Showing posts with label அரசியல் தேர்தல் 2009. Show all posts
Showing posts with label அரசியல் தேர்தல் 2009. Show all posts

Friday, May 8, 2009

காங்கிரஸை தோற்கடிப்போம்...

தி.மு.க., கூட்டணியுடன்..அ.தி.மு.க., கூட்டணி வலுவுள்ளது.அதனால் தான் எனது முந்தைய பதிவு ஒன்றில் கூட அ.தி.மு.க., அதிக இடங்களில் வெல்லும் என சொல்லியிருந்தேன்.

சமீபத்தில் வேறு..சில காங்கிரஸ் வால்கள்..(தலை என்பதே காங்கிரஸில் இல்லை) தேர்தலுக்குப் பின் கூட்டணி மாற்றம் வரலாம் என பேச ஆரம்பித்துள்ளனர்.

காங்கிரஸை நம்பி தி.மு.க., கெட்டது.இல்லையேல்..காங்கிரஸை விடுத்து..அது..வலுவான கூட்டணி அமைத்திருக்கலாம்.கெட்ட பெயரையும் தவிர்த்திருக்கலாம்.சொக்கத்தங்கம் இல்லை பித்தளை என்பது தெரிந்திருக்கும்.

இந்நிலையில்..ஒரு வேளை அ.தி.மு.க., சில அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தால்...காங்கிரஸ் தி.மு.க.,வை கழட்டிவிட தயார்..இப்போது.

ஆகவே..தமிழக வாக்காளர்கள்..காங்கிரஸின் சந்தர்ப்பவாத அரசியலை உணர்ந்து...அக்கட்சி போட்டியிடும் தொகுதிகளில்..அதைத் தோல்வி அடைய செய்யுங்கள்.அப்போதுதான்..தங்கபாலு...இளங்கோவன் ஆகியோர் நாவடக்கம் கொள்வர்.

தமிழன் இதிலாவது ஒற்றுமையாய் இருந்து அவர்களை தோற்கடிக்கட்டும்.

Thursday, April 30, 2009

தி.மு.க., தேர்தல் நடத்தை விதிமீறல்..???

நேற்று தமிழகத்து பேருந்து பயணிகளுக்கு ..பேருந்தில் ஏறியதும்..ஆச்சரியம் ஏற்பட்டது.பேருந்து கட்டணங்கள் குறைக்கப்பட்டிருந்தது.

அதுவும்...சாதாரணமான குறைப்பு இல்லை...மிகவும் குறைப்பு.உதாரணமாக தாழ்தள பேருந்தில்...பாரிமுனையிலிருந்து...ஆவடிக்கு முன்னர் 13 ரூபாய் கட்டணம்...நேற்று முதல் அது 6 ரூபாயாகிவிட்டது.

தமிழகம் முழுதும் பேருந்துகளில் ஒரே சீரான கட்டணம் நேற்று முதல் அமுலுக்கு வந்தது.

முன்னர்..2 ரூபாய் கட்டணத்திற்கு..எல்.எஸ்.எஸ்.,எம் சர்வீஸ்,எக்ஸ்பிரஸ்,டீலக்ஸ்..ஆகியவற்றிற்கு முறையே 2.50.,3.,4., ரூபாய் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன.இது மறைமுகமாக கூடுதல் கட்டணம் ஏற்றப்பட்டுள்ளதாக மக்களிடையே கருத்து நிலவி வந்தது.இந்நிலையில்..நேற்று முதல்...எல்லா பேருந்துகளிலும் சாதாரண கட்டணமே வசூலிக்கப்படுகிறது.ஏ.சி. பஸ் கட்டணத்தில் மாற்றமில்லை.

இது..மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆனால்..இந்நிலை எதுவரை நீடிக்கும்..என்ற ஐயமும் உள்ளது.

எதிர்க்கட்சிகள்..இது தேர்தலுக்காக..தி.மு.க., அரசின் செயல் என்று கூறினாலும்..மெட்ரோ நிர்வாகிகள்...நிர்வாகம் சம்பந்தப்பட்ட விஷயம் எனக் கூறுகின்றனர்.

ஆனால்...தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவோ..பஸ் கட்டணத்தைக் குறைத்தது..கண்டிப்பாக தேர்தல் நடத்தை விதிமீறல் என்றும்..இது விஷயமாக தலைமை தேர்தல் கமிஷனுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளதாகவும் சொன்னார்.

நவீன் சாவ்லா..இது விதிமீறல் அல்ல என சொல்வார் என எதிர்ப்பார்ப்போம்.

