Thursday, April 30, 2009

தி.மு.க., தேர்தல் நடத்தை விதிமீறல்..???

நேற்று தமிழகத்து பேருந்து பயணிகளுக்கு ..பேருந்தில் ஏறியதும்..ஆச்சரியம் ஏற்பட்டது.பேருந்து கட்டணங்கள் குறைக்கப்பட்டிருந்தது.

அதுவும்...சாதாரணமான குறைப்பு இல்லை...மிகவும் குறைப்பு.உதாரணமாக தாழ்தள பேருந்தில்...பாரிமுனையிலிருந்து...ஆவடிக்கு முன்னர் 13 ரூபாய் கட்டணம்...நேற்று முதல் அது 6 ரூபாயாகிவிட்டது.

தமிழகம் முழுதும் பேருந்துகளில் ஒரே சீரான கட்டணம் நேற்று முதல் அமுலுக்கு வந்தது.

முன்னர்..2 ரூபாய் கட்டணத்திற்கு..எல்.எஸ்.எஸ்.,எம் சர்வீஸ்,எக்ஸ்பிரஸ்,டீலக்ஸ்..ஆகியவற்றிற்கு முறையே 2.50.,3.,4., ரூபாய் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன.இது மறைமுகமாக கூடுதல் கட்டணம் ஏற்றப்பட்டுள்ளதாக மக்களிடையே கருத்து நிலவி வந்தது.இந்நிலையில்..நேற்று முதல்...எல்லா பேருந்துகளிலும் சாதாரண கட்டணமே வசூலிக்கப்படுகிறது.ஏ.சி. பஸ் கட்டணத்தில் மாற்றமில்லை.

இது..மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆனால்..இந்நிலை எதுவரை நீடிக்கும்..என்ற ஐயமும் உள்ளது.

எதிர்க்கட்சிகள்..இது தேர்தலுக்காக..தி.மு.க., அரசின் செயல் என்று கூறினாலும்..மெட்ரோ நிர்வாகிகள்...நிர்வாகம் சம்பந்தப்பட்ட விஷயம் எனக் கூறுகின்றனர்.

ஆனால்...தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவோ..பஸ் கட்டணத்தைக் குறைத்தது..கண்டிப்பாக தேர்தல் நடத்தை விதிமீறல் என்றும்..இது விஷயமாக தலைமை தேர்தல் கமிஷனுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளதாகவும் சொன்னார்.

நவீன் சாவ்லா..இது விதிமீறல் அல்ல என சொல்வார் என எதிர்ப்பார்ப்போம்.

8 comments:

ramalingam said...

மக்களுக்கு கோபம்தான் வர வேண்டும். மகிழ்ச்சி வந்ததென்றால், இந்த ஜென்மத்தில் திருந்தப்போவதில்லை என்று அர்த்தம்.

குடுகுடுப்பை said...

மக்களுக்கும் நல்லது நடந்தா சரிதான்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
ramalingam
குடுகுடுப்பை

அத்திரி said...

ஐயா இதை பற்றி நானும் பதிவு எழுதியிருக்கேன்.. கட பக்கம் வரவும்..

இந்த கட்டணகுறைப்புக்கு நம்ம போக்குவரத்து அமைச்சர் கொடுத்திருக்கிற அறிக்கை செம காமெடி....

Selva said...
This comment has been removed by the author.
Selva said...

திமுக வந்து இப்போ சோனியாஅருவருடியா இருப்பதால் குருக்களாக இருக்கிறார். எனவே குருக்கள் கு.வினால் குற்றம் இல்லை என்று தேர்தல் அதிகாரி அறிவிப்பார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அத்திரி said...
ஐயா இதை பற்றி நானும் பதிவு எழுதியிருக்கேன்.. கட பக்கம் வரவும்..//
வந்தேன்..படித்தேன் அத்திரி...
வருகைக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Selva said...
குற்றம் இல்லை என்று தேர்தல் அதிகாரி அறிவிப்பார்.//

:-))))