Monday, November 9, 2009

எனக்கு பன்றிக் காய்ச்சலா...

ஆறுமாத அமெரிக்க வாழ்வு முடிந்து கிளம்பும் நாள் வந்தது.மாலை ஆறு பதினைந்திற்கு ஃப்ளைட்.பிரிட்டிஷ் ஏர் வேஸ்..மூன்று மணிக்கே வாஷிங்டன் IAD விமான நிலையம் வந்துவிட்டேன்.எனது பேக்கெஜ்களை போட்டுவிட்டு..போர்டிங் பாஸ் வாங்கி..கேபின் பேக்குடன் செக்யூரிட்டி செக்கப்பிற்கு நின்றேன்.அவர்கள் கேட்ட சில கேள்விகள் சரிவர புரியாததால்..யா..யா..என பதிலளித்தேன்.உடன் அவர்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது..எனது பையை திறக்கச் சொன்னார்கள்..

'ஆஹா..நாமும் இன்று சாருக்கான் ஆகிவிட்டோம்..நம்மைப் பற்றியும் செய்திகள் பறக்கும்..இந்திய வெளித்துறை,உள்துறை அமைச்சகம் அமெரிக்காவிற்கு தன் கண்டனங்களைத் தெரிவிப்பார்கள்.ஓரே நாளில் புகழ் அடைந்துவிட்டோம்' என்ற கனவில் கல்லைப்போட்டாற் போல என் பையிலிருந்த டூத் பேஸ்டை எடுத்து வெளியே வீசினார் ஒரு அதிகாரி.அந்த டூத் பேஸ்டை வைத்து நான் பிளேனை ஹைஜாக் செய்துவிடுவேன் என எண்ணினார்கள் போலும்..ஹைஜாக் என்றாலே வடிவேலு பாணியில் அவ்வ்வ்வ் என ஓடுபவன் நான் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.பின்னர் எனது பை என் வசம் கொடுக்கப்பட்டது.

விமானத்தில்..விஜிடேரியன் உணவு என குறித்திருந்தும்..எனக்கு கை காலுடன் ஒரு உணவு வந்தது.இது குறித்து விமான பணிப்பெண் தேவதைகளுடன்..மனமில்லையாயினும் தர்க்கத்தில் ஈடுபட்டேன்.கடைசியில்..முழு கத்திரிக்காய் அப்படி சிக்கன் போல தெரிந்ததை உறுதிப்படுத்திக் கொண்டு..வாயில் இட்டு விழுங்கினேன்.

லண்டனில் சென்னைக்கு கனெக்டிங் ஃபிளைட்.அங்கும் எனது பை மாட்டியது.உடன் ஒரு தீவிரவாதியை பிடித்து விட்டாற் போல அதிகாரிகள் சூழ்ந்துக் கொண்டனர்.பயணிகள் சிலர் வேடிக்கைப் பார்க்க சூழ்ந்தனர்.எந்த ஊராயிருந்தாலும் மக்கள் குணம் ஒன்றுதான் போல இருக்கிறது.எனது காமிரா, மொபைல் எல்லாம் ஆராயப்பட்டன. விட்டால் கைரேகை நிபுணரை வரவழைத்திருப்பார்கள்.அதற்குள் ஒரு அதிகாரி எனது பையைத் திறந்து..யுரேகா..யுரேகா எனக் கத்தினார்..நல்லவேளை ஆடையுடன் தான்.அவர் கண்டுபிடித்தது..காலம் காலமாய் என் மீசையை அழகாக திருத்த வைத்திருந்த என் கத்திரிக்கோலை.

AK47 வைத்திருந்ததைப் போல என்னைப்பார்த்து..அக்கத்திரியை எடுத்து வெளியே வீசிய அதிகாரி..பையை என்னிடம் ஒப்படைத்தார்.
இதையெல்லாம் தூக்கி சாப்பிடுவது போல ஒரு நிகழ்ச்சி சென்னையில் காத்திருந்தது.

விமானத்திலேயே ஒரு படிவம் கொடுக்கப் பட்டு..அதில் எனக்கு பன்றிக் காய்ச்சல் வந்ததா என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது.இல்லை என எழுதினேன்.(ஆகா..என்ன புத்திசாலித்தனம்...அப்படியே ஒருத்தருக்கு காய்ச்சல் வந்திருந்தாலும்..அவர் உண்மையைச் சொல்லி..தண்டையார் பேட்டை மருத்துவமனைக்குச் செல்ல ஆசைப்படுவாரா என்ன)

சென்னை விமான நிலையத்தில்..Immigiration க்கு முன்..ஒரு மருத்துவர் உதவியாளருடன் அமர்ந்து..நம் படிவத்தைப் பார்த்து பேசாமல் (வாயில் பாதுகாப்பு ) சர்டிஃபைட் என ரப்பர் ஸ்டாம்பை அடித்து நம்மிடம் தந்தார்.பன்றிக்காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கையாம் :-)))

நான் சென்னை மண்ணில் காலடி எடுத்து வைத்ததும் தான் ..எவ்வளவு நல்லவன் என அறிந்தேன்..மழை கொட்ட ஆரம்பித்தது.