Thursday, April 23, 2009

பாவம்...பாவம்...பரிதாபம்...வைகோ..


வைகோ...என்னைப்போன்ற பலரால் ரசிக்கப்பட்ட அரசியல்வாதி...

கலைஞரைத் தவிர்த்து...குமரி அனந்தன், வைகோ பேச்சுக்களால் கவரப்பட்டவன் நான்.

தி.மு.க.,வில் இருந்த போது தன்மானம் பாதிக்கப்பட்டதாலும்...கொலைபழிச்சொல் சொன்னதாலும்..வெளியே வந்து மறுமலர்ச்சி கழகத்தை ஆரம்பித்தபோது...மறுபடியும்..அவர் அரசியல் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும் என எண்ணியவன் நான்.ஆரம்பகாலங்களில் அதற்கான சத்தியகூறுகள் இருந்தன.ஆனால்..மீண்டும்..தன்னை பழி சொல்லி அனுப்பிய தி.மு.க., வுடன் ஒரு சில இடங்களுக்காக கூட்டு வைத்த போது...சற்று தரம் தாழ்ந்தாலும்...ஏற்கனவே இருந்த கட்சியுடன் கூட்டு வைக்கிறார்...மறப்போம்..மன்னிப்போம்...பாணியில் என்றே எண்ணினோம்.

ஆனால்..அடுத்து வந்த தேர்தலில்...ஒரு சில இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும் என்றதும்...தன்னை பொடா..வில் தள்ளிய வரலாற்றை மறந்து ஜெ யுடன் கூட்டணி வைத்தார்.

அவரின் இன்றைய நிலை...

நேற்று ஜெ வைகோவிற்கு..ஆதரவாக சிவகாசி அருகே ஒரு கூட்டத்தில் பேசினார்...அப்போது வேட்பாளர் வைகோவை அறிமுகப்படுத்தினார்.ஒரு கட்சியின் தலைவர் ...அறிமுகப்படுத்தப்படுகிறார்.
அந்த புகைப்படத்தைப் பாருங்கள்.அதற்குமேல் எழுத்துக்களால் சொல்லமுடியப் போவதில்லை.

(இதே வைகோ..மனுதாக்கல் செய்தபோது...அதிகாரி உட்கார்ந்து மனுவை பெற்றுக்கொண்டார் என்பதற்காக...நின்று வாங்கமுடியாதா? என்று கேட்டார்.உட்கார்ந்து வாங்கினால் தனக்கு அவமானம்
என்ற ரீதியில்.)

Wednesday, April 22, 2009

சரத்பாபுவிற்கு நீங்கள் ஏன் ஓட்டு போடக்கூடாது...

கடந்த சிலநாட்களாக சரத்பாபு என்ற பெயர் அடிக்கடி பதிவுகளில் காணமுடிகிறது.அவர் I.I.M.,ல் M.B.A.,படித்த இளைஞர் ..இட்லிக்கடைவைத்து அனேகருக்கு வேலை கொடுத்துள்ளவர் என்றெல்லாம் எழுதுகிறார்கள்.

இப்படி எழுதுவதையே கண்டிக்கிறேன்...ஐ.ஐ.எம்.,ல் அட்மிஷன் கிடைக்க எவ்வளவு கடுமையான போட்டி நிலவுகிறது...ஒரு பட்டதாரியை உருவாக்க அரசு பணம் லட்சக்கணக்கில் செலவாகிறது.அப்படி அரசு பணத்தில் படித்தவர்...(அம்மா கஷ்டப்பட்டு இட்லி விற்று படிக்கவைத்திருந்தாலும்)..ஒரு சிறந்த துறையில் ஈடுபட்டு...இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு தன் பங்கிற்கு ஏதேனும் செய்திருக்கலாம்.இட்லி வியாபாரம் செய்து தொழிலதிபர் ஆக இப்படிப்பை பயன்படுத்தி இருக்க வேண்டாம் என்றே தோன்றுகிறது.முருகன் இட்லி கடை அதிபர் ஐ.ஐ.எம்.படிக்காமலேயே அனேகருக்கு வேலை கொடுத்துள்ளார்.

