Thursday, October 8, 2009

அந்த மூன்று பிரபல பதிவர்கள் மீது மன வருத்தம்

நம் வலைப்பக்கம் அதிகம் படிக்கப் பட வேண்டும்..நிறைய பின்னூட்டங்கள் வர வேண்டும்..என்றெல்லாம் ஆசைப்படாத பதிவர்களே இருக்க முடியாது.அதுவும் பிரபல/மூத்த பதிவர்கள் பின்னூட்டங்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.

அதேபோல..நமக்கு வரும் follwers அதிகரிக்க அதிகரிக்க..நம் ஆனந்தம் எல்லை மீறுகிறது.அதுவும் பிரபல பதிவர் நமக்கு ஃபாலோயர் ஆனால்..!!!!

ஆனால்..அப்படி ஆனந்தப்பட்ட எனக்கு அதிர்ச்சியும்..ஏமாற்றமுமே ஏற்பட்டது.

என் வலைப்பக்கத்திற்கு..மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் மூன்று பிரபல பதிவர்கள் ஃபாலோயர்ஸ் ஆனார்கள்..இவர்களெல்லாம்..இணையதளத்தில்..எவ்வளவு நாட்களாக இருக்கிறார்கள்..இவர்கள் மேல் மதிப்பும்..மரியாதையும் கொண்டேன்.

ஆனால்..அவர்கள் மீதான மதிப்பு..இவ்வளவு விரைவில் அழியும் என எண்ணவில்லை.

முதல் பதிவர்..அவர் புகைப்படம் என் வலைப்பூவின் முகப்பில்..இருந்தவரை ஃபாலோயராக இருந்துவிட்டு..அது மறைந்ததும்..தன் பெயரை டெலிட் செய்து விட்டார்.

எல்லோரும் அப்படியிருக்க மாட்டார்கள் என்று எண்ணினேன்..ஆனல்..அடுத்த சில நாட்களில் மற்றொருவர் இதே போல செய்தார்.

இரு தினங்களுக்கு முன்னர்..மீண்டும் ஒருவர் இதே போல கழண்டுக்கொண்டார்.

அவர்கள் ஃபாலோயராக இருப்பதும்..இல்லாததும் அவர்கள் விருப்பம்..ஒருவேளை..நம் வலைப்பூவின் தரம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் அவர்கள் அப்படி செய்திருக்கலாம்..ஆனால்..சரியாக அவர்கள் முகம் முகப்பில் மறைந்ததும் தான்..கழண்டுக் கொண்டுள்ளார்கள்..அவர்கள் விளம்பரப் பிரியர்கள் என்ற எண்ணத்தை இது தோற்றுவிக்கிறது.அதற்கு இ.வா.,க்கள் நாமதானா கிடைத்தோம்.

அவர்கள் மீது நான் வைத்திருந்த மதிப்பும்..மரியாதையும் சென்றுவிட்டது.

நாகரிகம் கருதி..அவர்கள் பெயரை நான் குறிப்பிடவில்லை..இப்பதிவு கண்டதும்..மீண்டும் இணைவார்கள் என்றால்..அவர்கள் பெயரை நான் டெலிட் செய்து விடுவேன்..

இது உங்களுக்கும் நடந்திருக்குமேயானால்..தமிழ்மணம்,தமிழிஷ் இரண்டிலும் ஓட்டளியுங்கள்

58 comments:

பீர் | Peer said...

அட.. ஆமா. :(

ஓட்டுபோட்டுட்டேன்.

(கழண்டவங்களை எப்படி தெரிஞ்சுக்கிறது?)

cheena (சீனா) said...

இதையெல்லாம் பற்றிக் கவலைப் படாமல் நாம் நம் வழியே சென்று கொண்டிருப்போமே

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நூறாவது பின் தொடர்பவரா சேரலாம்னு நினைத்துக் கொண்டு விலகி இருக்கலாம்.

