தமிழ் ஸ்டுடியோ.காம் வழங்கும் ஏப்ரல் மாத சிறந்த வலைப்பதிவர் விருது
நாள்: சனிக்கிழமை (11-04-09)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: காலை 10 முதல் இரவு 7 வரை
10 AM - 2 PM - உலகப் படங்கள் / உலகக் குறும்படங்கள் / ஆவணப்படங்கள் திரையிடல்
3 PM - 7 PM - குறும்பட வட்டம்
முதல் பகுதி: (3 PM-4 PM) - இலக்கியமும் குறும்படங்களும்
இலக்கியம் பகுதியல் இம்மாதம் "புன்னகை உலகம்" சிற்றிதழின் ஆசிரியர் திரு. "சுசி திருஞானம்" அவர்கள் பங்குபெற்று இலக்கியமும் குறும்படங்களும் என்கிற தலைப்பில் உரையாற்றுகிறார். இவர் "வெற்றியின் அறிவியல்", "நேர நிர்வாகம்", "உனக்குள் ஒரு மேதை", போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார். "விஜய்" தொலைக்காட்சியின் செய்திப் பிரிவில் இன்புட் எடிட்டர் ஆக இருந்துள்ளார். மேலும் சன் நியூஸ் தொலைக்காட்சியின் சேனல் ஹெட் ஆகவும் இருந்துள்ளார். இவர் இம்மாதம் இலக்கியப் பிரிவில் மிகச்சிறந்த சமூதாய தாக்கத்துடன் வெளிவந்த ஒரு சிறுகதை அல்லது நாவலின் ஒரு பகுதி பற்றி நம்மிடையே விரிவாக பேசியும், மேலும் அந்த சிறுகதையை எப்படி படமாக்கலாம் என்று தன்னுடைய விரிவான ஆலோசனையும் வழங்க உள்ளார்.
மேலும் சிறந்த பதிவருக்கான விருது வழங்கும் விழாவும் நடைபெறும். இம்மாதம் சிறந்த பதிவருக்கான விருது பெறுபவர் திரு. வினோத் அவர்கள். இவரது வலைப்பூ.http://agnipaarvai.blogspot.com/
தமிழ் ஸ்டுடியோ.காம் சிறந்த பதிவருக்கான விருது வழங்கும் விழா மாதந்தோறும் சிறந்தப் பதிவர் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றது. விருது வழங்கப்படும் மாதத்திற்கு முந்தைய மாதத்தில் பதிவர் எழுதிய கட்டுரைகள், பதிவுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
10 comments:
பதிவர் அக்னிபார்வை அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்..!
ஆஹா.. நான்தான் பர்ஸ்ட்டா..?
ஒருத்தரோட பதிவுல என் பின்னூட்டம் முதல் இடத்துல இருக்குறது இதுதான் முதல் தடவைன்னு நினைக்கிறேன்..
விரைவில் டி.வி.ஆர். ஸாரும் இந்த விருதினைப் பெற வாழ்த்துகிறேன்..!
வருகைக்கும்...பாராட்டுக்கும்..விருப்பத்திற்கும் நன்றி...உண்மைத்தமிழன்
//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ஒருத்தரோட பதிவுல என் பின்னூட்டம் முதல் இடத்துல இருக்குறது இதுதான் முதல் தடவைன்னு நினைக்கிறேன்..//
அது எனக்கு மட்டுமே கிடைத்தது என மகிழ்ச்சி.
ரொம்ப நன்றி TVR சார். உண்மை தமிழன் அவர்களுக்கும் என் நன்றிகள்.
வருகைக்கு நன்றி அக்னி பார்வை
Sir,
இந்த விழாவில் யார் வேண்டுமானலும் கலந்து கொள்ளலாமா?
எனக்கு மின்னஞ்சலில் அழைப்பு வந்தது.அதனால் அனைவரும் போகலாம் என்றே எண்ணிகிறேன்.வருகைக்கு நன்றி
Post a Comment