சரி...அதுதான் போகட்டும்..என்றால்..எம்.பி., தேர்தலில் நிற்கிறாராம்..சுயேச்சையாக.கண்டிப்பாக வெற்றி அடைய முடியாது எனத் தெரியும்..இருந்தும் ஏன் நிற்கிறார்...இவருக்கும் அரசியல் ஆசை வந்து விட்டது எனலாம்.மக்களுக்கு சேவை செய்ய..அரசியலில் தான் ஈடுபட வேண்டும் என்று இல்லை.சமுதாயத்தில் பின் தங்கியவர்கள்..ஆதரவற்றோர் ஆகியவருக்கு இவர் தன்னால் முடிந்தவிதத்தில் உதவலாம்.ஒரு ராஜாராம்,ஒரு வித்யாகர் ஆக ஆகலாம்...அதைவிட்டு..ஒரு பாலு ஆக ஆசைப்படுவது...இப்போது...இவ்வயதில்...இவருக்கு தேவையில்லை.மலிவான விளம்பரத்திற்கு ஆசைப்படுகிறாரோ?

அப்படியே ஆசை இருக்குமானால்...ஒரு கட்சியில் சேரட்டும்...அடுத்து வரும் தேர்தல்களில் முயலட்டும்...

சுயேச்சைகள் வெற்றிபெரும் வாய்ப்பு இந்தியாவில் இல்லை.அப்படி வெற்றி பெறுவதானால்...எம்.எஸ்.உதயமூர்த்தி வெற்றி பெற்றிருப்பார்.ஜெயகாந்தன் வெற்றி பெற்றிருப்பார்.எஸ்.வி.,சேகர் அவருக்கு பழக்கமான...கிட்டத்தட்ட அனைவரையும் அறிந்த மைலாப்பூர் சட்டமன்ற தொகுதியிலேயே சுயேச்சையாக 1500 ஓட்டுகளே வாங்க முடிந்தது.சுயேச்சையாக வெற்றி பெற தாமரைக்கனியா இவர்?

ஆகவே...நண்பர் சரத்பாபு அவர்களுக்கு...அரசியல் ஆசை இவ்வளவு சீக்கிரம் வந்திருக்க வேண்டிய தேவையில்லை.

உங்கள் ஓட்டு வீணாகவேண்டுமானால்..அவருக்கு ஓட்டளியுங்கள்.

காங்கிரசிற்கு எதிராக ரஜினி ??

அரசியல் கட்சிகளே இதுவரை கிளப்பாத முழக்கத்தோடு ஈழப் போராட்டத்தில் ‘ரீ என்ட்ரி’ ஆகியிருக்கிறது தமிழ்த் திரையுலகம்.
”இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவிக்கும் போரை நடத்திவரும் சோனியாவை தமிழகத் துக்குள் விடமாட்டோம்!” என்பதுதான் தமிழ்த் திரையுலகத்தின் தடதட முழக்கம்.
ம.தி.மு.க. அலுவலகமான தாயகத்தில் உண்ணாவிரதம் இருக்கும் பெண்கள் அமைப்பினரைச் சந்திக்க இயக்குநர் பாரதிராஜா தலைமையில் சென்றனர் திரைத்துறை பிரமுகர்கள். அங்கேயே மைக் பிடித்து மத்திய அரசுக்கு எதிராகவும், குறிப்பாக சோனியாவுக்கு எதிராகவும் கொந்தளிக்கத் தொடங்கி விட்டார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட, சினிமாத் துறையின் முக்கிய ஆட்கள் பலருக்கும் ஈழத் துயரங்களின் படங்களும் செய்திகளும் மெயிலில் வந்துகொண்டே இருக்கின்றன. அதனால்தான் இயக்குநர் பாரதிராஜாவோடு உணர்வாளர்கள் பலரும் கலந்து பேசி, காங்கிரஸ் போட்டியிடும் பதினாறு தொகுதிகளிலும் திரையுலகத்தினர் தீவிரப் பிரசாரம் செய்ய முடிவெடுத்துள்ளோம்.
சோனியா தேர்தல் பிரசாரத்துக்காகத் தமிழகம் வரும் பட்சத்தில், எங்கள் எதிர்ப்பைக் கடுமையாக காட்டுவோம். அங்கே தமிழர்களையும், இங்கே தமிழர்களின் உணர்வுகளையும் கொன்றுவிட்டு, தமிழகத்துக்கு சோனியா வரக் கூடாது!” என்றவர்கள் தொடர்ந்தனர்.
”கட்சி சார்பான திரைப் புள்ளிகள் மூலமாக எங்களைப் பிளவுபடுத்தும் முயற்சிகளும் நடந்தது. அதை முறியடிக்கத்தான் ‘தமிழ்த் திரையுலக தமிழ் ஈழ ஆதரவு உணர்வுக் குழு’ என்ற பெயரில் தனி அமைப்பு தொடங்கியிருக்கிறோம். அதன் சார்பாக காங்கிரசுக்கு எதிராக இயக்குநர்கள் அமீர், சீமான் இருவரையும் தேர்தலில் போட்டியிட வைக்கவும் முடிவெடுத்திருக்கிறோம்.
ஈழப் போரைக் கண்டித்து நடந்த உண்ணாவிரதத்தில், ராஜபக்ஷேவுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த், எங்களுக்கு மிகப் பெரிய சக்தி.
பாரதிராஜா, சத்யராஜ், அமீர் போன்றோரின் வேண்டுகோளை ஏற்று, ரஜினிகாந்த்தும் காங்கிரசுக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொள்ள சம்மதித்திருக்கிறார்.
அதோடு, உண்ணாவிரதப் போராட்டத்தின்போது ரஜினி பேசிய பேச்சை கேஸட்டுகளாகப் போட்டு, எங்கள் பிரசாரத்துக்குப் பயன்படுத்துவோம்.
பெங்களூருவில் இருக்கும் ரஜினி மன்றங்கள் எல்லாம் ஈழ விவகாரத்தைக் கையில் எடுத்துப் போராடிக் கொண்டிருக்க, இங்கேயுள்ள ரஜினி மன்றங்களும், விஜய், அஜீத் போன்ற மற்ற நடிகர்களின் மன்றங்களும் எங்கள் போராட்டத்தில் இணைந்துகொள்ளும் என நம்புகிறோம்.
அஜீத்கூட தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களை ஈழத் தமிழர் விவகாரத்துக்காக ரத்து செய் திருக்கிறார்!” என்றனர்.
இயக்குநர்கள் இப்படிப் போராட… உதவி இயக்குநர்களும், ‘தமிழ் ஈழ ஆதரவு உதவி இயக்குநர்கள் சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, காங்கிரஸ் போட்டியிடும் பதினாறு தொகுதிகளுக்கும் போய்… காங்கிரஸ் எதிர்ப்புப் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டனராம்.

