ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Monday, October 22, 2012
புரசைவாக்கம் புன்னகை பவன் - உணவகம்..
புரசைவாக்கம்..தானா தெருவு தாண்டி சென்றால் ஒரு சின்ன குறுக்குத் தெரு வரும். தெருமுனையில் சிறுநீர் கழிக்கக்கூடாது என சுவரில் கிறுக்கியிருப்பார்கள்.ஆனால் அங்குதான் சிறுநீர் கழித்து நாற்றம் அடிக்க வைத்திருப்பர் குடிமகன்கள்.
அதைத் தாண்டி சற்றுச் சென்றால்..புன்னகை பவனைப் பார்க்கலாம்.போர்டு ஏதும் இருக்காது.அங்கு விசாரித்தால் சின்ன குழந்தைகளும் புன்னகையுடன் இடத்தைக் காட்டும்.
நீங்கள் உள்ளே நுழையும் போது வாயிலில் ஒருவர் கை கூப்பி புன்னகையுடன் 'வாங்க..வாங்க.'.என்று புன்னகையுடன் வரவேற்பார்.கல்யாண மண்டபத்தில்..பெண்ணைப் பெற்றோர்., பிள்ளை வீட்டாரை வரவேற்கும் தோரணைப் போலவே இருக்கும்.
நீங்கல் புன்னகையை வாங்கிக் கொண்டு உள்ளே சென்று..ஒரு மேசையில் அமர்ந்து..இரண்டு பரோட்டா, பீஸ்மசாலா ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்தால் கால்மணி நேரத்தில் பரோட்டா உங்கள் முன் வந்து அமரும்....சும்மா பள பள என..
கண்டிப்பாக நெய் போட்டிருக்க வாய்ப்பில்லை.ஆனால்..நெய் போன்ற வஸ்து உபயோகப்பட்டிருக்கக் கூடும்.அதை பிட்டு..பீஸ் மசாலாவை சேர்த்துச் சாப்பிட்டால்....அடடா...அடடா..
"தெய்வம் இருப்பது எங்கே..அது இங்கே..வேறெங்கே..' என பாட ஆரம்பித்துவிடுவீர்கள்.
பரோட்டா மாஸ்டரைப் பார்த்தால்...வேர்த்துக் கொட்ட இருப்பார்..பரோட்டாவின் பளபள ப்புக்கு காரணம் தெரிந்துவிடும்.
விலையும் அதிகம் இல்லை...
ஆனால்...அங்கு விஜயம் செய்து..உங்கள் உடல் நலம் கெட்டால்...நான் பொறுப்பல்ல.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
என்னது சமீப காலமாக சாப்பாட்டுக்கடை பதிவர்களை வாரிக்கிட்டே இருக்கீங்களே,இணைய வாரியார் ஆகும் திட்டமா :-))
பதிவர்களிடையே நீயா..நானா..போட்டி..நடைபெறும் பனிப்போர்..இதனால் ஏற்பட்ட கசப்பே..இது போன்ற பதிவுகளுக்குக் காரணம்
Post a Comment