Thursday, April 23, 2009

பாவம்...பாவம்...பரிதாபம்...வைகோ..


வைகோ...என்னைப்போன்ற பலரால் ரசிக்கப்பட்ட அரசியல்வாதி...

கலைஞரைத் தவிர்த்து...குமரி அனந்தன், வைகோ பேச்சுக்களால் கவரப்பட்டவன் நான்.

தி.மு.க.,வில் இருந்த போது தன்மானம் பாதிக்கப்பட்டதாலும்...கொலைபழிச்சொல் சொன்னதாலும்..வெளியே வந்து மறுமலர்ச்சி கழகத்தை ஆரம்பித்தபோது...மறுபடியும்..அவர் அரசியல் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும் என எண்ணியவன் நான்.ஆரம்பகாலங்களில் அதற்கான சத்தியகூறுகள் இருந்தன.ஆனால்..மீண்டும்..தன்னை பழி சொல்லி அனுப்பிய தி.மு.க., வுடன் ஒரு சில இடங்களுக்காக கூட்டு வைத்த போது...சற்று தரம் தாழ்ந்தாலும்...ஏற்கனவே இருந்த கட்சியுடன் கூட்டு வைக்கிறார்...மறப்போம்..மன்னிப்போம்...பாணியில் என்றே எண்ணினோம்.

ஆனால்..அடுத்து வந்த தேர்தலில்...ஒரு சில இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும் என்றதும்...தன்னை பொடா..வில் தள்ளிய வரலாற்றை மறந்து ஜெ யுடன் கூட்டணி வைத்தார்.

அவரின் இன்றைய நிலை...

நேற்று ஜெ வைகோவிற்கு..ஆதரவாக சிவகாசி அருகே ஒரு கூட்டத்தில் பேசினார்...அப்போது வேட்பாளர் வைகோவை அறிமுகப்படுத்தினார்.ஒரு கட்சியின் தலைவர் ...அறிமுகப்படுத்தப்படுகிறார்.
அந்த புகைப்படத்தைப் பாருங்கள்.அதற்குமேல் எழுத்துக்களால் சொல்லமுடியப் போவதில்லை.

(இதே வைகோ..மனுதாக்கல் செய்தபோது...அதிகாரி உட்கார்ந்து மனுவை பெற்றுக்கொண்டார் என்பதற்காக...நின்று வாங்கமுடியாதா? என்று கேட்டார்.உட்கார்ந்து வாங்கினால் தனக்கு அவமானம்
என்ற ரீதியில்.)

29 comments:

கோவி.கண்ணன் said...

//இதே வைகோ..மனுதாக்கல் செய்தபோது...அதிகாரி உட்கார்ந்து மனுவை பெற்றுக்கொண்டார் என்பதற்காக...நின்று வாங்கமுடியாதா? என்று கேட்டார்.உட்கார்ந்து வாங்கினால் தனக்கு அவமானம்
என்ற ரீதியில்.) //

அரசு அலுவலர்கள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல. அரசியல் தலைவர்கள் மக்கள் பிரதிநிதிகள் (என்பது நம்பிக்கை) ஒரு தலைவருக்கு கொடுக்கப்படும் மரியாதை தனிப்பட்ட ஒருவருக்கானது அல்ல.

இதுவே ஜெ / அஞ்சாநெஞ்சன் என்றால் அந்த அலுவலர் எப்படி நடந்து கொள்வார் என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

வைகோ மீது விமர்சனங்கள் இருந்தாலும், அலுவலரின் செயல் சரியான செயலாக என்னால் நினைக்க முடியவில்லை.

காவல் தூறையில் வேலை செய்பவர்கள் அனைவருமே மனிதர்கள் தான், உயர் அலுவலர்களுக்கு சல்யூட் அடிக்க வேண்டும் என்பது மட்டும் ஞாயமா ?

அப்படிப் பார்த்தால் அரசு பதவியில் இருக்கும் அரசியல் தலைவர்கள் பிரதமர் உட்பட யாருக்கும் சிறப்பு வணக்கமே செலுத்தக் கூடாது.

வைகோவை ஒரு வேட்பாளராக பார்க்காமல் அவரும் ஒரு மக்கள் பிரதிநிதி பல முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று பார்த்திருக்க வேண்டும்.

