Thursday, November 19, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (20-11-09)

1) ஒரு பறவை கிளையில் அமரும்போது
அது எந்த கணத்தில் முறிந்துவிடும்
என்ற பயத்தில் அமர்வதில்லை
ஏனென்றால் அது நம்புவது
அந்தக் கிளையை அல்ல
தன் சிறகுகளை

-ஜென்

2)குஜராத் மாநிலத்தில் தப்தி நதியின் தென்கரையில் தொடங்கி, மகாராஷ்டிரா,கோவா,கர்நாடகா,கேரளா மாநிலங்களின் வழியாக தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் முடிவடையும் மேற்குத் தொடர்ச்சி மலையின் மொத்தப் பரப்பளவு 1,60,000 சதுர கிலோ மீட்டர்கள்.

3)பத்து கோடி இந்தியர்களுக்கு ரத்த அழுத்த நோய் உள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை கூறுகிறது.அதாவது நீங்கள் சந்திக்கும் பதினொன்று நபர்களில் ஒருவர் ரத்த அழுத்தம் உள்ளவர்.

4)வாழ்க்கை என்பது கடல்..புயல் இல்லாத கடல் இல்லை
வாழ்க்கை என்பது வேள்வி..தீயில்லாத வேள்வி இல்லை
வாழ்க்கை என்பது போராட்டம்..புண் இல்லாத போராட்டம் இல்லை
-காண்டேகர்

5)சிரிப்பு நடிகர்களான லாரலும்-ஹார்டியும் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளனர்.இவர்கள் நட்புடன் மட்டும் 51 தடவைகள் திரையில் தோன்றி சிரிப்பு மூட்டியுள்ளார்கள்.125 பக்கெட் தண்ணீர் இவர்கள் முகத்தில் அடிக்கப் பட்டுள்ளது.இவர்கள் வாங்கிய உதைகள் 537. (தகவல்-ஆனந்த விகடன்)

6)கொசுறு..ஒரு ஜோக்

தலைவர் தைரியமாக எதற்கும் தயார்னு சொல்லியிருக்காரே!
பதவிக்காக எந்த கொள்கையும் விட்டுக் கொடுக்க தயார்னு சொல்லியிருக்கார்

20 comments:

கோவி.கண்ணன் said...

//6)கொசுறு..ஒரு ஜோக்

தலைவர் தைரியமாக எதற்கும் தயார்னு சொல்லியிருக்காரே!
பதவிக்காக எந்த கொள்கையும் விட்டுக் கொடுக்க தயார்னு சொல்லியிருக்கார் //

தலைவர் பதவியையே விட்டுக் கொடுக்கிறேன் என்று மார்தட்டுகிறார்

தலைவருக்கு எம்புட்டு பெரிய மனசு

அடுத்தவர்களுக்கு இல்லை, அவரோட மகனுக்கு விட்டுத்தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்
:)

goma said...

ஹஹ்ஹ்ஹா...ஹ்ஹா

பித்தனின் வாக்கு said...

நல்ல தகவல்கள், நன்று. கடைசி கொசுறு அல்ல தமிழ் நாட்டின் உசிறு.

vasu balaji said...

/தலைவர் தைரியமாக எதற்கும் தயார்னு சொல்லியிருக்காரே!/

எங்களுக்கு தெரியாதாக்கு.சூப்பர் சார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கோவி

T.V.ராதாகிருஷ்ணன் said...

.//.goma said...
ஹஹ்ஹ்ஹா...ஹ்ஹா//

அவ்வளவுதானா :-))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பித்தனின் வாக்கு said...
நல்ல தகவல்கள், நன்று. கடைசி கொசுறு அல்ல தமிழ் நாட்டின் உசிறு..//

வருகைக்கு நன்றி பித்தனின் வாக்கு

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
/தலைவர் தைரியமாக எதற்கும் தயார்னு சொல்லியிருக்காரே!/

எங்களுக்கு தெரியாதாக்கு.சூப்பர் சார்//

வருகைக்கு நன்றி வானம்பாடிகள்

ப்ரியமுடன் வசந்த் said...

எல்லாம் நல்ல தகவல்கள்

தலைவருருருருருருருரு????????????

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வசந்த்

இராகவன் நைஜிரியா said...

அண்ணே அது ஜோக் இல்ல...

உண்மை... உண்மையைத் தவிர வேறு எதுவும் இல்லை..

தகவல்கள் அருமை..

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி இராகவன்

மங்களூர் சிவா said...

/
ஒரு பறவை கிளையில் அமரும்போது
அது எந்த கணத்தில் முறிந்துவிடும்
என்ற பயத்தில் அமர்வதில்லை
ஏனென்றால் அது நம்புவது
அந்தக் கிளையை அல்ல
தன் சிறகுகளை
/

மிக அருமை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சிவா

சிநேகிதன் அக்பர் said...

சுவையா இருந்தது ஆனா அளவு கம்மி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அக்பர்

பின்னோக்கி said...

எல்லாம் அருமை

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பின்னோக்கி

pudugaithendral said...

எதைன்னு சொல்ல!!! சுண்டல் ருசித்தது.

நிஜமாவே பல தகவல்கள் தெரிஞ்சுகிட்டேன்.

நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி புதுகைத் தென்றல்