சாவின் விளிம்பில் நிற்கும் தமிழினத்துக்கு இப்போதுகூட உதவ முன்வராமல், காங்கிரஸ் அரசு வேடிக்கை பார்த்தால்… அதற்கான விளைவுகளை அவர்கள் இந்தத் தேர்தலில் அனுபவித்தே தீருவார்கள்.
பிரசாரம், போட்டி குறித்தெல்லாம் இப்போதைக்கு ஏதும் சொல்ல முடியாது. தமிழ்த் திரையுலக தமிழீழ ஆதரவு உணர்வுக் குழு என்ன முடிவெடுத்தாலும் சரி, அதற்கு நானும் சீமானும் கட்டுப்படுவோம்!” என்றார்.
திரையுலக எதிர்ப்பு குறித்து தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்க பாலுவிடம் கேட்டோம். ”காங்கிரஸின் எத்தகைய முடிவையும் மேலிடத்திடம் கலந்து பேசித்தான் சொல்ல முடியும்!” என்றார் வழக்கமான காங்கிரஸ்குரலில்.
இதற்கிடையில் பி.ஜே.பி. தரப்பில் ரஜினியைத் தொடர்புகொண்ட சிலர், ‘ஈழ விவகாரத்தைக் கையில் எடுத்து காங்கிரஸை வீழ்த்துங்கள்!’ என சைலன்ட் அசைன்மென்ட் கொடுத்திருப்பதாகக் கிளம்பி இருக்கும் பேச்சும் காங்கிரஸை காய்ச்சலில் ஆழ்த்தி இருக்கிறது!

(எனக்கு வந்த மின்னஞ்சல் )

Tuesday, April 21, 2009

பூனைக்கும் தோழன்..பாலுக்கும் காவலா கலைஞர்?

இலங்கை தமிழருக்காக நான் குரல் கொடுப்பதை நாடகம் என்றும்..மோசடி என்றும்...விமரிசனம் செய்வதை என்னால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை.

மத்திய அரசை நான் வலியுறுத்தவில்லையா?

கடிதம் எழுதவில்லையா?

பிரதமரை சந்திக்கவில்லையா?

சோனியாவை பார்க்கவில்லையா?

பிரணாப்முகர்ஜியை சென்னைக்கு வரச்செய்து பேசவில்லையா?

ப.சிதம்பரத்திடம் விவாதிக்கவில்லையா?

தந்திகள் கொடுக்கவில்லையா?

அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தவில்லையா?

மனித சங்கலி நடத்தவில்லையா?

நீதி அரசர்கள் கொண்ட குழுவை..தில்லிக்கு அனுப்பி குடியரசு தலைவர், சோனியா ஆகியோருடன் பேசச் செய்யவில்லையா?

என்ன செய்யவில்லை? இவ்வளவு செய்தும் ..அரசியலுக்காக நான் நாடகம் ஆடுகிறேன் என இவர்கள் கூறலாமா?

(சமீபத்தில் நடந்த பேரணி...நாளைக்கு நடக்க இருக்கும்..பொது வேலைநிறுத்தம்..இதை சொல்ல ஏன் மறந்தார்?)

கூறுபவர்கள் கூறட்டும்...கூர்த்த மதி படைத்தோர்க்கு..உண்மை புரியும் ...என...இலங்கை தமிழர் பிரச்னைக்காக கண்ணிர் வடிக்கும் கலைஞர் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்...மத்திய அரசைப் பொறுத்தவரை இது இன்னொரு நாட்டு பிரச்னை.மிகுந்த எச்சரிக்கையுடனும்..கவனத்தோடும் அணுகிட வேண்டிய பிரச்னை..என்றும் கூறியுள்ளார்.

Sunday, April 19, 2009

ஒற்றுமையாய் இருங்கள்..காங்கிரஸிற்கு தி.மு.க.அமைச்சர் அறிவுரை..

தமிழக காங்கிரஸ் தலைவரும்...சேலம் நாடாளுமன்றத்திற்கான வேட்பாளருமான தங்கபாலு நேற்று சேலத்தில்...கூட்டணி கட்சி உறுப்பினர்கள்...மற்றும் கட்சி ஊழியர்களுடன் பேசினார்.

அப்போது காங்கிரஸ் ஊழியர்கள் அவரை பேசவிடாது தடுத்தனர்.அவருக்கு எதிராக கோஷங்கள் போட்டனர்.

கூட்டத்திற்கு...தி.மு.க., அமைச்சரும், சேலம் மாவட்ட தி.மு.க., தலைவருமான வீரபாண்டி ஆறுமுகம் வந்திருந்தார்.நிலைமை கட்டுக்கடங்காமல் போவதைக் கண்ட அவர்...'இது தனிப்பட்ட மனிதருக்கான எதிர்ப்பை காட்டும் நேரமில்லை என்றும்..அனைவரும் தங்கபாலு வெற்றிக்கு பாடுபடவேண்டும்'என்றும் கூறினார்.

காங்கிரஸ் ஊழியர்களை சமாதானப் படுத்திய அவர்...மேலும் கூறுகையில்..'வேட்பாளர் யார் என்பது முக்கியமில்லை..யார் வேட்பாளராயிருந்தாலும்..அவர் சோனியா காந்தியால் நியமிக்கப்பட்டவர்.அவர் வெற்றிக்கு நாம் பாடுபட வேண்டும்.காங்கிரஸ்காரர்கள் ஒற்றுமையாய் இருக்க வேண்டும்.அதுதான் முதலில் அவசியம்...அப்போதுதான்...நம்முடன் 5 ஆண்டுகள் இருந்து பதவி அனுபவித்துப் போனவர்களுக்கு பாடம் கற்பிக்க முடியும்' என்றார்.

ஒரு மாநில தேசிய கட்சியின் தலைவரால்..தன் கட்சி ஊழியர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை...வேறு கூட்டணிக் கட்சி தலைவரால்தான் அது முடிகிறது..என்றால்...ஒரு திறமையற்றவரை தலைவராக்கியது யார் குற்றம்.

காங்கிரஸின் முதல் தோல்வி சேலத்தில் ஆரம்பிக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

Thursday, April 16, 2009

அம்மன் துதி பாடும் மருத்துவர் அய்யா...

நேற்று சென்னையில் அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகம் செய்யும் கூட்டம் நடந்தது.இனி மேல் வேட்பாளர் மாற்றம் வராது என நம்புவோமாக.

வெளியூர்களிலிருந்து பல வேன்களில் தொண்டர் கூட்டம் குவிந்தது.அலுவலகம் முடிந்து வீடு திரும்பும்...சாமான்யர்கள் பேருந்தில்...வாகன நெரிசல்களில் மாட்டிக்கொண்டு..வழக்கத்தைவிட ஓரிரு மணிகள் தாமதமாக வீடு போய் சேர்ந்தனர்.மே 13 வரை...இந்த நிலைதான்...என ஆங்காங்கே முணுமுணுப்புகள் இருந்தன.