எழுந்து நிற்காமல் இருந்தது அந்த அலுவலிரின் தான் தோன்றித்தனமான செயல். மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெருபவர் அம்மக்களில் மக்களில் ஒருசாரர் தலைவனாக ஏற்றுக் கொள்ளும் ஒருவரை மதித்து நடந்தால் என்ன தவறு ?

மதிபாலா said...

ஹிஹிஹி. கலெக்டரிடம் சண்டை போடலாம். ஆனால் அம்மாவிடம் ?

காத்தப் புடுங்கிடுவாங்க.

வைகோ நேற்று இரண்டு அநாகரீகமான செயல்களை மனுத்தாக்கலின் போது செய்திருக்கிறார். ஒன்று தேர்தல் அதிகாரியிடம் , இன்னொன்று வெளியே இருந்த தேமுதிக தொண்டர்களிடம்.

பாவம் , வீட்ல என்ன கடுப்போ. !

மதிபாலா said...

வைகோவை ஒரு வேட்பாளராக பார்க்காமல் அவரும் ஒரு மக்கள் பிரதிநிதி பல முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று பார்த்திருக்க வேண்டும்..//

அதே வைகோ தாம் பேசுவது தமது காரியதரிசி அல்ல , ஒரு அரசாங்கத்தின் ஊழியர் , தேர்தல் அதிகாரி என்பதை மனதில் வைத்திருக்க வேண்டும். தமது சொந்த விருப்பு வெருப்புக்களை அரசியல் ஆக்கும் முயற்சி.

கோவி.கண்ணன் said...

//அதே வைகோ தாம் பேசுவது தமது காரியதரிசி அல்ல , ஒரு அரசாங்கத்தின் ஊழியர் , தேர்தல் அதிகாரி என்பதை மனதில் வைத்திருக்க வேண்டும். தமது சொந்த விருப்பு வெருப்புக்களை அரசியல் ஆக்கும் முயற்சி.//

நான் கேட்டதற்கு பதில் சொல்லுங்க வைகோ இடத்தில் அம்மாவோ, மதுரை அஞ்சா நெஞ்சனோ இருந்தால் அந்த தேர்தல் அலுவலர் அப்படித்தான் நடந்து கொள்வாரா ?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வைகோ திமுகவுடன் கூட்டணி வைத்ததை விட அதிமுகவுடன் கூட்டணி வைத்தது தவறு என்பது போல் சொல்லி இருக்கிறீர்கள்.

திமுகவை விட்டு அவரை வெளியேற்றியதன் நோக்கம் என்ன?

அதிமுகவால் அவருக்குக் கிடைத்தது பொடா வாசம்.

திமுக -வை விட்டு வெளியேற்றிய போது ஒரு சில உயிர்கள் போனதே(நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன்..!)

உயிர்கள் பெரிதா? பொடா பெரிதா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

///கோவி.கண்ணன் said...
//அதே வைகோ தாம் பேசுவது தமது காரியதரிசி அல்ல , ஒரு அரசாங்கத்தின் ஊழியர் , தேர்தல் அதிகாரி என்பதை மனதில் வைத்திருக்க வேண்டும். தமது சொந்த விருப்பு வெருப்புக்களை அரசியல் ஆக்கும் முயற்சி.//

நான் கேட்டதற்கு பதில் சொல்லுங்க வைகோ இடத்தில் அம்மாவோ, மதுரை அஞ்சா நெஞ்சனோ இருந்தால் அந்த தேர்தல் அலுவலர் அப்படித்தான் நடந்து கொள்வாரா ?//
ஒருசமயம் இதே அதிகாரியாய் இருந்தால் அவர்களிடமும் அப்படியே வாங்கியிருக்கக்கூடும்...ஆனால் இந்த அதிகாரி வைகோவையும் அமரச்செய்துதான் மனு பெற்றார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஜோதிபாரதி said...
வைகோ திமுகவுடன் கூட்டணி வைத்ததை விட அதிமுகவுடன் கூட்டணி வைத்தது தவறு என்பது போல் சொல்லி இருக்கிறீர்கள்.

திமுகவை விட்டு அவரை வெளியேற்றியதன் நோக்கம் என்ன?

அதிமுகவால் அவருக்குக் கிடைத்தது பொடா வாசம்.

திமுக -வை விட்டு வெளியேற்றிய போது ஒரு சில உயிர்கள் போனதே(நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன்..!)

