Tuesday, April 21, 2009

பூனைக்கும் தோழன்..பாலுக்கும் காவலா கலைஞர்?

இலங்கை தமிழருக்காக நான் குரல் கொடுப்பதை நாடகம் என்றும்..மோசடி என்றும்...விமரிசனம் செய்வதை என்னால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை.

மத்திய அரசை நான் வலியுறுத்தவில்லையா?

கடிதம் எழுதவில்லையா?

பிரதமரை சந்திக்கவில்லையா?

சோனியாவை பார்க்கவில்லையா?

பிரணாப்முகர்ஜியை சென்னைக்கு வரச்செய்து பேசவில்லையா?

ப.சிதம்பரத்திடம் விவாதிக்கவில்லையா?

தந்திகள் கொடுக்கவில்லையா?

அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தவில்லையா?

மனித சங்கலி நடத்தவில்லையா?

நீதி அரசர்கள் கொண்ட குழுவை..தில்லிக்கு அனுப்பி குடியரசு தலைவர், சோனியா ஆகியோருடன் பேசச் செய்யவில்லையா?

என்ன செய்யவில்லை? இவ்வளவு செய்தும் ..அரசியலுக்காக நான் நாடகம் ஆடுகிறேன் என இவர்கள் கூறலாமா?

(சமீபத்தில் நடந்த பேரணி...நாளைக்கு நடக்க இருக்கும்..பொது வேலைநிறுத்தம்..இதை சொல்ல ஏன் மறந்தார்?)

கூறுபவர்கள் கூறட்டும்...கூர்த்த மதி படைத்தோர்க்கு..உண்மை புரியும் ...என...இலங்கை தமிழர் பிரச்னைக்காக கண்ணிர் வடிக்கும் கலைஞர் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்...மத்திய அரசைப் பொறுத்தவரை இது இன்னொரு நாட்டு பிரச்னை.மிகுந்த எச்சரிக்கையுடனும்..கவனத்தோடும் அணுகிட வேண்டிய பிரச்னை..என்றும் கூறியுள்ளார்.

10 comments:

மதிபாலா said...

என்ன எழவு சார் இது ?


யோவ் , ஆமாம் நான் அப்படித்தான். மத்தவங்க என்ன பண்ணிக் கிழிச்சாங்கன்னு சொல்ற நேர்மையிருந்தாலே வுழுகிற வோட்டுல கொஞ்சம் சேர்த்து வுழும். எதுக்காக இப்படி நீலிக்கண்ணீர்?

Unknown said...

தமிழ் துரோகி இவர் கடிதம் எழுதி எழுதி இத்தனை நாள் கிழிச்சதை தான் பார்த்தோமே

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலைஞர் நம் பொறுமையையும் சோதிக்கிறாரே மதி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Tamil said...
தமிழ் துரோகி இவர் கடிதம் எழுதி எழுதி இத்தனை நாள் கிழிச்சதை தான் பார்த்தோமே//

:-((((

Suresh said...

சும்மா நானும் இருக்கேன் தமிழனுக்கு என்று செய்வது பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும் தாத்தா

Suresh said...

//கலைஞர் நம் பொறுமையையும் சோதிக்கிறாரே மதி//

ஆமாம் தோழா

narsim said...

என்னத்தச்சொல்ல ஸார்?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Suresh said...
சும்மா நானும் இருக்கேன் தமிழனுக்கு என்று செய்வது பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும் தாத்தா//

:-))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சுரேஷ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி narsim