Sunday, May 31, 2009

மீண்டும் ஒரு தொடர் பதிவு..

நண்பர் முரளிக்கண்ணன் என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார்.அவருக்கு நன்றி..இனி கேள்விகளும்..பதில்களும்..

1.உங்களுக்கு ஏன் இப்பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
எனக்கு என்ன..ஆரியபடைக் கடந்த நெடுஞ்செழியன்..அப்படி..இப்படின்னு கொடுத்த பெயரா..இது..என் பெற்றோர் வைத்தது..லக்கி மாதிரி பெற்றோராய் இருந்திருந்தால்..மாற்றியிருப்பேன்.

2.கடைசியாக அழுதது எப்போது..?
தினமும் அழுகிறேன்..யூ டியூபில்..இலங்கைதமிழர் துயர் பற்றிய வீடியோ கிளிப்பிங்கைப் பார்க்கும் போது என்னை அறியாது கண்களில் கண்ணீர் கொப்பளிக்கிறது.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?
நான் எழுதியதை..நானே படிக்கத் தடுமாறும்போது..என் கையெழுத்தை வெறுப்பேன்.

4.பிடித்த மதிய உணவு..
நான் கொஞ்சம் சாப்பாட்டுபிரியன்.விஜிடேரியன் உணவு எதுவானாலும்..மதிய உணவை ஒரு வெட்டு வெட்டிடுவேன்.

5.நீங்கள் வேறுயாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
ஒருவரைப் பார்த்ததுமே..தக்கார்..தகவிலர் என்பது தெரிந்துவிடும்.

6.கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
வீட்டில்..பாத் ரூமில்..ஆனந்தமாக ஷவரில் குளிக்கப் பிடிக்கும்..

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதைக் கவனிப்பீர்கள்..
அவர்கள் நம்முடன் பழகும் முறையை

8.உங்க கிட்ட உங்களுக்கு..பிடித்த விஷயம் என்ன..பிடிக்காத விஷயம் என்ன?
சிலர் செய்யும் கேடுகளை காலவரையின்றி பொறுத்துக் கொண்டிருப்பேன்..திடீரென ஒரு நாள் கோபம் வந்து இவ்வளவு நாட்கள் பொறுத்ததை அழித்திடுவேன்..இந்த இரண்டு குணங்களுமே எனக்குப் பிடிக்காது.

9.உங்க சரிபாதி கிட்ட உங்களுக்கு பிடித்த,பிடிக்காத விஷயம்..
எந்த ஒரு வேலையையும்..தள்ளிப்போடாமல் உடனே செய்யவேண்டும் அவர்களுக்கு.இதில் நான் சோம்பேறி.இந்த ஒன்றுதான்..இரண்டுக்கும் பதில்.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்கறதுக்கு வருந்துகிறீர்கள்?
இதை இப்போ படிக்கற உங்கக் கூட இப்ப இருக்க முடியலேன்னு வருத்தம்.

11.இதை எழுதும்போது என்ன வர்ண உடை அணிந்துள்ளீர்கள்?
சிகப்பு டீ ஷர்ட்,கட்டம் போட்ட லுங்கி..

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறீங்க..
ஒரு சமயத்தில் என்னால் ஒரு காரியத்தில்தான் ஈடுபாடோடு செயல்பட முடியும்.

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கறுப்பு..(கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு)

14.பிடித்த மணம்..
மல்லிகை மணம்...

