Sunday, November 1, 2009

இறைவன் ஒரு பச்சோந்தியா...

இறைவன் இருக்கின்றானா
இருந்தால்
அவன் நிறம் என்ன?
அறிவிலி ஒருவன் வினவினான்
அவன் பச்சை நிறம்
மரம்,செடி,கொடி,புல்
அவன் நீல நிறம்
வானத்தைப் போல
அவன் பழுப்பு நிறம்
பாறை, மலையைப் போன்று
அவன் வெண்மை நிறம்
உச்சியிலிருந்து விழும் நீரானபோது
அவன் சிவப்பு நிறம்
கீழ் வானத்தில் சூரியன்
வந்திடும் போது
அவன் மஞ்சள் நிறம்
வெயில் சுட்டெரிக்கும் போது
சூரியன் மறைந்ததும்
அவன் நிறம் கருப்பு
வானவில்லாய் தோன்றும் போது
பல நிறங்கள்
என்றதும்
பேதை கேட்டான்
அப்போது அவன் ஒரு
பச்சோந்தியா என
அவன் செம்புலப்  பெயல் நீர்
என்றிட்டேன்.

9 comments:

கோவி.கண்ணன் said...

என்ன ஆச்சு டிவிஆர் ஐயா ?
:)

velji said...

இருவருமே (பச்சோந்தி ஐய்யாவையும் சேர்த்து) நிறம் மாற்றுகிறார்கள்.ஆனால் செயலைக்குறிக்கும் சொல் வேறு!

நல்ல கவிதை.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//அறிவிலி ஒருவன் வினவினான்//

தெரிந்து கொள்ளும் வேட்கையில் கேட்பவன் பெயர் அறிவிலியா நண்பரே..,

ஒருவேளை அறியாமல் இருப்பவன் அறிவிலி என்று வைத்துக் கொண்டாலும் நீங்கள் தெளிவாகச் சொல்லி அவனை அறிவாளி ஆக்கியிருக்கலாமே..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//அப்போது அவன் ஒரு
பச்சோந்தியா//

அவதாரம் படத்தில் நாசரும் ரேவதியும் பாடும் பாடல் நினைவுக்கு வருகிறது. அதில் நிறங்களை விளக்குவார். இதில் நிறங்களைப் பயன்படுத்தி கடவுளை விளக்க முயற்சிக்கிறீர்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கோவி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//velji said...
நல்ல கவிதை.//


நன்றி velji

T.V.ராதாகிருஷ்ணன் said...

சுரேஷ்,
அவனிடம் விளக்கிச் சொல்லியும்..பின்னரே பச்சோந்தியா என்கிறான்.அப்போது..சொல்லப்படுவது..இல்லை அவன் நீர் போன்றவன்.நிறமற்றவன்..ஆனால் எல்லா நிறத்திலும் அவன் உள்ளான் என்று சொல்கிறேன்.நீரைப் போன்று எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு அதுவாகவே மாறுகிறான் என்கிறேன். வருகைக்கு நன்றி

அக்னி பார்வை said...

///கோவி.கண்ணன் said...
என்ன ஆச்சு டிவிஆர் ஐயா ?
:)
///

நானும் ரிப்பிட்டிக்கிறேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்னி பார்வை said...
///கோவி.கண்ணன் said...
என்ன ஆச்சு டிவிஆர் ஐயா ?
:)
///

நானும் ரிப்பிட்டிக்கிறேன்//

நானும் கோவிக்கு சொன்ன பதிலை ரிப்பிட்டிக்கிறேன்