கூட்டணி தலைவர்கள் பிரகாஷ் காரத்,ஏ.பி.பரதன்,ராஜா,வைகோ,வரதராஜன்,பாண்டியன் ஆகியோர்கள் பேசினர். வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி ஜெ பேசினார்.

ஆமாம்...முக்கியமான ஒருவர் எங்கே என்கிறீர்களா?

அந்த தலைவர் பேசவில்லை...ஜெ துதி பாடினார்.அவர் பேச்சின் சாரம்..

ஜெ..யின் பக்கம்தான் மக்கள் சக்தி இருக்கின்றது.தி.மு.க.,விற்கு எதிர் அலை வீசத் தொடங்கிவிட்டது.2008ல் வெள்ளம் வந்த போது கலைஞர் 1510 கோடி கேட்டார்...200 கோடிதான் கிடைத்தது.2005 வெள்ளத்தின் போது..முதலில் 500 கோடிகேட்டார் ஜெ அந்த தொகை கிடைத்தது.மீண்டும் 500 கோடி கேட்டார்.அதுவும் கிடைத்தது.காரணம் ராசி ஒருபக்கம் இருந்தாலும்..முகராசி என்ற ஒன்றும் உண்டு.(கலைஞருக்கு முகராசி இல்லை என்கிறாரோ?)

ஜெ பேசுகையில்...தமிழகம் சுட்டிக்காட்டுபவரே...இந்தியாவின் அடுத்த பிரதமர் ஆவார் என்றார்.???!!!

Monday, March 30, 2009

ஜெ அணியிலிருந்து வைகோ விலகுவாரா?

தி.மு.க.அணியில் இருந்த வைகோ போன தேர்தலில்..ஒன்றிரண்டு தொகுதிகள் அதிகமாகக் கிடைத்ததால்..கடைசி நிமிடங்களில் அ.தி.மு.க., கூட்டணிக்கு வந்தார்.

ஆனால் இன்று..செஞ்சி ராமசந்திரன்,எல்.கணேசன்..ஆகியோர் விலகினர். பின் கடந்த சில நாட்களில், கண்ணப்பன்.கம்பம் ராமகிருஷ்ணன் ஆகிய எம்.எல்.ஏ.க்களும் விலகினர்.

இந்நிலையில்..பா.ம.க.வுடனும். கம்யூனிஸ்ட்களிடம்...தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் (மார்க்சிஸ்ட் 3 தொகுதி.. தொகுதி மட்டுமே நிச்சயமாகவில்லை) ம.தி.மு.க.உடன்
இழுபறி நீடிக்கிறது.

நேற்று 3 மணி நேரம் பேசியபின் வை.கோ.விற்கு 3 தொகுதிகள் கொடுப்பதாக ஜெ கூறினார்...கூட்டணியில் ஆரம்பத்தில் இருந்தே இருக்கிறேன்..எனக்கு குறைத்து தருகிறீர்களே..என்றாராம் வைகோ.

அதற்கு ஜெ 'உங்கள் கட்சியில் எல்லோரும் போய் விட்டார்களே' என்றாராம்.

'போனவர்களால் பாதிப்பு இல்லை, தொண்டர்கள் என்னோடுதான் இருக்கிறார்கள்' என்று வைகோ கூறியும்...ம்..ம்...முன்னேற்றம் இல்லை.

போயஸ் தோட்டத்திலிருந்து அழைப்புக்கு காத்திருக்கிறார்..இது வரை அழைப்பு இல்லை.

பொறுத்திருந்து பார்ப்போம்..

சரித்திரம் திரும்புகிறதா..என்று.

Sunday, March 29, 2009

காங்கிரஸ் - பா.ம.க., ரகசிய கூட்டணி ?

தொகுதி பங்கீடுகள் இரு அணிகளுக்கிடையே முடிந்து விட்டன.

பா.ம.க., கலைஞருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதும்...தாங்கள் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு தயார்..என்று கூறிவந்தது. அ.தி.மு.க.வுடன் கூட்டு ஏற்படுவதற்கு முன்..அன்புமணி..தில்லி சென்று காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து வந்தார்.தங்கபாலு..கடைசி விநாடி வரை பா.ம.க., கூட்டணியில் இருக்கிறது என்றார்.