15.நீங்க அழைக்கப்படும் பதிவரிடம்..உங்களுக்கு பிடித்த விஷயம்..அவரை அழைக்கக் காரணம்..
கோவி.கண்ணன் - எந்த ஒரு விஷயத்தையும்..நமக்குத் தோன்றாத புதுக் கோணத்தில் யோசிப்பவர்..பழக இனியவர்.
அக்னிப்பார்வை- வெள்ளை உள்ளம் படைத்தவர்..எதிர்ப்பார்ப்புக்குமேல் விஷயம் தெரிந்தவர்.
அத்திரி-இவரை சந்தித்தது இல்லை..ஆனால்..எனக்கு வந்த ஆரம்பகாலம் முதல் ஃபாலோயர்.இவரை சந்திக்க ஆசை உண்டு.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்கு பிடித்த பதிவு..
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., இடங்கள் பற்றிய பதிவு. (சிறுகிராம..கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாக்கனியா) http://muralikkannan.blogspot.com/2009/05/blog-post_10.html

17.பிடித்த விளையாட்டு...
கிரிக்கெட் தான்..வேறு என்ன..

18.கண்ணாடி அணிபவரா?
அணிபவன்...

19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்...
யதார்த்தமான படங்கள்

20.கடைசியாக பார்த்த படம்..
S.M.S.,

21.பிடித்த பருவ காலம்...
என் இளமைப் பருவ காலம்.
.
22.இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்
புதுமைப்பித்தன் கதைகள் தொகுப்பு

23.உங்க டெஸ்க் டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்//
நான் அதை செய்வதில்லை...என்னில் சரிபாதி அவ்வப்போது மாற்றிவிடுவார்.

24.உங்களுக்கு பிடித்த சத்தம்...பிடிக்காத சத்தம்...
எங்கேனும் ஊருக்கு போய் திரும்புகையில்...என் பெட்டிகளை சுமக்கும் போர்ட்டர்களுக்கு கொடுக்கும் சத்தம் பிடிக்கும்..
மீட்டருக்கு மேல் ஆட்டோக்காரருக்கு கொடுக்கும் சத்தம் பிடிக்காது.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்ச தொலைவு
அமெரிக்கா...(இப்போதும் அக்டோபர் வரை அமெரிக்க வாசம்தான்)

26.உங்களுக்கு ஏதேனும் தனித்திறமை இருக்கிறதா?
திறமை என்றால் என்ன?

27.உங்களால் எற்றுக் கொள்ளமுடியா ஒரு விஷயம்..
எந்த ஒருவரையும் அறிவாளி என்று சொல்வதை

28.உங்களுக்குள் இருக்கும் சாத்தான்..
தட்டச்சில் டைப் அடிக்கச் சொல்லிக்கொண்டிருக்கிறது.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலாத்தலம்..
அடிக்கடி பெங்களூர் செல்ல விருப்பம்

30.எப்படி இருக்கணும்னு ஆசை..
எப்போதும் சிரித்துக்கொண்டிருக்கும் மனிதனாய்..

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்...
அப்படி ஏதேனும் இருக்கிறதா?

32.வாழ்வு பற்றி ஒருவரி சொல்லுங்க..
எவ்வளவு காலம் வாழ்ந்தோம் என்பதைவிட..எப்படி வாழ்ந்தோம் என நமக்குப் பின் பிறர் பேச வேண்டும்.

20 comments:

முரளிகண்ணன் said...

பினிசிங் டச் சூப்பர்

அக்னி பார்வை said...

முரளிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் உங்களை பற்றி இன்னும் தெரிந்துக்கொண்டேன்...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இயல்பாக இருக்கிறது தலைவரே

மங்களூர் சிவா said...

சூப்பர். நல்லா இருக்கு.

மங்களூர் சிவா said...

/

23.உங்க டெஸ்க் டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்//
நான் அதை செய்வதில்லை...என்னில் சரிபாதி அவ்வப்போது மாற்றிவிடுவார்.
/

This action cant be performed please contact administrator (தங்கமணி) அப்படித்தானே ஐயா??

:)))))))

Suresh said...

