Friday, November 13, 2009

தேங்காய்...மாங்காய்...பட்டாணி...சுண்டல் (13-11-09)

மனோவசிய வல்லுநர்களில் சிலர் தங்களிடம் வருபவர்கள் விரும்பினால் அவர்களது பூர்வ ஜென்ம நினைவுகளை வரவழைப்பதாகக் கூறுவதைக் கேள்விப் பட்டிருக்கிறோம்.ஆனால் விரைவில் 'ராஸ் பீச்லே
ஜனம் கா' என்ற டி.வி. நிகழ்ச்சிவர இருக்கிறதாம்.இந்நிகழ்ச்சியில் பல பிரபலங்களை கேமிரா முன் வசியப்படுத்தி அவர்களது முந்தைய பிறப்புகளை வெளிப்படுத்தப் போகிறதாம்.இதற்கு ஒப்புக்கொண்டுள்ள ஒரு பிரபலம் சுஷ்மிதா சென் ஆவார்.

2)வாழ்க்கை முறை நோய்கள் ஊழியர்களை பாதிப்பதால் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஊழியர்களுக்கான சில உடல் நலத் திட்டங்களை பின் பற்றுகிறதாம்.ஊழியர்கள் தொப்பையைக் குறைத்தால் பெப்சிகோ வெகுமதி அளிக்கிறது.மாருதி சுசுகி,எல்.ஜி., ஆகிய நிறுவனங்கள் காலை நேர உடற்பயிற்சியை ஊக்குவிக்கிறதாம்.பார்தி ஏர்டெல் தொடர் ஓட்டங்களையும் TCS தியானத்தையும் ஊக்குவிக்கிறது.

3)யானையின் துதிக்கையில் எலும்பே கிடையாது.முழுதும் தசையால் ஆனது.துதிக்கை அதிகப்பட்சம் எட்டு அடி நீளம் இருக்கும்.ஒரே நேரத்தில் துதிக்கையின் மூலம் இரண்டு காலன் தண்ணீரை உறிஞ்சும் ஆற்றல் உடையது.நாள் ஒன்றுக்கு நாற்பது கேலன் தண்ணீரைக் குடிக்கும்.யானையின் ஆயுள் நூறு ஆண்டுகள்.

4)ஒரு நாள் போட்டிகளில் 17000 ஓட்டங்களும்..டெஸ்ட் போட்டிகளில் 12773 ஓட்டங்களும் எடுத்து சாதனை புரிந்திருக்கும் சச்சின் 1989ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம்நாள் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடினார்.இத்தொடரின் நாலாவது டெஸ்டில் வக்கார் யூனிஸ் வீசிய பந்து சச்சினின் முகத்தாடையை தாக்கியது.மூன்று..நான்கு பற்கள் உடைந்துவிட்டதாம்.ரத்தத்தை நிறுத்த ஐஸ் கட்டியை வைத்து விட்டு..பிட்ச்சில் விழுந்த பற்களை பேட்டால் ஒதுக்கித் தள்ளிவிட்டு..ரத்தம் படிந்த பகுதியை மண்ணால் மூடிவிட்டு வலியை பொறுத்துக் கொண்டு 57 ஓட்டங்களை எடுத்தாராம்.

5) ஒரு சமயம் காந்தி காலை நேரத்தில் வேகமாக நடந்துக் கொண்டிருந்தார்.வழியில் அவரைப் பார்த்த ஒரு நண்பர் 'இத்தனை வேகமாக எங்கே போகிறீர்கள் ' என்றார்.அதற்கு அண்ணல் 'சற்று தூரத்தில் தெரியும் என் வாலிபத்தைச் சந்திக்கத்தான் விரைவாக ந்டந்து சென்றுக் கொண்டிருக்கிறேன்' என்றார்.

6)ஒரு ஜோக்

நீதிபதி- மிக சாமர்த்தியமாக கோடிக்கணக்கான ஊழலை எப்படி செஞ்சீங்க?
அமைச்சர்(குற்றவாளி)-ரொம்ப புகழாதீங்க..கூச்சமா இருக்கு..என்னையே இப்படி புகழற நீங்க என் தலைவனை எப்படி புகழ்வீங்க..!!

17 comments:

முரளிகண்ணன் said...

நச்

அத்திரி said...

கடைசி ஜோக் நச்

வானம்பாடிகள் said...

புதிய தகவல்கள் எனக்கு மற்றும் செம சூப்பர் ஜோக். :))

T.V.Radhakrishnan said...

நன்றி

முரளி
அத்திரி
வானம்பாடிகள்

SUREஷ் (பழனியிலிருந்து) said...

தல..., எல்லாப் புகழும் உங்களுக்குத்தான்..,

பின்னோக்கி said...

நல்ல தகவல்கள்.

சச்சினின் அந்த மேட்சை நான் பார்த்தேன். கண்ணுக்கும் மூக்குக்கும் நடுவில் அடிபட்டது. பல் உடையவில்லை. ஆனால் அடுத்த பாலை பவுண்டரிக்கு அனுப்பியது இன்னும் நியாபகத்திலிருக்கிறது.

velji said...

கலவை ருசிக்கிறது.

T.V.Radhakrishnan said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
தல..., எல்லாப் புகழும் உங்களுக்குத்தான்..,//

நன்றி SUREஷ்

T.V.Radhakrishnan said...

//பின்னோக்கி said...
நல்ல தகவல்கள்.

சச்சினின் அந்த மேட்சை நான் பார்த்தேன். கண்ணுக்கும் மூக்குக்கும் நடுவில் அடிபட்டது. பல் உடையவில்லை. ஆனால் அடுத்த பாலை பவுண்டரிக்கு அனுப்பியது இன்னும் நியாபகத்திலிருக்கிறது.//

கிரிக்கெட் விமரிசகரும்..பத்திரிகையாளருமான ஆர்.மோகன் சொன்னவை இவை..பார்க்க குமுதம் (18-11-09)
வருகைக்கு நன்றி பின்னோக்கி

T.V.Radhakrishnan said...

//velji said...
கலவை ருசிக்கிறது.//

நன்றி velji

TamilNenjam said...

குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

T.V.Radhakrishnan said...

//TamilNenjam said...
குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்//

நன்றி தமிழ்நெஞ்சம்

நாஞ்சில் பிரதாப் said...

பல விசயங்கள அறிமுடிந்தது. பரிக்வுக்கு நன்றி.
கடைசி ஜோக் டாப்பு

நாஞ்சில் பிரதாப் said...

பல விசயங்கள அறிமுடிந்தது. பரிக்வுக்கு நன்றி.
கடைசி ஜோக் டாப்பு

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி நாஞ்சில் பிரதாப்

பின்னோக்கி said...

இப்பத்தான் படிச்சேன் (குமுதத்த). அவர் சொன்னது ஓவர்ன்னு எனக்கு தோணுது. அப்படின்னா சச்சினுக்கு 3 முன்பல்லு இருக்கக்கூடாது இல்லையா ?.

T.V.Radhakrishnan said...

//பின்னோக்கி said...
இப்பத்தான் படிச்சேன் (குமுதத்த). அவர் சொன்னது ஓவர்ன்னு எனக்கு தோணுது. அப்படின்னா சச்சினுக்கு 3 முன்பல்லு இருக்கக்கூடாது இல்லையா ?.//

:-)))