நிறையப் பேர் நூறாவது பின் தொடரலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பதாலேயே 95க்குப் பிறகு நீண்ட நேரம் ஆகும்போல ஒவ்வொரு பின் தொடர்பவருக்கும். நூறுக்குப் பிறகு வேகமாக கணக்கு எகிறும்.

எப்படி கழண்டவங்களை கண்டுபிடிப்பது?

இப்படி கழண்டு கொள்வதால் என்ன நன்மை கிடைக்கப் போகிறது?

மணிகண்டன் said...

இருந்தாலும் அதிஷாவுக்கு இவ்வளவு விளம்பர பிரியம் கூடாது தான்.

கோவி.கண்ணன் said...

:)

பிராபல பதிவர்கள் என்று விட்டுவிடுங்கள்.

அப்பறம் அவங்களெல்லாம் யாருன்னு எனக்கு மட்டும் தனியாக சொல்லிவிடுங்கள்.(ரொம்ப............முக்கியம்)
:)

மணிகண்டன் said...

கோவிகண்ணன் - நீங்க விலகியது கூட பரவாயில்லை. ஆனால் இப்படி கமெண்ட் செய்வது சரியல்ல.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

// மணிகண்டன் said...

கோவிகண்ணன் - நீங்க விலகியது கூட பரவாயில்லை. ஆனால் இப்படி கமெண்ட் செய்வது சரியல்ல.//

97ல் கோவிகண்ணன் படம் இருக்கிறது

மணிகண்டன் said...

படத்தை மட்டும் வைத்துவிட்டு விலகுவது இன்னுமே பெரிய குற்றம் சுரேஷ் :)- தேடினீங்களா நீங்க ? :)-

SUREஷ்(பழனியிலிருந்து) said...

// மணிகண்டன் said...

படத்தை மட்டும் வைத்துவிட்டு விலகுவது இன்னுமே பெரிய குற்றம் சுரேஷ் :)- தேடினீங்களா நீங்க ? :)-//

அந்த அளவு தொழில் நுட்பம் எனக்குத் தெரியாது. விரிவாக அல்லது சுருங்கப் பதிவு இட்டால் தெரிந்து கொள்ளுவேன்.

மணிகண்டன் said...

ராதாகிருஷ்ணன் சார், உங்களது 97 வது follower நண்பர் புலிகேசியா ? முன்னாடி எல்லாம் நான் கூப்பிட்டா தான் வந்து உங்களை திட்டுவாரு :)-

ILA (a) இளா said...

அந்த மூனு பேருக்காகவா எழுதறீங்க.? என்னங்க போங்க.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

கோவி.கண்ணன், அதிஷா உள்ளிட்ட இருவர் பெயரை சொல்லி இருக்கிறார்கள். நீங்கள் மறுப்பு தெரிவிக்க வில்லை. மெளனம் சம்மதத்திற்கு அறிகுறி.

இருந்தாலும் அந்த மூன்றாமவர் யாருன்னு என்கிட்ட சொல்ல வேண்டாம், பிரபல எழுத்தாளர் கோவி.கண்ணன் கிட்ட சொன்னியள்னா தேவலை. நான் அவருகிட்ட கேட்டுத் தெரிஞ்க்குவேன்.

:)))))

முரளிகண்ணன் said...

கூல்

புருனோ Bruno said...

//படத்தை மட்டும் வைத்துவிட்டு விலகுவது இன்னுமே பெரிய குற்றம் சுரேஷ் :)- தேடினீங்களா நீங்க ? :)-
//

:) :)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

// புருனோ Bruno said...

//படத்தை மட்டும் வைத்துவிட்டு விலகுவது இன்னுமே பெரிய குற்றம் சுரேஷ் :)- தேடினீங்களா நீங்க ? :)-
//

:) :)//

ஆஹா.., தனியாப் படிச்சா வேற மாதிரி இருக்கே தல..,

Ammu Madhu said...

ஓட்டு போட்டாச்சுங்க..

உண்மைத்தமிழன் said...

இன்னாபா இது..?

டி.வி.ஆர். ஸாருக்கு வந்த சோதனை..!

மெய்யாலுமே நமக்கு ஒண்ணும் புரியலே..!

இதுக்கெல்லாம் ஸார் எதுக்கு டென்ஷனாகணும்..!?

அத்திரி said...

//cheena (சீனா) said...
இதையெல்லாம் பற்றிக் கவலைப் படாமல் நாம் நம் வழியே சென்று கொண்டிருப்போமே//

பெரிய ஐயாவே சொல்லிட்டாரு.............. ஒரு ரிப்பீட்டு

goma said...
This comment has been removed by the author.
அக்னி பார்வை said...

கவிச்சாபம் குடுக்காதீங்க..

goma said...

இதற்கெல்லாம்மா மனம் கலங்குவது?
நாம் எழுதுவதையெல்லாம் எல்லோரும் ஏற்க வேண்டும் பார்க்க வேண்டும் என்றிருந்தால் நம் எழுத்துக்கு ஸ்பீட் பிரேக்கர்ஸ் நிறைய விழும்.
நாம் எழுதுவது நமது திருப்திக்காக என்ற கோணத்தில் செயல் பட்டால்தான் நமக்கு நல்லது. இது போன்ற சின்ன விஷயங்கள் நம்மைக் கட்டிப் போட இடம் தரலாமா.

October 8, 2009 8:58:00 PM PDT

ப்ரியமுடன் வசந்த் said...

மீ த 100

வாழ்த்துக்கள் ராதாகிருஷ்ணன் சார்

இதுக்கெல்லாமா வருத்தப்படுவாங்க...

நானும் சீக்கிரம் பிரபலமாயிடுவேன் வருத்தப்படாதீங்க....ஆனா...கழண்டுகிடமாட்டேன்...ஹ ஹ ஹா....

SUREஷ்(பழனியிலிருந்து) said...

100க்கு வாழ்த்துக்கள்..,

நர்சிம் said...

ஒருவேளை அந்த மூவரில் நானும் ஒருவன் எனும் பட்சத்தில் இந்த விளக்கம் மிக அவசியமாகிறது...

மருத்துவர் புருனோ இதற்கு சாட்சி..அவர்தான் என் டொமைன்/பிளாக் செட்டிங் எல்லாம் செய்பவர்..நட்பின் அடிப்படையில்.

ஸார்,

பிளாக்ஸ்பாட்டில் இருக்கும் பொழுது நான் ஃபாளோ செய்பவர்கள் லிஸ்டில் அப்படியே இருக்கிறது.

திடீரென என் பிளாக் முடக்கப்பட்டது(டொமைனில் கூகுள் முகவரி கொடுக்கப்படாததால் 4 நாட்கள்) பின்னர் புருனோ தான் சரிசெய்து வேறு அக்கவுண்ட்டிற்கு மாற்றிக்கொடுத்தார்.

அது முதல் என் புகைப்படம் தெரிவதில்லை..போலவே டொமைனுக்கு மாறிய பின்னர் நான் ஃபாளோவராக சேர்ந்தவற்றில் இருந்து டெலிட் ஆகி இருக்கிறது.(இதுவும் புருனோதான் கண்டுபிடித்துச் சொன்னார்)

*********

ஸார்,

எவ்வளவு பணிவாகவும் நேர்மையாகவும் இருந்தாலும் சில நேரங்களில் போகிறபோக்கில் நம்மைப் பற்றி சிலர் சில வார்த்தைகளைச் சொல்லும்பொழுதெல்லாம் ஒரு புன்சிரிப்பை உதிர்த்துப் போய் விடுவது வழக்கம்.

பெரிதும் மதிக்கும் உங்கள் போன்றவர்கள் இப்படி எழுதியதால் இந்த விளக்கம்.

கணிப்பொறி/கூகுள் திருவிளையாடல்களால்,அதை சரிவர உணராத என்னால் உங்கள் மனம் புண்பட்டிருக்கிறது.. மன்னிக்க.

உங்கள் போல் இன்னும் எவ்வளவு பேரின் பிளாக்கில் என் தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறதோ..அவர்களுக்கும் இதே விளக்கமும் மன்னிப்பும்.

நன்றி.

இராகவன் நைஜிரியா said...

எப்படி கண்டுபிடிச்சீங்கன்னு சொல்லுங்களேன்... நாங்களும் தெரிஞ்சுப்போமில்ல.

ரவி said...

ஹல்லோ.

யார் யாரெல்லாம் கழண்டுக்கினீங்க. இப்ப கண்டுபிடிக்கறேன்.

யார் தலை சூடா இருக்கோ அவங்க தான் அது...

குசும்பா, ஏன் தலையில கை வைக்கிற ? மாட்னியா ????

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
Peer

.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//cheena (சீனா) said...
இதையெல்லாம் பற்றிக் கவலைப் படாமல் நாம் நம் வழியே சென்று கொண்டிருப்போமே//

கவலைப்படவில்லை சீனா சார்..இப்படி நடந்துக் கொள்கிறார்களே என்று வருத்தம்தான்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
SUREஷ்
கோவி.கண்ணன்
மணிகண்டன்
Ila

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
கோவி.கண்ணன், அதிஷா உள்ளிட்ட இருவர் பெயரை சொல்லி இருக்கிறார்கள். நீங்கள் மறுப்பு தெரிவிக்க வில்லை. மெளனம் சம்மதத்திற்கு அறிகுறி.

இருந்தாலும் அந்த மூன்றாமவர் யாருன்னு என்கிட்ட சொல்ல வேண்டாம், பிரபல எழுத்தாளர் கோவி.கண்ணன் கிட்ட சொன்னியள்னா தேவலை. நான் அவருகிட்ட கேட்டுத் தெரிஞ்க்குவேன்.

:)))))//

இதன் பெயர்தான் போட்டுவாங்குவதா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
Bruno
முரளிகண்ணன்
Ammu Madhu

T.V.ராதாகிருஷ்ணன் said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
இன்னாபா இது..?

டி.வி.ஆர். ஸாருக்கு வந்த சோதனை..!

மெய்யாலுமே நமக்கு ஒண்ணும் புரியலே..!

இதுக்கெல்லாம் ஸார் எதுக்கு டென்ஷனாகணும்..!?//

எப்போதும் நீங்களே டென்ஷன் ஆயிட்டு இருந்தா எப்படி? அதனால ஒரு மாற்றத்திற்கு நான்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
அத்திரி
அக்னி பார்வை
gOma

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பிரியமுடன்...வசந்த் said...
மீ த 100

வாழ்த்துக்கள் ராதாகிருஷ்ணன் சார்//

நன்றி வசந்த்

Muruganandan M.K. said...

இவற்றைக் கணக்கில் எடுக்க வேண்டியதில்லை என்றே கருதுகிறேன். எமது பதிவுகளை நல்ல முறையில் செய்தால் போதுமானது அல்லவா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நர்சிம் said...
ஒருவேளை அந்த மூவரில் நானும் ஒருவன் எனும் பட்சத்தில் இந்த விளக்கம் மிக அவசியமாகிறது...//

அது நீங்கள் இல்லை என்பதால்..விளக்கம் தேவையில்லாமல் போகிறது.
நன்றி நர்சிம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
இராகவன் நைஜிரியா
ரவி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Dr.எம்.கே.முருகானந்தன்

அவர்கள் புத்திசாலித்தனத்தை சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறதே

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ILA(@)இளா said...
அந்த மூனு பேருக்காகவா எழுதறீங்க.? என்னங்க போங்க//

அந்த மூணு பேருக்காக அல்ல இளா..அவர்களின் செயலுக்காக

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
100க்கு வாழ்த்துக்கள்..,//

நன்றி SUREஷ்

க.பாலாசி said...

தங்களது வருத்தங்களை பகிர்ந்துகொண்டுள்ளீர்கள் சரிதான். எனக்கென்னவோ ’கடமையை செய் பலனை எதிர்பாராதே’ வாசகமே நமக்கு பொருந்தும் என்று தோன்றுகிறது. .

ரவி said...

சீனா சார் சொன்னதை வழிமொழிகிறேன்.

மங்களூர் சிவா said...

அவ்வ்வ்வ்வ்வ்

வால்பையன் said...

என்ன அரசியலோ!

வருண் said...

I don't know. There may be genuine reasons and there may not be. I would be careful not speculating anything for following and later, withdrawing!

Even responses, some people visit sometimes, then they disappear and never show up for a while. They may be busy or they dont like our latest posts or they got bored. Or they may find it like one-way street and so go away. It is certainly their "right" to follow or show up or withdraw after a while!

It is better not finger at anybody (of course you did not name them) even if they do for "whatever you think as the reason".

It is best let it go. Let them do as they wish. After all what do we really know about anybody? Let us not judge anybody!

Starjan (ஸ்டார்ஜன்) said...

டி வி ஆர் சார் , கவலைப்படாதீங்க ...

எங்க போயிறப்போறாங்க ....

100 க்கு என் இனிய வாழ்த்துக்கள்

நான் 74 வது பாலோயர்ஸ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
பாலாஜி
சிவா
வால்பையன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி
Varun
Starjan

Unknown said...

அடுத்த பதிவில் அவர்கள் பற்றிய செய்திகளை கிசு கிசு பாணியில் தெரிவிக்கவும்.

வெண்ணிற இரவுகள்....! said...

ஏன் இவ்வளவு கோவம் ..........எல்லாரும் அப்படி இருக்க மாட்டார்கள்.....
கவலையை விடுங்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி.

Rakesh
வெண்ணிற இரவுகள்....!

Radhakrishnan said...

இந்த பதிவினை பார்த்ததும் இனிமேல் யாருக்கும் தொடர்ந்து செல்பவராகக் காட்டிக் கொள்ள வேண்டாம், நேரமிருக்கும்போது படிக்க முடிந்தவைகளை படிப்போம் எனும் எண்ணத்தில் அன்றே அனைத்தையும் நீக்கி விட்டேன் ஐயா.

உங்கள் அருமையான எழுத்தை நிச்சயம் எவரேனும் வாசித்துக் கொண்டே இருப்பார்கள்.

அபி அப்பா said...

ஏன் சார் ஒரு வேளை அந்த மூன்றாவது ந(ண்)பர் அத்திவெட்டியாரா இருக்குமோ???

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Rads said...
இந்த பதிவினை பார்த்ததும் இனிமேல் யாருக்கும் தொடர்ந்து செல்பவராகக் காட்டிக் கொள்ள வேண்டாம், நேரமிருக்கும்போது படிக்க முடிந்தவைகளை படிப்போம் எனும் எண்ணத்தில் அன்றே அனைத்தையும் நீக்கி விட்டேன் ஐயா.//
:-)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Rads said
உங்கள் அருமையான எழுத்தை நிச்சயம் எவரேனும் வாசித்துக் கொண்டே இருப்பார்கள்.//

நன்றி Rads

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அபி அப்பா said...
ஏன் சார் ஒரு வேளை அந்த மூன்றாவது ந(ண்)பர் அத்திவெட்டியாரா இருக்குமோ???//

அது நீங்கள் இல்லை !!!!!!!!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அபி அப்பா said...
ஏன் சார் ஒரு வேளை அந்த மூன்றாவது ந(ண்)பர் அத்திவெட்டியாரா இருக்குமோ???
//
ஏன் அபி அப்பா ஐயா என் மீது உமக்கு இவ்வளவு காண்டு! :)

டிவிஆர் ஐயா மீது எமக்கு மிகுந்த மதிப்பு உண்டு!

T.V.ராதாகிருஷ்ணன் said...

// அத்திவெட்டி ஜோதிபாரதி said...
டிவிஆர் ஐயா மீது எமக்கு மிகுந்த மதிப்பு உண்டு!//

நன்றி ஜோதிபாரதி