பின்னரே..அ.தி.மு.க.,உடன் கூட்டணி என பா.ம.க., பொதுக்குழு தேர்ந்தெடுத்ததாக அறிவிக்கப் பட்டது.7 தொகுதிகள் + 2010ல் ஒரு ராஜ்ய சபா சீட் என முடிவு செய்யப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர்,அரக்கோணம்,திருவண்ணாமலை,கள்ளக்குறிச்சி,சிதம்பரம்(ரி),தர்மபுரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகள் ப.ம.க.விற்கு ஒதுக்கப்பட்டன.

நேற்று..தி.மு.க., காங்கிரஸ் தொகுதி பங்கீடு முடிந்தது.காங்கிரஸ் 16 தொகுதிகள்..ஆனால் புதுச்சேரி விடுத்து..பா.ம.க., போட்டியிடும் எத்தொகுதியையும் காங்கிரஸ் வாங்கிக்கொள்ளவில்லை.அதனால் இரண்டு கட்சிகளிடையே ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டிருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது.

மேலும்...கபில்சிபில் போன்ற காங்கிரஸ் தலைவர்கள்..தேர்தலுக்குப் பின் பா.ம.க., திரும்பி வந்துவிடும் என்று சொன்னதால் சந்தேகம் வலுக்கிறது.

லாலு.பாஸ்வான்,ராமதாஸ் ஆகியோர் காங்கிரஸ் அணியில் இல்லாமல்..தேர்தலுக்குப் பின் ஆதரிப்பார்கள் என்பது...நம் ஜனநாயகத்தை நம் அரசியல்வாதிகள் எவ்வளவு கேலிக்கூத்து ஆக்கிவிட்டிருக்கிறார்கள் என்பதை தெரிவிக்கிறது.

மேலும் ஜெ விடம் தேர்தலுக்குப் பிறகு அணிகள் மாறுமா? என்று கேட்டதற்கு...தேர்தல் முடிவுகள் வரும்வரை காத்திருங்கள் என்று கூறியுள்ளார். ஆகவே தேர்தல் முடிவிற்கு பின் பல மாற்றங்கள் ஏற்படலாம்.

அப்படி பா.ம.க., காங்கிரஸ் ரகசிய கூட்டணி இருக்குமேயானால்......பா.ம.க., போட்டியிடும் தொகுதிகளில் தி.மு.க.,விற்கு காங்கிரஸ் உண்மையாக வேலை செய்வார்களா?

பொறுத்திருந்து பார்ப்போம்.

Monday, March 23, 2009

தைரியமான கட்சி தே.தி.மு.க., வா..இல்லை பா.ஜ.க.வா?

அவனவன் எந்த கூட்டணியிலே சேர்ந்தா..சில தொகுதிகள் கிடைக்கும்...நம்ம கட்சியும் நாடாளுமன்றத்துக்கு போகும்னு நினைச்சுக்கிட்டிருக்கிற தமிழகத்தில் ..தைரியம் உள்ள கட்சிகளும் உண்டு.

இக்கட்சிகளுக்கு...தங்கள் பலம் தெரியுமா? என்று தெரியாது என்றே எண்ணத் தோன்றுகிறது.

கார்த்திக்..என்ற ஒரு நடிகர் இருந்தாரே..ஞாபகம் இருக்கிறதா...அவர் 3 தொகுதிகளில் போட்டி இடப் போகிறாராம்.

சரத்குமார் கட்சி..சமீபத்திய திருமங்கலம் சட்டசபை இடைத்தேர்தலில்..படு தோல்வி அடைந்தது.ஆனால்..அக்கட்சி..பா.ஜ.க.வுடன் கூட்டாம்..(பாவம் பா.ஜ.க.)

தே,மு.தி.க., இவர் கட்சி தனித்தே 40 தொகுதிகளிலும் போட்டியாம்..அதற்கு..ஒருநாள்..அந்த தலைவர் பேசிய கூட்டத்தில்..(ஆயிரம் பேர் வந்திருப்பார்களா? அந்த கூட்டத்திற்கு) மக்கள் ஆதரவு கொடுத்துள்ளார்களாம்.

