Thursday, May 7, 2009

பதிவர்களின் மனிதநேயம்...

பதிவர்கள் பெரும்பாலும் ஒருவருக்கு ஒருவர் பதிவுகள் மூலமே அறியப்படுபவர்கள்..ஆனாலும்..ஒரு பதிவருக்கு ஏதேனும் உடல் நலம் சரியில்லையெனில்..பதை பதைப்போர் எவ்வளவு பேர்?
நமக்குள் இந்த அன்னியோனியம் எப்படி வந்தது?

ஒருவருக்கு உடல்நிலை சரியில்லையெனில்..அவருக்காக பிரார்த்தனை செய்பவர்கள் எவ்வளவு பேர்?

கலைஞர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக சேர்ந்து..சிகிச்சை முடிந்து வெளியேறியதும்...மருத்துவ மனையில்..தினசரி நடந்த நிகழ்ச்சிகளை எழுதினார்..அதை சற்று கிண்டல் செய்யும் விதத்தில்..எனக்கு..தலைவலி என்றும்...மருத்துவமனையில் அனுமதி...என ஒரு பதிவிட்டேன்..

உடன்...அந்நிகழ்ச்சியை உண்மையாக நினைத்து..கோவி சிங்கையிலிருந்து தொலைபேசி நலம் விசாரித்தார்.

பதிவர் இயற்கையோ...எதோ ..இதோட போயிற்றே..என என் உடல்நிலை குறித்து கவலைப்பட்டார்.எவ்வளவு வெள்ளந்தி மனம் படைத்தவர் இவர். மனம் கனத்தது..

தினசரி குறைந்தது இரு பதிவாவது இடும் நான்..கடந்த சிலநாட்களாக எப் பதிவும் இடவில்லை..உடன் மணிகண்டன்..எங்கே போயிட்டீங்க? என்கிறார்.

எனக்கும்...மென் துறை யில் வேலை புரியும் பதிவர்கள்..தொடர்ந்து சில நாட்கள் பதிவிடவில்லையெனில்..'ஐயோ..அவர்களுக்கு வேலையில் பிரச்னை ஏற்பட்டிருக்குமோ? என கவலை ஏற்படுகிறது..

பதிவுகள் இடுவதில் லாபம்..இருக்கிறதா என எண்ணுபவர்களுக்கு...இப்படிப்பட்ட நட்பு கிடைக்கிறதே...அது போதாதா?

நட்பைவிட சிறந்தது என்ன இருக்க முடியும்?

(யூத்ஃபுல் விகடனுக்கு நன்றி)

25 comments:

புருனோ Bruno said...

//பதிவுகள் இடுவதில் லாபம்..இருக்கிறதா என எண்ணுபவர்களுக்கு...இப்படிப்பட்ட நட்பு கிடைக்கிறதே...அது போதாதா?

நட்பைவிட சிறந்தது என்ன இருக்க முடியும்? //

உண்மைதான் சார்

குடுகுடுப்பை said...

உங்களுக்கு என் இதயத்தில் எப்போதும் இடம் உண்டு

நசரேயன் said...

//பதிவுகள் இடுவதில் லாபம்..இருக்கிறதா என எண்ணுபவர்களுக்கு...இப்படிப்பட்ட நட்பு கிடைக்கிறதே...அது போதாதா?
//

உண்மைதான் ஐயா

நிகழ்காலத்தில்... said...

\\பதிவுகள் இடுவதில் லாபம்..இருக்கிறதா என எண்ணுபவர்களுக்கு...இப்படிப்பட்ட நட்பு கிடைக்கிறதே...அது போதாதா?

நட்பைவிட சிறந்தது என்ன இருக்க முடியும்?\\

தமிழிஷ்ல் சப்மிட் பண்ணியாச்சு..

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

உண்மைதான் ஐயா!

எவ்வவளவு விவாதங்கள் செய்தாலும், இன்னொரு பதிவரை விட்டுக் கொடுக்காத நிலை மகிழ்வைத் தருகிறது.

கடைக்குட்டி said...

மனசுலேர்ந்து சொல்லி இருக்கீங்க.. நல்லா இருக்கு

*இயற்கை ராஜி* said...

:-) (yenna commentpodurathunnu therilla..athanala smiley)))

Raju said...

நட்பைவிட சிறந்தது என்ன இருக்க முடியும்?

அக்னி பார்வை said...

கொஞ்சம் யோசித்து பார்த்தால் சரிதான் சார், முகத்தௌ கூட பார்த்துக்கொள்வதில்லை ஆனால் வயது வித்தியாசம் பார்க்காமல் சிரித்து மகிழ்ந்தது ஆச்சரியமாக உல்ளது..அதுவும் ஒத்த கருத்துடய நண்பர்கள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தொட்ரும் அபூர்வ நட்புகள்...இது ஒரு வித்தியாச உலகம்...