உயிர்கள் பெரிதா? பொடா பெரிதா?///
தர்மபுரி பேருந்து எரிப்பு பெரிதா...தினகரன் அலுவலக எரிப்பு பெரியதா?
தி.மு.க.வில்.அவர் மதிக்கப்பட்டதைவிட அ.தி.மு.க.,வில் அவர் மதிக்கப்படுகிறார் என்றால் மகிழ்ச்சிதான்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
மதிபாலா
ஜோதிபாரதி sir
கோவி

goma said...

அஹ்..ஹ்..ஹா..,
அரசியல்லே இதெல்லாம் சகஜமப்ப்ப்ப்....பா
வேட்பாளர்கள் எப்படியும் போகட்டும் வாக்காளர்கள் தம் கடமையை,கண்ணியம் தவறாமல் கட்டுப்பாட்டோடு வைத்திருப்போம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி goma

மணிகண்டன் said...

இந்த படத்துல மக்களை பாத்து தான வைகோ கும்பிடராறு ? இதுல என்ன தவறு ?

ஜோதிபாரதி :- வைகோ என்று ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தாரோ அன்றே அவருடைய தீவிர ஆதரவாளர்கள் விலகி சென்றனர். வைகோவால முடியாட்டியும், அவரோட கட்சி தொண்டர்கள் கலைஞருடன் உள்ள கூட்டணியை ஜீரணிக்க முடிகிறது. எனது நண்பனின் தந்தை தீவிர வைகோ பக்தர் ! ஆனால் அவரால் வைகோ / ஜேஜே கூட்டணியை சகித்து கொள்ள முடியவில்லை.

மணிகண்டன் said...

போலீஸ், கோர்ட், மிலிட்டரி - All these are hierarchial institutions. அங்கே டிச்சிப்ளின் மிக முக்கியம். அதனால் இந்த comparison சரி இல்லை.

அதே சமயம் ஒரு பெரியவர் வரும் பொழுது எழுந்து நின்று வரவேற்பதில் எந்த தவறும் இல்லை. (அரசாங்க தேர்தல் அதிகாரியாக இருந்தாலும்)

அவ்வாறு செய்யாதபோது, அதை வைத்து அரசியல் செய்வது சிறுபிள்ளைதனமானது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

கும்பிடுவது தவறில்லை..அம்மா அவரை அறிமுகப்படுத்தினாரே! அது நகைப்புக்குரிய செயல் அல்லவா...அம்மா பேசி முடிக்கும்வரை கும்பிட்டபடியே நிற்பது...நகைப்புக்குரிய செயல் அல்லவா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

///மணிகண்டன் said...
போலீஸ், கோர்ட், மிலிட்டரி - All these are hierarchial institutions. அங்கே டிச்சிப்ளின் மிக முக்கியம். அதனால் இந்த comparison சரி இல்லை.

அதே சமயம் ஒரு பெரியவர் வரும் பொழுது எழுந்து நின்று வரவேற்பதில் எந்த தவறும் இல்லை. (அரசாங்க தேர்தல் அதிகாரியாக இருந்தாலும்)

அவ்வாறு செய்யாதபோது, அதை வைத்து அரசியல் செய்வது சிறுபிள்ளைதனமானது.///
வரும்...ஆனா வராது காமெடியை ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி

மணிகண்டன் said...

***
கும்பிடுவது தவறில்லை..அம்மா அவரை அறிமுகப்படுத்தினாரே! அது நகைப்புக்குரிய செயல் அல்லவா...அம்மா பேசி முடிக்கும்வரை கும்பிட்டபடியே நிற்பது...நகைப்புக்குரிய செயல் அல்லவா?
***

வைகோவை ஒரு திமுககாரராக பார்ப்பவருக்கு நிச்சயமாக இது நகைப்புக்குரிய செயல் தான். மற்றவருக்கு இது அன்றாடம் நிகழும் ஒரு அரசியல். அவ்வளவே. நிச்சயமாக ஜெயலலிதா வைகோவை விட அதிக வாக்கு வங்கி வைத்திருப்பவர். அந்த கூட்டணியின் தலைவரும் கூட. (வைகோ கும்பிட்டது அவரையும் அல்ல !)

dr.sivan said...