ஒவ்வொரு பதிலும் இதயத்தில் இருந்து உண்மையா வந்து இருக்க்கு வாழ்க்கை பற்றி அருமையா சொல்லி இருக்கிங்க நண்பா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
முரளிகண்ணன்
அக்னி பார்வை
SUREஷ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மங்களூர் சிவா
This action cant be performed please contact administrator (தங்கமணி) அப்படித்தானே ஐயா??//

இவ்வளவு நாட்களுக்குள் தெரிந்திருக்க வேண்டுமே சிவா
வருகைக்கு நன்றி சிவா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Suresh said...
ஒவ்வொரு பதிலும் இதயத்தில் இருந்து உண்மையா வந்து இருக்க்கு வாழ்க்கை பற்றி அருமையா சொல்லி இருக்கிங்க நண்பா//

நன்றி Suresh

நையாண்டி நைனா said...

மிக அதிக விசயங்களை தெரிந்து கொண்டேன் உங்களை பற்றி.


/*கோவி.கண்ணன் - எந்த ஒரு விஷயத்தையும்..நமக்குத் தோன்றாத புதுக் கோணத்தில் யோசிப்பவர்..பழக இனியவர்.*/

நான் கூப்பிடலாம் என்று எண்ணி இருந்தவரை நீங்க கூப்பிட்டுடீங்க....

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நையாண்டி நைனா said...
மிக அதிக விசயங்களை தெரிந்து கொண்டேன் உங்களை பற்றி.//

நன்றி நைனா

சின்னப் பையன் said...

ஓ. சொன்னா மாதிரி மறுபடி அமெரிக்கா வந்தாச்சா? தொலைபேசறேன்...

அத்திரி said...

//உங்க சரிபாதி கிட்ட உங்களுக்கு பிடித்த,பிடிக்காத விஷயம்..
எந்த ஒரு வேலையையும்..தள்ளிப்போடாமல் உடனே செய்யவேண்டும் அவர்களுக்கு.இதில் நான் சோம்பேறி.இந்த ஒன்றுதான்..இரண்டுக்கும் பதில்.//

நல்லாவே ஐஸ் வச்சிருக்கீங்க...........

தொடர் பதிவுக்கு அழைத்ததற்கு நன்றி... ஆனால் நான் ஏற்கனவே இந்த தொடர் பதிவை எழுதிவிட்டேன் ஐயா..http://rajkanss.blogspot.com/2009/04/blog-post_18.html

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ச்சின்னப் பையன் said...
ஓ. சொன்னா மாதிரி மறுபடி அமெரிக்கா வந்தாச்சா? தொலைபேசறேன்...//

வந்தாச்சு...பேசுவோம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

அத்திரி said...
//உங்க சரிபாதி கிட்ட உங்களுக்கு பிடித்த,பிடிக்காத விஷயம்..
//எந்த ஒரு வேலையையும்..தள்ளிப்போடாமல் உடனே செய்யவேண்டும் அவர்களுக்கு.இதில் நான் சோம்பேறி.இந்த ஒன்றுதான்..இரண்டுக்கும் பதில்.//

நல்லாவே ஐஸ் வச்சிருக்கீங்க...........//

அப்படியா....இருக்கலாம்..பாம்பின் கால் பாம்பு அறியும்னு சொல்லுவாங்க

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அத்திரி said...
தொடர் பதிவுக்கு அழைத்ததற்கு நன்றி... ஆனால் நான் ஏற்கனவே இந்த தொடர் பதிவை எழுதிவிட்டேன் ஐயா..http://rajkanss.blogspot.com/2009/04/blog-post_18.html//

சில பதிவுகள்..படிக்காமல் விட்டுப் போய்விடுகின்றன..மன்னிக்கவும்...
இப்போது படித்து விடுகிறேன்

கோவி.கண்ணன் said...

இப்பதான் இந்த பதிவைப் பார்த்தேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி கோவி

கோவி.கண்ணன் said...

தொடர் பதிவைப் போட்டாச்சு !
:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கோவி.கண்ணன் said...
தொடர் பதிவைப் போட்டாச்சு !

நன்றி//