Monday, March 30, 2009

ஜெ அணியிலிருந்து வைகோ விலகுவாரா?

தி.மு.க.அணியில் இருந்த வைகோ போன தேர்தலில்..ஒன்றிரண்டு தொகுதிகள் அதிகமாகக் கிடைத்ததால்..கடைசி நிமிடங்களில் அ.தி.மு.க., கூட்டணிக்கு வந்தார்.

ஆனால் இன்று..செஞ்சி ராமசந்திரன்,எல்.கணேசன்..ஆகியோர் விலகினர். பின் கடந்த சில நாட்களில், கண்ணப்பன்.கம்பம் ராமகிருஷ்ணன் ஆகிய எம்.எல்.ஏ.க்களும் விலகினர்.

இந்நிலையில்..பா.ம.க.வுடனும். கம்யூனிஸ்ட்களிடம்...தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் (மார்க்சிஸ்ட் 3 தொகுதி.. தொகுதி மட்டுமே நிச்சயமாகவில்லை) ம.தி.மு.க.உடன்
இழுபறி நீடிக்கிறது.

நேற்று 3 மணி நேரம் பேசியபின் வை.கோ.விற்கு 3 தொகுதிகள் கொடுப்பதாக ஜெ கூறினார்...கூட்டணியில் ஆரம்பத்தில் இருந்தே இருக்கிறேன்..எனக்கு குறைத்து தருகிறீர்களே..என்றாராம் வைகோ.

அதற்கு ஜெ 'உங்கள் கட்சியில் எல்லோரும் போய் விட்டார்களே' என்றாராம்.

'போனவர்களால் பாதிப்பு இல்லை, தொண்டர்கள் என்னோடுதான் இருக்கிறார்கள்' என்று வைகோ கூறியும்...ம்..ம்...முன்னேற்றம் இல்லை.

போயஸ் தோட்டத்திலிருந்து அழைப்புக்கு காத்திருக்கிறார்..இது வரை அழைப்பு இல்லை.

பொறுத்திருந்து பார்ப்போம்..

சரித்திரம் திரும்புகிறதா..என்று.

12 comments:

குடுகுடுப்பை said...

உண்மையிலேயே வைகோ பாவம்தான்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//குடுகுடுப்பை said...

உண்மையிலேயே வைகோ பாவம்தான்.//

ரிப்பீட்டு!!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அம்மையை விட்டு ஐயனிடம் போக வாய்ப்பில்லை.

தனியாக நின்றால் சமக அளவுக்குத்தான் ஓட்டு கிடைக்கும்.

அதற்கே நிறைய பணம் தேவைப்படும்.
பணம் இருக்கும் இடங்கள் முறையே, அ)கருணாநிதி
ஆ)ஜெயலலிதா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி குடுகுடுப்பை

T.V.ராதாகிருஷ்ணன் said...

////ஜோதிபாரதி said...
//குடுகுடுப்பை said...

உண்மையிலேயே வைகோ பாவம்தான்.//

ரிப்பீட்டு!!////

ரிப்பீட்டு!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

///ஜோதிபாரதி said...
அதற்கே நிறைய பணம் தேவைப்படும்.
பணம் இருக்கும் இடங்கள் முறையே, அ)கருணாநிதி
ஆ)ஜெயலலிதா///

:-))))))

கோவி.கண்ணன் said...

தெய்வம் நின்று கொல்லும் அம்மா உட்கார்ந்தே கொல்லுவார்
:)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//கோவி.கண்ணன் said...

தெய்வம் நின்று கொல்லும் அம்மா உட்கார்ந்தே கொல்லுவார்
:)//

இரண்டும் ஒன்னு தானே கோவியாரே(அம்மாவும், தெய்வமும்).
ஒப்பீட்டுக்கு அவசியமே இல்லையே!?

மணிகண்டன் said...

***
அம்மையை விட்டு ஐயனிடம் போக வாய்ப்பில்லை.
***

ஏன் ? தம்பி, அண்ணன்னு கட்டி புடிச்சிக்கிட்டா ஒண்ணா சேர்ந்துடலாமே. இருக்கவே இருக்கு போடோல கைது செஞ்சபோது என்னைய வந்து பாத்த தமிழர்ன்னு சொல்லிக்கலாம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

// கோவி.கண்ணன் said...
தெய்வம் நின்று கொல்லும் அம்மா உட்கார்ந்தே கொல்லுவார்
:)///

பாவம் தெய்வம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஜோதிபாரதி said...
இரண்டும் ஒன்னு தானே கோவியாரே(அம்மாவும், தெய்வமும்).
ஒப்பீட்டுக்கு அவசியமே இல்லையே!?//

அதுதானே

T.V.ராதாகிருஷ்ணன் said...

////மணிகண்டன் said...
***
அம்மையை விட்டு ஐயனிடம் போக வாய்ப்பில்லை.
***

ஏன் ? தம்பி, அண்ணன்னு கட்டி புடிச்சிக்கிட்டா ஒண்ணா சேர்ந்துடலாமே. இருக்கவே இருக்கு போடோல கைது செஞ்சபோது என்னைய வந்து பாத்த தமிழர்ன்னு சொல்லிக்கலாம்.///

:-))))