/"""எழுந்து நிற்காமல் இருந்தது அந்த அலுவலிரின் தான் தோன்றித்தனமான செயல். மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெருபவர் அம்மக்களில் மக்களில் ஒருசாரர் தலைவனாக ஏற்றுக் கொள்ளும் ஒருவரை மதித்து நடந்தால் என்ன தவறு ?""/

Sorry for my poting is in English... The person who posted this cooments is still in "old India---prior to the year 2000" This shows some of us still carry the Andaan Adimai (read in Tamil) minset that we have to stand up for politicians. No where in the world (read as civilized society, you are required to stand up for POLITICIANS. If Vaiko is representing a Govt (i.e., minister, etc), then also you may stand up to receive. I have NOT seen any one in the U.S and U.K stand up to me to take my orders for office work. My secretaries all these years (although appointed me) Has never stood, and that is the norm. he or she will do their duties...Neither we expect them to stand up to wish.

All these are due to our mentality; that a person considered superior expects their sub-ordinates to stand up to wish and address by "sir" Utter non-sense. Why can't they call by name??? This applies to the collector also!

And certainly, Vaiko expecting these 1950s pseudo-respect, I pity him. This maybe beacuse he was raised in viilages and districts where so-many people below his status woulod have respected althoughg they would have been older to him.

I really pity Vaiko----Change man--get a life for your self...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Siva

கோவி.கண்ணன் said...

//Sorry for my poting is in English... The person who posted this cooments is still in "old India---prior to the year 2000" This shows some of us still carry the Andaan Adimai (read in Tamil) minset that we have to stand up for politicians. //

உயர் அதிகாரிகளுக்கு சல்யூட் அடிப்பதும் சலாம் போடுவதும் எந்த கணக்கில் வரும் ?

அக்னிக்குஞ்சு. said...

சிவகாசி: விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்காக சிவகாசியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, வைகோவின் பெயரை ஒரே ஒரு முறை மட்டுமே சொன்னார்.

வைகோவுக்காக ஓட்டு கேட்க வந்தபோதும்கூட, வைகோவை மேடையில் (நிற்க) வைத்துக் கொண்டே அவரது பெயரை ஒரு முறைக்கு மேல் உச்சரிக்காமல் தனது ஒரு மணி நேர உரையை அவர் முடித்தார்.

அதுவும் வைகோவுக்கு ஓட்டு போடுங்கள் என்று கூட கேட்கவில்லை. மாறாக முதல்வர் கருணாநிதியைத் தாக்கிப் பேசுகையில் மட்டும் மறந்து போயோ என்னவோ வைகோவின் பெயரைச் சொல்லிவிட்டார்.

வழக்கமாக அன்புச் சகோதரர் என்று வைகோவை ஜெயலலிதா கூறுவார். ஆனால், இம்முறை பெயரையே சொல்லாமல் தவிர்த்தார்.

ஆனாலும் பெயரைச் சொல்வார் என்று மதிமுக தொண்டர்களும், ஏன் வைகோவும் கூட எதிர்பார்ப்புடன் இருக்க, அதிமுக கூட்டணியை 40 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்யுங்கள் என்று மட்டும் சொல்விட்டு ஜெயலலிதா பேச்சை முடித்தபோது மேடையில் இருந்த 'அன்பு சகோதரர்' நெளிந்து கொண்டிருந்தார்.

இதனால் இந்தக் கூட்டணி வாக்குப் பதிவுக்கு மறுநாள் நீடிக்குமா என்பது சந்தேகமே.

ஜெயலலிதா பேசியதாவது...

அந்தப் பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசியதாவது: மத்தியில் ஆட்சியில் உள்ள திமுக அங்கம் வசிக்கும் காங்கிரஸ் கூட்டணி அரசு உங்களுக்கு என்ன நன்மை செய்தது?. காங்கிரசும் திமுகவும் இணைந்த மத்திய அரசால் நீங்கள் அடைந்த பயன் என்ன?.

பொருளாதார சீரழிவு, அதிகரித்து வரும் தீவிரவாதம் விவசாயிகள் தற்கொலை, நதி நீர் பங்கீட்டில் பாரபட்சம், வேலை இல்லாத் திண்டாட்டம், தொழில் வளர்ச்சி கடும் பாதிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவைதான் இந்த மத்திய அரசு உங்களுக்கு வழங்கிய பரிசு.