பீகார்..உ.பி., போன்ற மாநிலங்களில் அவமானப்பட்டாலும்...காங்கிரஸ் என்னும் தேசிய கட்சிக்கு..தமிழகத்தில்..தி.மு.க., கூட்டணியில்...கணிசமான அளவு தொகுதிகள் கிடைக்கலாம்.ஏனெனில்...இங்குள்ள பெரிய திராவிடக் கட்சிகளில்..ஏதேனும் ஒன்றுடன் சேர்ந்தால்தான்..அத் திராவிட கட்சிக்கும் சரி, காங்கிரஸிற்கும் சரி வெற்றி பெறலாம்.(லாலு போலோ பாஸ்வான் போலோ..தைரியமானவர்கள் இல்லை..இங்குள்ள திராவிட கட்சியினர்)

தமிழகத்தில் ஜெ தான் இரண்டாவது அணி..இரண்டு கம்யூனிஸ்ட் களுடனும்..வைகோ என்ற தனி நபர் கட்சியுடன் கூட்டு.

பா.ஜ.க., இங்கே மூன்றாவது அணி.பாவம்...இக்கட்சி இங்கு ஒரு தீண்டத் தகா கட்சி போலவே இருக்கிறது.

டெபாசிட் பறிபோகும் நிலையில்...தே.மு.தி.க., பா.ஜ.க.,..இதை இக் கட்சியினர் உணர்வார்களா தெரியாது.

திருமாவளவனை பொறுத்தவரை...தி.மு.க., கூட்டணியில்..ஒன்றோ, இரண்டோ தொகுதி வாங்கி விடுவார்.

பா.ம.க., ???? இப்போதைக்கு இரண்டு பக்கமும் தலையுள்ள மண்புழு...இன்னும் ஆதாய கணக்கு முடியவில்லை என்றே தெரிகிறது.

நாளை பார்ப்போம்.

Sunday, March 22, 2009

விஜய்காந்த் செய்வது சரியா....

விஜய்காந்த்..மக்களுடன்தான் கூட்டணி..என்று சொன்னதன் மூலம்...அவர்..தி.மு.க.,கூட்டணியிலோ..அ.தி.மு.க., கூட்டணியிலோ சேரப்போவதில்லை என்பதைக் கூறிவிட்டார்.மேலும்..நான் சொல்லும் நபருக்கு வாக்களியுங்கள் என்றும் கூறுகிறார்.

அப்படியெனில்...வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவர் கட்சி 40 தொகுதிகளிலும் போட்டியிடாது என பொருள் கொள்ளலாம்.

இப்படிப்பட்ட முடிவை அவர் எடுத்ததால்..யாருக்குப் பயன்?

கண்டிப்பாக..தி.மு.க.,கூட்டணிக்குத்தான்.ஏனெனில்..சாதாரணமாக விஜய்காந்த்திற்கு விழும் வாக்குகள்..அ.தி.மு.க.விற்கு விழவேண்டிய வாக்குகள்...என அரசியல் வட்டத்தில் கூறுவதுண்டு.மேலும்..பா.ம.க.விற்கும்..விஜய்காந்திற்கும் என்றும் ஒத்துப்போகாது..ஆகவே விஜய்காந்த் வாங்கும் வாக்குகளில் கணிசமானவை பா.ம.க.வாக்குகளாகவும் இருக்கக்கூடும்.

இநிலையில் பா.ம.க.எடுக்கும் முடிவு முக்கியமானது.இச் சந்தர்ப்பத்தில்..பா.ம.க., தி.மு.க.கூட்டணியில் இருந்தால் தான்..சில தொகுதிகளில் ஆவது வெற்றி பெறலாம். இல்லையேல் அதன் கணக்கு பூஜ்யமாகத்தான் இருக்கும்.

ஒரு சட்டசபை தொகுதிக்கு..10000 முதல் 15000 வாக்குகள் வரை விஜய்காந்த் வாங்குவார் எனில்...ஒரு பாராளுமன்ற தொகுதியில் அவரால் கிட்டத்தட்ட 90000 வாக்குகள் வரை வாங்கமுடியும்.இது பல தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி வாய்ப்பை பாதிக்கலாம்.முக்கியமாக பா.ம.க., போட்டியிடும் இடங்களில் அதன் வேட்பாளர்களை இது பாதிக்கும்.

விஜய்காந்தின்..இந்த முடிவு..அவருக்கும் பயன் தராது..அவர் சுட்டிக்காட்டி வாக்களிக்க சொல்லப் போகும் வேட்பாளருக்கும் பயன் தராது. அவரது கட்சிக்கு இருக்கும் உண்மையான ஆதரவை இது தெரிவிக்கும்.

இது ஒரு மாநிலக் கட்சிக்கு நல்லதல்ல என்றே தோன்றுகிறது. சட்டசபை தேர்தல் எனில் இம்முடிவை வரவேற்கலாம்.

இது நாடாளுமன்ற தேர்தல்...விஜய்காந்த் தன் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.