தொகுதி பங்கீடுகள் இரு அணிகளுக்கிடையே முடிந்து விட்டன.
பா.ம.க., கலைஞருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதும்...தாங்கள் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு தயார்..என்று கூறிவந்தது. அ.தி.மு.க.வுடன் கூட்டு ஏற்படுவதற்கு முன்..அன்புமணி..தில்லி சென்று காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து வந்தார்.தங்கபாலு..கடைசி விநாடி வரை பா.ம.க., கூட்டணியில் இருக்கிறது என்றார்.
பின்னரே..அ.தி.மு.க.,உடன் கூட்டணி என பா.ம.க., பொதுக்குழு தேர்ந்தெடுத்ததாக அறிவிக்கப் பட்டது.7 தொகுதிகள் + 2010ல் ஒரு ராஜ்ய சபா சீட் என முடிவு செய்யப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர்,அரக்கோணம்,திருவண்ணாமலை,கள்ளக்குறிச்சி,சிதம்பரம்(ரி),தர்மபுரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகள் ப.ம.க.விற்கு ஒதுக்கப்பட்டன.
நேற்று..தி.மு.க., காங்கிரஸ் தொகுதி பங்கீடு முடிந்தது.காங்கிரஸ் 16 தொகுதிகள்..ஆனால் புதுச்சேரி விடுத்து..பா.ம.க., போட்டியிடும் எத்தொகுதியையும் காங்கிரஸ் வாங்கிக்கொள்ளவில்லை.அதனால் இரண்டு கட்சிகளிடையே ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டிருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது.
மேலும்...கபில்சிபில் போன்ற காங்கிரஸ் தலைவர்கள்..தேர்தலுக்குப் பின் பா.ம.க., திரும்பி வந்துவிடும் என்று சொன்னதால் சந்தேகம் வலுக்கிறது.
லாலு.பாஸ்வான்,ராமதாஸ் ஆகியோர் காங்கிரஸ் அணியில் இல்லாமல்..தேர்தலுக்குப் பின் ஆதரிப்பார்கள் என்பது...நம் ஜனநாயகத்தை நம் அரசியல்வாதிகள் எவ்வளவு கேலிக்கூத்து ஆக்கிவிட்டிருக்கிறார்கள் என்பதை தெரிவிக்கிறது.
மேலும் ஜெ விடம் தேர்தலுக்குப் பிறகு அணிகள் மாறுமா? என்று கேட்டதற்கு...தேர்தல் முடிவுகள் வரும்வரை காத்திருங்கள் என்று கூறியுள்ளார். ஆகவே தேர்தல் முடிவிற்கு பின் பல மாற்றங்கள் ஏற்படலாம்.
அப்படி பா.ம.க., காங்கிரஸ் ரகசிய கூட்டணி இருக்குமேயானால்......பா.ம.க., போட்டியிடும் தொகுதிகளில் தி.மு.க.,விற்கு காங்கிரஸ் உண்மையாக வேலை செய்வார்களா?
பொறுத்திருந்து பார்ப்போம்.
2 comments:
//லாலு.பாஸ்வான்,ராமதாஸ் ஆகியோர் காங்கிரஸ் அணியில் இல்லாமல்..தேர்தலுக்குப் பின் ஆதரிப்பார்கள் என்பது...நம் ஜனநாயகத்தை நம் அரசியல்வாதிகள் எவ்வளவு கேலிக்கூத்து ஆக்கிவிட்டிருக்கிறார்கள் என்பதை தெரிவிக்கிறது.
மேலும் ஜெ விடம் தேர்தலுக்குப் பிறகு அணிகள் மாறுமா? என்று கேட்டதற்கு...தேர்தல் முடிவுகள் வரும்வரை காத்திருங்கள் என்று கூறியுள்ளார். ஆகவே தேர்தல் முடிவிற்கு பின் பல மாற்றங்கள் ஏற்படலாம்.
//
:)
ஜெ மிகுதியாக இடங்களைப் பெற்றால், ஜெவும், பாமக வும் மத்தியில் காங்கிரசை ஆதரிப்பார்கள். இங்கே தமிழகத்தில் சிறுபாண்மை அரசு கவிழும். கலைஞர் காங்கிரசை கழட்டிவிடாதற்கு காரணம் தற்காப்பு தான்.
ஜெ வின் கணக்கு அதுவாகத்தான் இருக்கும்..அதனால்தான் காங்கிரஸை முன்னரே கூட்டணிக்கு அழைத்து உள்ளார் தேர்தல் அறிவிப்புக்கு முன்
Post a Comment