மத்திய அரசின் நிர்வாக திறமையின்மையும் அலட்சிய போக்கும்தான் இதற்கு காரணம். திமுக அரசு மின்சாரத்துக்கு விடுமுறை அளித்தும், மணல் கொள்ளை மூலமும் தமிழகத்தை அழிவு பாதைக்கு அழைத்துச் செல்கிறது. இவர்களுக்கு வரும் தேர்தலில் நீங்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

மத்தியில் திமுக அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து துறையிலும் ஊழல் நடந்திருக்கிறது. ஆனால் அவர்களை பிரதமர் தண்டிக்கவில்லை.
பிரதமரால் தண்டிக்க முடியாத அமைச்சர்களை உங்களால்தான் தண்டிக்க முடியும். அதை நீங்கள் செய்வீர்களா? (செய்வோம்..செய்வோம்.. என கூட்டம் பதில் தந்தது).

நாட்டைக் காப்பாற்ற ஊழல் குற்றவாளிகளை கூண்டில் ஏற்ற அதிமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்யுங்கள். வாக்காளர்களை காசு கொடுத்து வாங்கி விடலாம் என்பது திமுகவின் தேர்தல் திட்டம். திருமங்கலத்தில் கள்ள ஓட்டு போட்டதுபோல் தமிழகம் முழுவதும் விளையாடலாம் என்று நினைக்கிறார்கள். இதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

நேர்மையான ஆட்சி அமைய அதிமுக கூட்டணிக்கு வாக்களித்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அக்னிக்குஞ்சு.

தருமி said...

//அரசு அலுவலர்கள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல. அரசியல் தலைவர்கள் மக்கள் பிரதிநிதிகள் (என்பது நம்பிக்கை) ஒரு தலைவருக்கு கொடுக்கப்படும் மரியாதை தனிப்பட்ட ஒருவருக்கானது அல்ல.

இதுவே ஜெ / அஞ்சாநெஞ்சன் என்றால் அந்த அலுவலர் எப்படி நடந்து கொள்வார் என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.//

கோவி,
மனு பெற்றுக் கொள்ளும்போது அரசு அதிகாரிகள் எழுந்து நின்று அதனப் பெற்றதற்காக (சென்ற தேர்தலின்போது என்று நினைக்கிறேன்) தேர்தல் அதிகாரிகளால கண்டிக்கப்பட்டதாக நினைவு. இப்போது எந்த அரசு அதிகாரியும் எழுந்து நின்று மனுவைப் பெறுவதில்லை.

மதுரையில் அழகிரி, அமைச்சர் ஸ்டாலின் இருவரும் மனு கொடுக்கும்போது உட்கார்ந்தே மனுவைப் பெற்ற படம் இந்துவில் வந்தது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி தருமி

எட்வின் said...

இவரை எல்லாம் என்னவென்று சொல்வது?
வெட்கம் கெட்டு;
ஒட்டு பிட்சை கேக்கும்
ஓடுகாலிகள் இவர்கள்

ராஜ நடராஜன் said...

ஒரு நல்ல பேச்சாளி,தனிக் கட்சியாக மறுமலர்ச்சிக்கான அத்தனை சாத்தியங்கள் இருந்தும் பரிதாபத்துக்குரிய அரசியல் தூரப் பார்வை இல்லாத அரசியல்வாதியாக உருவெடுத்துள்ளார் வை.கோ.

ராஜ நடராஜன் said...

ஆண்டான் மரபுகள் ஒழிக்கப் படவேண்டியதே.அரசு அலுவலர் உட்கார்ந்து மனு பெற்றதை அனைத்து தேர்தல் அலுவலர்களும் இனி வரும் காலங்களில் கடைப் பிடிக்கட்டும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
எட்வின்
ராஜ நடராஜன் sad...

Unknown said...

I am one among the lot who admire Vaiko,but I can't accept the way he planned his carrier,and utterly failed.Even PMK which has a small pocket domination could get the demand fulfilled because it never talk emotionally but always on bussiness.Vaiko is not a person with foreseen thought.
If vaiko express his anguish in puplic means he has no other place to accept his present place in politics which was created by his miscalculations.
The poll officer is right in his position

Unknown said...

I am one among the lot who admire Vaiko,but I can't accept the way he planned his carrier,and utterly failed.Even PMK which has a small pocket domination could get the demand fulfilled because it never talk emotionally but always on bussiness.Vaiko is not a person with foreseen thought.
If vaiko express his anguish in puplic means he has no other place to accept his present place in politics which was created by his miscalculations.
The poll officer is right in his position

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி piravi