ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Tuesday, December 22, 2009
ஈரோடு திருவிழா
நான் சில நேரங்களில்..சில நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டும் என தீர்மானித்திருப்பேன்..ஆனால் நிகழ்ச்சியன்று மறந்திருப்பேன்..அல்லது வேறு முக்கிய நிகழ்ச்சி வந்து..இருகோடுகள் தத்துவத்தில் அதி முக்கியநிகழ்ச்சியில் கலந்துக் கொள்வேன்.அல்லது..கொல்லன் பட்டறையில் ஈ க்கு வேலையில்லை என தெரிந்தால்..நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளமாட்டேன்.
ஈரோடு நகரில் பதிவர் சங்கமம் நிகழ்ச்சிப் பற்றி கேள்விப்பட்டதுமே..ஈரோடு பதிவர்கள் மட்டுமே கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சி அது என நினைத்தேன்.பின் வந்த பதிவுகளையும்..செய்திகளையும் பார்த்துவிட்டு..இது ஒரு மா பெரும் விழாவாக இருக்கும் என நினைத்தேன்.உடன் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் எண்ணம் வந்தது.அப்துல்லாவோ,கேபிளோ ஒரு வார்த்தை சொல்லி இருந்தால்..கண்டிப்பாக அவர்களுடன் வந்திருப்பேன்.
ஒரு கதை உண்டு..
ஒரு நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியது.நாட்டு மன்னன் ஒரு தொட்டியைக் கட்டி..மக்கள் ஒவ்வொருவரும் ஒரு குவளை பாலைக் கொணர்ந்து அதில் கொட்ட வேண்டும் என கட்டளையிட்டான்.வறுமை நிலையில் மக்கள் பாலுக்கு எங்கே போவார்கள்?நாம் ஒரு குவளைத் தண்ணீரைக் கொட்டினால்..பாலுடன் தண்ணீர் கலந்துவிடும்..மன்னனுக்கும் தெரியாது என ஒவ்வொருவரும் எண்ணி தண்ணீரைக் கொண்டு வந்துக் கொட்டினர்.காலையில் மன்னன் பார்த்தால் தொட்டி முழுதும் தண்ணீர்.
அதுபோல நாம் ஒருவர் போகாவிட்டால் என்ன ஆகிவிடப் போகிறது என எண்ணிவிட்டேன்.ஆனால் நிகழ்ச்சி முழுதும் மக்கள் பாலைக் கொட்ட..தண்ணீரைக் கொட்ட நினைத்த எனக்கே நஷ்டம்.
..நடந்த நிகழ்ச்சிகளையும்..விருந்தோம்பலும் பார்க்கும் போது எவ்வளவு முக்கிய நிகழ்ச்சிக்கு செல்ல வாய்ப்பிருந்தும்..அதை இழந்திருக்கிறேன் என்ற வருத்தம் ஏற்பட்டது.
தனித்தனியாக பெயர் குறிப்பிடாமல்..நிகழ்ச்சிக்கு பொறுப்பேற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்கள் மீது சற்று பொறாமை ஏற்பட்டாலும்..யாம் பெறாத இன்பத்தைப் பெற்ற அவர்களுக்கு பாராட்டுகள்.
மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை ஈரோடு பதிவர்கள் எனக்கு கொடுக்காமலா இருந்துவிடப் போகிறார்கள்.பார்த்துக் கொள்ளலாம்.
அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை என் வாழ்த்துகள்.
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
அடுத்த சந்திப்பில் நிச்சயமாக கலந்து கொள்ளுங்க சார்!
உங்களை காண ஆவலுடன் இருக்கிறேன்!
ஆஹா.... உங்களை தவற விட்டுவிட்டோமே
பதிவர் சந்திப்பு சிறப்பாக நடந்துள்ளது
நமக்கு தான் கொடுத்து வைக்க வில்லை
பதிவர் கூடலுக்கு பெஞ்ச் மார்க் பண்ணிட்டாங்க சார் ஈரோடு பதிவர்கள். :). இனிமே இதை விஞ்சித்தான் மற்றவர்கள் செய்ய வேண்டும்.
அய்யா சொன்னது சரிதான். விஞ்சுதற்கு முயற்சிக்க வேண்டும்.
பிரபாகர்.
@tvrk there is always a next time :)-
நீங்கள் கலந்து கொள்ளாததில் எங்களுக்கும் வருத்தமே.....
விரைவில் சந்திப்போம்.....
வருகைக்கு நன்றி
Arun
ஈரோடு கதிர்
Starjan
வானம்பாடிகள்
பிரபாகர்
ஆரூரன் விசுவநாதன்
//மணிகண்டன் said...
@tvrk there is always a next time :)-//
வருகைக்கு நன்றி மணிகண்டன்
//மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை ஈரோடு பதிவர்கள் எனக்கு கொடுக்காமலா இருந்துவிடப் போகிறார்கள்.பார்த்துக் கொள்ளலாம்.//
கண்டிப்பாக ஏற்படுத்திக்கொடுக்கிறோம். வாருங்கள்...
நன்றி பாலாசி
அன்பின் ராதா
கவலை வேண்டாம் - பதிவர் சந்திப்பு இனி அடிக்கடி வெவ்வேறு ஊர்கலீல் நடைபெறும் - கலந்து மகிழுக
நல்வாழ்த்துகள் ராதா
நன்றி cheena
ஆம் நிகழ்வு பெரிய விழாபோல நிகழ்ந்தது.அடுத்த கூடலில் அவசியம் சந்திப்போம் நண்பரே.
வருகைக்கு நன்றி முனைவர்.இரா.குணசீலன்
Post a Comment