Saturday, November 10, 2012

தீபாவளியும்..துப்பாக்கியும்...




அப்பா...துப்பாக்கி..என பேச்சை ஆரம்பித்தான் பையன்..

'துப்பாக்கியும் ஆச்சு...கிப்பாக்கியும் ஆச்சு..மனுஷன் கிடந்து அவதிப்படறான் தீபாவளிக்கு..இதுல இவனுக்குத் துப்பாக்கியாம்.'.அப்பா முணுமுணுத்தார்.

"குழந்தை என்ன கேட்டுட்டான்னு இப்படி எரிஞ்சு விழறீங்க..அவன் என்ன நிஜ துப்பாக்கியா கேட்கிறான்..கள்ளத் துப்பாக்கித்தானே..எவ்வளவு வருஷமா தீபாவளி கேப் வெடிக்க துப்பாக்கி கேட்டுட்டு இருக்கான்..நீங்களும் ஒவ்வொரு வருஷமும் அவனை டபாய்ச்சுனு தானே இருக்கீங்க' என்றாள் மனைவி.

'விவரம் புரியாம பேசாதே...தீபாவளிக்கு மாப்பிள்ளை வரேன்னு சொல்லி இருக்கார்.அவருக்கு துணி, வாட்ச் இதெல்லாம் வாங்கணுமேன்னு கவலைல நான் இருக்கேன்..இந்த சமயத்திலே என் கவலைத் தெரியாம...நீங்க வேற..'

'அடடே..உங்களுக்கு விவரம் தெரியாதா.9ஆம் தேதியே துப்பாக்கி படம் வரும்னு..மாப்பிள்ளை ரிசர்வ் பண்ணீருந்தாராம்.ஆனால் நாலு நாள் படம் தள்ளிப் போனதால...முதல் நாள் ரிசர்வ் பண்ணினவங்க டிக்கெட் எல்லாம்..படம் வெளிவரும் 13ஆம் தேதிக்கு மாற்றிக் கொடுத்துட்டாங்களாம்.அதனாலே..தீபாவளிக்கு வரமுடியாதுன்னு மாப்பிள்ளை சொல்லிட்டார்"

'அப்பாடா..படம் வெளிவர தாமதம் ஆனதுலே..யாருக்கு எவ்வளவு நஷ்டமானா என்ன...எனக்கு லாபம்.வாழ்க விஜய்.டேய்..கடைக்கு கிளம்பு..உனக்கு இந்த வருஷம் துப்பாக்கி நிச்சயம் வாங்கித் தரேன்'


No comments: