Thursday, April 16, 2009

அம்மன் துதி பாடும் மருத்துவர் அய்யா...

நேற்று சென்னையில் அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகம் செய்யும் கூட்டம் நடந்தது.இனி மேல் வேட்பாளர் மாற்றம் வராது என நம்புவோமாக.

வெளியூர்களிலிருந்து பல வேன்களில் தொண்டர் கூட்டம் குவிந்தது.அலுவலகம் முடிந்து வீடு திரும்பும்...சாமான்யர்கள் பேருந்தில்...வாகன நெரிசல்களில் மாட்டிக்கொண்டு..வழக்கத்தைவிட ஓரிரு மணிகள் தாமதமாக வீடு போய் சேர்ந்தனர்.மே 13 வரை...இந்த நிலைதான்...என ஆங்காங்கே முணுமுணுப்புகள் இருந்தன.

கூட்டணி தலைவர்கள் பிரகாஷ் காரத்,ஏ.பி.பரதன்,ராஜா,வைகோ,வரதராஜன்,பாண்டியன் ஆகியோர்கள் பேசினர். வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி ஜெ பேசினார்.

ஆமாம்...முக்கியமான ஒருவர் எங்கே என்கிறீர்களா?

அந்த தலைவர் பேசவில்லை...ஜெ துதி பாடினார்.அவர் பேச்சின் சாரம்..

ஜெ..யின் பக்கம்தான் மக்கள் சக்தி இருக்கின்றது.தி.மு.க.,விற்கு எதிர் அலை வீசத் தொடங்கிவிட்டது.2008ல் வெள்ளம் வந்த போது கலைஞர் 1510 கோடி கேட்டார்...200 கோடிதான் கிடைத்தது.2005 வெள்ளத்தின் போது..முதலில் 500 கோடிகேட்டார் ஜெ அந்த தொகை கிடைத்தது.மீண்டும் 500 கோடி கேட்டார்.அதுவும் கிடைத்தது.காரணம் ராசி ஒருபக்கம் இருந்தாலும்..முகராசி என்ற ஒன்றும் உண்டு.(கலைஞருக்கு முகராசி இல்லை என்கிறாரோ?)

ஜெ பேசுகையில்...தமிழகம் சுட்டிக்காட்டுபவரே...இந்தியாவின் அடுத்த பிரதமர் ஆவார் என்றார்.???!!!

7 comments:

குடுகுடுப்பை said...
This comment has been removed by the author.
குடுகுடுப்பை said...

ஜெ பேசுகையில்...தமிழகம் சுட்டிக்காட்டுபவரே...இந்தியாவின் அடுத்த பிரதமர் ஆவார் என்றார்.???!!!

//

இது என்னவோ உண்மை

கோவி.கண்ணன் said...

//ஜெ..யின் பக்கம்தான் மக்கள் சக்தி இருக்கின்றது.தி.மு.க.,விற்கு எதிர் அலை வீசத் தொடங்கிவிட்டது.2008ல் வெள்ளம் வந்த போது கலைஞர் 1510 கோடி கேட்டார்...200 கோடிதான் கிடைத்தது.2005 வெள்ளத்தின் போது..முதலில் 500 கோடிகேட்டார் ஜெ அந்த தொகை கிடைத்தது.மீண்டும் 500 கோடி கேட்டார்.அதுவும் கிடைத்தது.காரணம் ராசி ஒருபக்கம் இருந்தாலும்..முகராசி என்ற ஒன்றும் உண்டு.(கலைஞருக்கு முகராசி இல்லை என்கிறாரோ?)
//

:)

மருத்துவர் ஐயா சக்தியைக் கூடவே வைத்திருப்பார். கூட்டணி மாறும் போது கூட்டணி தலைவர் பக்கம் சக்தி போய் ஒட்டிக்கும்.

உடன்பிறப்பு said...

//ஜெ..யின் பக்கம்தான் மக்கள் சக்தி இருக்கின்றது.தி.மு.க.,விற்கு எதிர் அலை வீசத் தொடங்கிவிட்டது.2008ல் வெள்ளம் வந்த போது கலைஞர் 1510 கோடி கேட்டார்...200 கோடிதான் கிடைத்தது.2005 வெள்ளத்தின் போது..முதலில் 500 கோடிகேட்டார் ஜெ அந்த தொகை கிடைத்தது.மீண்டும் 500 கோடி கேட்டார்.அதுவும் கிடைத்தது.காரணம் ராசி ஒருபக்கம் இருந்தாலும்..முகராசி என்ற ஒன்றும் உண்டு.(கலைஞருக்கு முகராசி இல்லை என்கிறாரோ?)
//

அப்போது கூட கோடிகள் பற்றிய உதாரணம் தான் ராமதாஸுக்கு கிடைத்து இருக்கிறது

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
குடுகுடுப்பை
கோவி.கண்ணன்
உடன்பிறப்பு

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இருக்கிற இடத்தில் நல்ல பிள்ளையா இருந்துக்கோனு!
அதைத் தான் அவர் செய்திருக்கிறார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பாரதி