் ரசித்தேன். எவ்வளவு தான் மொத்தினாலும் மோதினாலும் போட்டு தாக்கினாலும் இந்து மதம் தாங்குமெல்லோ.
நன்றி!வேகநரி
Post a Comment