
துணைமுதல்வர் ஸ்டாலினும்..அவரது மனைவியும் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளது பழைய செய்தி.ஆனால் அவர்களைத் தொடர்ந்து..பேராசிரியர் அன்பழகனும் தன் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக சமீபத்தில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை விழா ஒன்றில் பேசுகையில் கூறினார்.
உடல் தானம் செய்ய விரும்புபவர்..அருகில் உள்ள அரசு மருத்துவ மனைகளிலோ..அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தன்னார்வ அமைப்புகளையோ தொடர்புக் கொண்டு பதிவு செய்யலாம்.
அப்படி விண்ணப்பிக்கும் போது..'டொனேட் கார்டு' எனப்பதும் அடையாள அட்டை தரப்படும்.இதை உடன் வைத்திருக்க வெண்டும்.
உடல் உறுப்பு தானத்திற்கு விண்ணப்பித்தவர் இறக்கும் சமயம்..சம்பந்தப்பட்ட அமைப்புகளை மற்றவர்கள் தொடர்புக் கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டியது அவசியம்.
விண்ணப்பதாரார் 18 வயதிற்குட்பட்டவராயின் அவரது பெற்றோர் அல்லது காப்பாளரின் அனுமதி கையெழுத்து அவசியம்.
ரத்தக் கொதிப்பு,சர்க்கரை நோய்,புற்று நோய்,இதய நோய்,எய்ட்ஸ் நோய் உள்ளவர்கள் உடல் தானம் செய்ய முடியாது.
உடல் உறுப்பு தானத்தை மூவகையாக பிரிக்கலாம்..
1.உயிரோடு இருக்கும் நிலை
2.இறந்த பிறகு
3.மூளை இறப்பிற்கு பிந்தைய நிலை
உயிரோடு இருக்கும் நிலை - உயிருடன் இருக்கும் ஒருவர் தனது ரத்தம்,எலும்பு,மஜ்ஜை,சிறுநீரகம்,கல்லீரல்,மண்ணீரல் உள்ளிட்ட உறுப்புகளை தானம் செய்தும் மகிழ்ச்சியாக வாழலாம்
இறந்த பிறகு - இறந்துபோன ஒருவரின் உடலிலிருந்து கண்கள்,தோல் மற்றும் முக தசைகள்,இதய வால்வுகள்,எலும்புகள்,தசைநார்கள்,குருத்தெலும்புகள்,ரத்தக்குழாய்கள்.காதின் மைய எலும்பு உள்ளிட்ட உறுப்புகளை தானம் செய்யலாம்.
மூளைச்சாவு என்னும் மூளை இறப்பு நிலை - விபத்தில் மூளைச்சாவு எட்டியவரின் உடலில் இருந்து கண்கள்,சிறுநீரகம்,கல்லீரல்,மண்ணீரல்,நுரையீரல்,சிறுகுடல்,கைகள் எலும்புகள்,நரம்புகள்,விரல்கள் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட உடல் உறுப்புகளை பெறலாம்.
சர்வதேச அளவில் வாகன விபத்துகளில் ஆறு விழுக்காடு இந்தியாவில்தான் நடக்கிறது.மூளைச்சாவு அடைந்ததும் உடல் உறுப்புகளில் இதயம் நான்கு மணி நேரம்,கல்லீரல் 24 மணி நேரம், நுரையீரல் 6 மணி நேரம்,கணையம் 24 மணி நேரம்,சிறுநீரகம் 48 மணிநேரம் இடைவெளிக்குள் எடுத்து மற்றவருக்கு பொருத்திவிட முடியும்.
உடல்தானம் மிகவும் உன்னதமானது.நம் உடல் உறுப்புகள் ஒரே பிறவியில் பல வாழ்க்கை நிலையை எட்டும் பாக்கியம் இருக்கிறது.அதோடு மரணத்திற்கு போராடுபவர்களுக்கு உயிர் கொடுப்பதன் மூலம் இறை நிலை அடையலாம்
உடல் உறுப்பு தானத்தில் ஸ்பெயின் முதலிடம் வகிக்கிறது.
டிஸ்கி- எல்லாம்சரி..கண்தானம்,உறுப்புதானம் என்றெல்லாம் சொல்கிறோமே..தானம் என்பதைவிட வேறு ஏதேனும் சொல் உபயோகிக்கலாமே
11 comments:
இரத்த கொதிப்பு என நீங்கள் குறிப்பிட்டிருப்பது இரத்த அழுத்தத்தையா??
இந்தியாவில் பத்துபேரை சோதித்தால் பாதி பேருக்கு Bp மீதி பேருக்கு சர்க்கரை வியாதி இருக்குமே??
ஆம்,,
வருகைக்கு நன்றி சிவா
essential details.
வருகைக்கு நன்றி நசரேயன்
நன்றி velji
//டிஸ்கி- எல்லாம்சரி..கண்தானம்,உறுப்புதானம் என்றெல்லாம் சொல்கிறோமே..தானம் என்பதைவிட வேறு ஏதேனும் சொல் உபயோகிக்கலாமே//
கொடை
எனது இடுகையை பாருங்கள்
படித்தேன் டாக்டர்..அருமை..
கமல் இன்ஸ்ப்ரேஷன். ஸ்டாலின் மற்றும் அவரது துணைவியாரும் செய்தது ரொம்பவும் இன்ஸ்ப்ரேஷன்.
அடியேனும் எனது மனைவியும் உடல் கொடை செய்துள்ளோம்..
டாக்டர் புருனோவின் பதிவை படித்தவுன் பின்னூட்டத்தை கொஞ்சம் மாற்றியுள்ளேன்.
//செந்தழல் ரவி said...
கமல் இன்ஸ்ப்ரேஷன். ஸ்டாலின் மற்றும் அவரது துணைவியாரும் செய்தது ரொம்பவும் இன்ஸ்ப்ரேஷன்.
அடியேனும் எனது மனைவியும் உடல் கொடை செய்துள்ளோம்..//
Ravi,the great
வருகைக்கு நன்றி
//செந்தழல் ரவி said
டாக்டர் புருனோவின் பதிவை படித்தவுன் பின்னூட்டத்தை கொஞ்சம் மாற்றியுள்ளேன்.//
புரிந்தது ரவி
Post a Comment