சரி..ஒரு பதிவு போடலாம்..என எண்ணிய போதுதான்..யார் புண்ணியத்தாலோ ஹாத்வே தன் சேவையை நிறுத்திவிட்டு ஊரை விட்டு ஓடியது ஞாபக வர..வேறு சிறந்தது எது என மனதிற்குள் பட்டிமன்றம் ஒன்று நடத்தி..சாலமன் பாப்பையாப் போல எல்லாமே பரவாயில்லை என முடிவுக்கு வந்து ஏர்டெல் இணைப்புப் பெற்றேன்.

32 comments:

கோவி.கண்ணன் said...

:)

நாம் பயணிகள் நம்மிடம் ஏகப்பட்ட கெடுபிடிகள் செய்வார்கள். ஆனால் விமானப் பணிப் பெண்களின் காலணிகளை கழட்டச் சொல்லி அதையும் எக்ஸ்ரே சோதனையிட்டே மாட்டிக் கொள்ளச் சொல்கிறார்கள்.

எல்லாம் 911 புண்ணியம் !

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி கோவி

ஹாலிவுட் பாலா said...

இந்தியா.. நல்லா இருக்குங்களா? :) :(

தண்டோரா ...... said...

அப்ப சனிக்கிழமை சந்திப்புக்கு வந்துடுங்க சாரே

அனுஜன்யா said...

:)))

Welcome Back.

அனுஜன்யா

பித்தனின் வாக்கு said...

அமெரிக்கா சென்ற எங்கள் சென்னைச் சிங்கம், களம் பல வென்று, இனமானம் காத்த எங்கள் அண்ணாவை வருக, வறுக்க என்று வாழ்த்துகின்றேன்.

அண்ணா நீங்களாவது பரவாயில்லை, நான் சிங்கையில் இருந்து சென்ற முறை சென்னை சென்ற போது ஒரு அம்மினி என் வாயில் அந்த கருவியை வைத்து பரிசேதனை செய்தார். என் உடம்பில் சூடு அதிகம் இருப்பதைப் பார்த்து முழித்து, அருகில் இருப்பவரிடம் காட்ட, ஒரு மூனு பேரு சுத்துப் போட்டுட்டாங்க. அப்புறம் நான் ஆகாசப் புளுகன், அக்னி புத்திரன் ஆதலால் எனக்கு உடல் சூடு எப்பவும் அதிகம் இருக்கும், நாலு மணிணேரம் நான் குளிர் சாதனத்தில் இருந்ததால் உடல் உஷ்னம் ஏறிவிட்டது. எனக்கு கவம், இருமல் எதுவும் இல்லை என்று புளிப் போட்டு விளக்குவதற்குள் தாவு தீர்ந்து விட்டது.

அதான் இந்தியா வந்தாச்சுல்ல, நெட் கனேக்சனும் வாங்கியாச்சு, முதல்ல மகாபாரத்தில் பதினேட்டாம் நாள் போரை எழுதுங்கள், இல்லையேன்றால் ஆட்டேவில் அள் வந்து உங்க மடிக் கணினி தூக்கி அமெரிக்கா அதிகாரிகள் போல எறியப் படும் என்பதை தாழ்மையுடனும், தோழமையுடன், பணிவுடன், வேண்டி விரும்பி மிரட்டிக் கொள்கின்றேன்(கொல்கின்றேன்). நன்றி.

goma said...

போற போக்கைப் பார்த்தால் பன்றிக் காய்ச்சல் வந்தவருடைய பதிவைப் படித்தாலே பன்றிக் காய்ச்சல் நம்மைக் காய்ச்சுடும்னு அறிக்கை விட்டாலும் விடுவாங்க டோய்.....

T.V.Radhakrishnan said...

//ஹாலிவுட் பாலா said...
இந்தியா.. நல்லா இருக்குங்களா? :) :(//

சொர்க்கமே ஆனாலும் நம்ம ஊரைப் போல ஆகுமா!!!
வருகைக்கு நன்றி பாலா

T.V.Radhakrishnan said...

//தண்டோரா ...... said...
அப்ப சனிக்கிழமை சந்திப்புக்கு வந்துடுங்க சாரே//

வந்துடுவோம்..

T.V.Radhakrishnan said...

//அனுஜன்யா said...
:)))

Welcome Back.

அனுஜன்யா//

நன்றி அனுஜன்யா

T.V.Radhakrishnan said...

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நன்றி பித்தனின்வாக்கு

T.V.Radhakrishnan said...

