Sunday, November 18, 2012

மதப் பிரச்னை, ஜாதிப் பிரச்னை இவை வராமல் படம் எடுப்பது எப்படி?




படத்தயாரிப்பாளரை..கதாசிரியர் ஒருவர் பார்க்க வந்தார்.தயாரிப்பாளரிடம், "ஐயா..தீவரவாதத்தை ஒழிக்கும் விதத்தில் என்னிடம் ஒரு சப்ஜெக்ட் உள்ளது..கேட்கிறிர்களா'? என்றார்.

தனது முந்தைய படம் அருமையாய் இருந்தும்..சில சாதி அமைப்புகளாலும்..மதக்கலவரத்தைத் தூண்டும் விதமாகவும் அமைந்துள்ளது என சில, பல சங்கங்களால் மிரட்டப்பட்டதாலும், திரையரங்குகளில் படத்தைக் காட்டவிடாமலும் ஆர்ப்பாட்டம் செய்ததால்..படம் தோல்வியடைந்ததால் , மனம் வெறுத்திருந்த  தயாரிப்பாளர், 'ஐயா..இனி அப்படிப்பட்ட படங்களே வேண்டாம்..வெறும் காதல் கட்சிகள் படமே போதும்' என்றார்.

'ஐயா..என் கதைகள் அப்படிப்பட்ட பிரச்னைகள் வரக் காரணமேயில்லை.ஏனெனில்..இதில் வரும் காதாபாத்திரங்கள் அனைவருமே தலைக்குத் தொப்பி அணிந்திருப்பர்.அவர்களின் பெயர்களும்..எக்ஸ், ஒய், இஜட் என்றுதான் இருக்கும்.ஆகவே எந்த மதத்தினர் அதிருப்தியும் வர வாய்ப்பில்லை' என்றார் கதாசிரியர்.

இப்படி செய்யும் முறை தயாரிப்பாளருக்குப் பிடித்துப்போக...பட விளம்பரம்  கீழ்கண்ட முறையில் செய்யப்பட்டது.

"ஏ..புரடக்க்ஷன்ஸ்  அளிக்கும்

"B:"

கதை - C
தயாரிப்பு -D
திரைக்கதை இயக்கம் - E

நடிகர்கள் - F, G, H


6 comments:

வேகநரி said...

உண்மை நிலமையை நகை சுவையாக சொல்லியிருங்கீங்க.
//இதில் வரும் காதாபாத்திரங்கள் அனைவருமே தலைக்குத் தொப்பி அணிந்திருப்பர்//
தொப்பியோடு தாடியும் வைத்து,பெண் காதாபாத்திரங்களுக்கு பர்தாவால் மூடியும் விட்டால் அந்த படத்தை ஆதரித்து ஊர்வலமும் போவார்கள்.

Anonymous said...

கதை ஒரு நூறு வருடம் முன்னகர்த்தி விட்டு, கதாப்பாத்திரங்கள் பெயரை ஹீரோ - FG76YT ஹீரோய்ன் - GT90Y6 வில்லன் - MH89TR என்று வைத்துக் கொண்டால் ஒரு சிக்கலும் வராது, அதில் கூட மொழிப் பிரச்சனை வரலாம் என்பதால் அவதார் கணக்கா இனி மேல் எல்லாப் படங்களையும் நாவி மொழியில் எடுக்கலாமே . பிச்சிக்கிட்டு ஓடும் ! ( படமல்ல,தியேட்டரில் இருந்து ஜனங்கள் )

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... நன்றி...
tm2

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வேகநரி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி இக்பால் செல்வன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்