மங்களூர் சிவா said...

//பதிவுகள் இடுவதில் லாபம்..இருக்கிறதா என எண்ணுபவர்களுக்கு...இப்படிப்பட்ட நட்பு கிடைக்கிறதே...அது போதாதா?

நட்பைவிட சிறந்தது என்ன இருக்க முடியும்? //

கண்டிப்பாக.

நலம், நலமறிய ஆவல்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
Bruno sir
வருங்கால முதல்வர்
நசரேயன்

KRICONS said...

//நட்பைவிட சிறந்தது என்ன இருக்க முடியும்? //

100% உண்மை


உங்களின் இந்த பதிவு யூத்ஃபுல் விகடனில் வந்துள்ளது வாழ்த்துகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

தமிழிழ் இணைப்பு கிடைக்கவைல்லை.இணைத்ததற்கும்..வருகைக்கும் நன்றி அறிவே தெய்வம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஜோதிபாரதி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
கடைக்குட்டி
இய‌ற்கை
டக்ளஸ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்னி பார்வை said...
இது ஒரு வித்தியாச உலகம்...//

yes அக்னி

T.V.ராதாகிருஷ்ணன் said...

சிவா நான் நலம்...ஆமாம் வீட்ல விஷேசம் உண்டா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..தகவலுக்கும் நன்றி KRICONS

சின்னப் பையன் said...

உண்மை உண்மை உண்மை

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ச்சின்னப் பையன்

மணிகண்டன் said...

****
கலைஞர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக சேர்ந்து..சிகிச்சை முடிந்து வெளியேறியதும்...மருத்துவ மனையில்..தினசரி நடந்த நிகழ்ச்சிகளை எழுதினார்..அதை சற்று கிண்டல் செய்யும் விதத்தில்..எனக்கு..தலைவலி என்றும்...மருத்துவமனையில் அனுமதி...என ஒரு பதிவிட்டேன்..

உடன்...அந்நிகழ்ச்சியை உண்மையாக நினைத்து..கோவி சிங்கையிலிருந்து தொலைபேசி நலம் விசாரித்தார்
*****

கோவி, இந்த அளவு வெள்ளந்தியா ???? (டியூப் லைட் தமிழாக்கம்ன்னு நினைச்சி எழுதி இருக்கேன் )

வருண் said...

My experience is that our folks will certainly miss and wonder and worry about us when we are silent for a while.

I was wondering about you too :-). Though I was not keeping track of all your posts. I noticed the silence for few days as you post some posts almost everyday. Thought you might be out of town or of that sort. :)

Anyway, Very nice to see you back, Mr. TVR! :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வெள்ளந்தி என்றால்..உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர், வெள்ளை உள்ளம் படைத்தவர்,வெகுளி என்றெல்லாம் சொல்லலாம்.டியூப் லைட்னு சொல்ல முடியாது.உங்களுக்கு சம்பந்தமில்லா விஷயம் மணி(:-))))) )

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி வருண்

Muhammad Ismail .H, PHD., said...

அன்பின் டி.வி.ஆர்,

நீங்கள் கூறுவது 100% உண்மை. இங்கே யாரும் நேரில் பார்த்தது பழகியது கிடையாது. ஆனால் மிக நெருங்கிய அன்னியோன்த்தை இங்கே காணலாம்.

சமீபத்தில் கத்தாரில் இருக்கும் நம்ம ரிஷான் ஷெரீபிற்கு உடல்நலமில்லை என்றவுடன் பதிவர் அனைவரும் பதை பதைத்து போய்விட்டனர். அது போல PKP யை ரொம்ப நாளாக காணவில்லை என்றவுடன் அனைவரும் தேட ஆரம்பித்துவிட்டோம்.


தற்போது இருவரையும் பற்றி நல்ல தகவல்கள் கிடைத்ததால் அனைவருக்கும் நிம்மதி. இறைவனுக்கு நன்றிகள்.

// பதிவுகள் இடுவதில் லாபம்..இருக்கிறதா என எண்ணுபவர்களுக்கு...இப்படிப்பட்ட நட்பு கிடைக்கிறதே...அது போதாதா?

நட்பைவிட சிறந்தது என்ன இருக்க முடியும்? //

இதை நான் 1000 dB -ல பல தபா மறுக்க கூவிக்குறேன் !!!.

with care and love,

Muhammad Ismail .H, PHD,