//goma said...
போற போக்கைப் பார்த்தால் பன்றிக் காய்ச்சல் வந்தவருடைய பதிவைப் படித்தாலே பன்றிக் காய்ச்சல் நம்மைக் காய்ச்சுடும்னு அறிக்கை விட்டாலும் விடுவாங்க டோய்.....//

என் பதிவை படிச்சுட்டீங்களே..
உடம்புக்கு ஒன்னுமில்லையே கோமா

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நல்லவேளை தப்பிச்சிட்டீங்க ... டி வி ஆர் சார்

T.V.Radhakrishnan said...

நன்றி Starjan

செந்தழல் ரவி said...

வாக்களித்துவிட்டேன் !!!!!!!!!

க.பாலாசி said...

//ஆகா..என்ன புத்திசாலித்தனம்...அப்படியே ஒருத்தருக்கு காய்ச்சல் வந்திருந்தாலும்..அவர் உண்மையைச் சொல்லி..தண்டையார் பேட்டை மருத்துவமனைக்குச் செல்ல ஆசைப்படுவாரா என்ன)//

அதானே....நம்மாளுங்கதான் புத்திசாலியாச்சே....உங்களுக்கு தெரியாதா?

சரி சென்னைக்கு வந்திருக்கீங்க....வரவேற்கிறேன்.

T.V.Radhakrishnan said...

//செந்தழல் ரவி said...
வாக்களித்துவிட்டேன் !!!!!!!!!//


நன்றி ரவி

T.V.Radhakrishnan said...

//க.பாலாசி said...
சரி சென்னைக்கு வந்திருக்கீங்க....வரவேற்கிறேன்.//

நன்றி பாலாசி

ச்சின்னப் பையன் said...

:-))))))))))

T.V.Radhakrishnan said...

///ச்சின்னப் பையன் said...
:-))))))))))////


நன்றி ச்சின்னப் பையன்

அன்புடன் அருணா said...

அசத்தல்ஸ்!

ஜோ/Joe said...

TVR ஐயா,
பேஸ்ட் ,கத்திரியெல்லாம் கையோடு கொண்டு போகும் பெட்டியில் வைக்கக்கூடாது என தெளிவாக எல்லா இடத்திலும் சொன்னாலும் நீங்க அடம் பிடித்தால் அவங்க என்ன பண்ணுவாங்க ?

மணிகண்டன் said...

****
பேஸ்ட் ,கத்திரியெல்லாம் கையோடு கொண்டு போகும் பெட்டியில் வைக்கக்கூடாது என தெளிவாக எல்லா இடத்திலும் சொன்னாலும் நீங்க அடம் பிடித்தால் அவங்க என்ன பண்ணுவாங்க ?
****

:)-

Welcome back TVRK

நசரேயன் said...

பத்திரமா ஊரு போய் சேர்ந்ததுக்கு வாழ்த்துக்கள்

T.V.Radhakrishnan said...

///அன்புடன் அருணா said...
அசத்தல்ஸ்!///


நன்றி அருணா

T.V.Radhakrishnan said...

///ஜோ/Joe said...
TVR ஐயா,
பேஸ்ட் ,கத்திரியெல்லாம் கையோடு கொண்டு போகும் பெட்டியில் வைக்கக்கூடாது என தெளிவாக எல்லா இடத்திலும் சொன்னாலும் நீங்க அடம் பிடித்தால் அவங்க என்ன பண்ணுவாங்க ?///
ஜோ என்றால் ஜோ தான்

T.V.Radhakrishnan said...

நன்றி மணிகண்டன்

T.V.Radhakrishnan said...

//நசரேயன் said...
பத்திரமா ஊரு போய் சேர்ந்ததுக்கு வாழ்த்துக்கள்//

நன்றி நசரேயன்

Sam said...

சென்னை இமிக்ரேஷனுக்கு முன்னால் வாய் தடுப்புடன் உட்கார்ந்திருப்பவர் முன்னால் ஒரு டி வி இருக்கிறது அதில் தெர்மல் முறையில் பயணியின் உடல் சூடு அளவு தெரியும். அதனால், படிவத்தில் பொய் சொன்னாலும் காய்ச்சல் காய்வது கனிந்து தெரிந்துவிடும்.

T.V.Radhakrishnan said...

தகவலுக்கு நன்றி சாம்..ஆனால் இப்போது நார்மல் இருந்து ஆனால் ஏற்கனவே காய்ச்சல் வந்திருந்தால் யார் ஒப்புக்கொள்வார்கள்?

டவுசர் பாண்டி said...

நல்லாத் தானே போய்க் கிட்டு
இருந்தது !!

பதிவா இது சும்மா கல்வெட்டுல எழதலாம் போங்க தலீவா !!

உண்மைக்கி ரொம்பவே சூப்பர் !! அந்த பேஸ்ட்டு அப்பால குத்தானுன்களா ? இல்லியா ? கலக்கல் மேட்டர் !!

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி டவுசர் பாண்டி