ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Thursday, November 12, 2009
ஃபோன் அழைப்பும் ..அஞ்சு லார்ஜும்
காலை மணி எட்டு
இரவு முழுதும் தூக்கம் வரவில்லை.குமட்டிக் கொண்டே இருந்தது.கண்களில் எரிச்சல்...கண் மூடிக் கிடந்தேன்..சற்று விழித்தாலும் இமைகளின் பாரம் கண்களை அழுத்தியது.
நடு ஹாலில் மனைவியின் பேச்சுக் குரல் கேட்டது. 'அடிப்பாவி..காலங்கார்த்தால ஃபோன் போட்டு வரவழைச்சுட்டாளோ'
உள்ளே கொஞ்ச நஞ்ச மிச்சமிருந்த போதையும் திடீரென இறங்கியது.தலைக்குமேல் மின் விசிறி சுற்றியும்..வியர்த்தது.
எப்படிப் போய் அவர் முகத்தில விழிப்பது.எழுந்ததும் வேகமாக அவசர வேலை இருக்கிறது என கிளம்பிடலாமா?..அதுவும் முடியாதே..ஞாயிற்றுக்கிழமை ஆயிற்றே!
சே..
கீதா உள்ளே வந்தாள்.'உங்க கிட்டே அவங்க பேசணுமாம் ..' என்றாள்.
படுத்தவாறே சற்று கண்களைத் திறந்து..'என்ன திடீர்னு வந்திருக்கார்?' என்றேன்..ஏதும் தெரியாதவன் போல.கடுமையாக என்னைப் பார்த்தாள் கீதா..அவளது கண்கள் சிவந்திருந்தன..அவளும் தூக்கமில்லாமல் இருந்திக்க வேண்டும்..அல்லது அழுதிருக்க வேண்டும்..கன்னம் சற்று வீங்கி இருந்தது.
'நான் தான் ஃபோன் போட்டு வரவழைத்தேன்' என்றாள்..என் முகம் இறுக..'சீக்கிரம் வாங்க டிபன் சாப்பிட ' என்றபடியே வெளியேறினாள்.
எழுந்து பாத்ரூமிற்குப் போனேன்..
இப்போது என்ன ஆகி விட்டது என பஞ்சாயத்துக் கூட்டியிருக்கிறாள்.நேற்று உடன் வேலை செய்பவர் ஒருவர் வீட்டு திருமண ரிஷப்சன் சென்றிருந்தேன்.உடன் வந்த நண்பர்கள்..ஆசையைத் தூண்டிவிட..ஒரு லார்ஜ்..இரண்டு லார்ஜ்..என மட மட வென ஐந்து லார்ஜ் பொன்னிற திரவத்தை குடித்துவிட்டேன்.வெறும் வயிற்றில் சாப்பிட்டிருக்கக் கூடாது.தொடர்ந்து கல்யாண வீட்டு டின்னர் முடிந்ததும்..வயிறு கடமுடா பண்ண..தலை கனக்க..குமட்டல்..வாந்தி வருவது போல இருந்தது.
எப்படியோ..ஒரு ஆட்டோவைப் பிடித்து..ஆட்டோவிற்கு எவ்வளவு பணம் கொடுத்தேன்..50 ஆ 100 ஆ..
வீட்டின் அழைப்பு மணியை அழுத்தியதும்..கீதா கதவைத் திறந்தாள். அதற்கெனவே காத்திருந்தது போல 'குபுக்' என வாந்தி..மதுவாடை..யுடன்.
'குடித்துவிட்டு வந்திருக்கீங்களா" என அலறினாள் அவள்.அத்துடன் நில்லாது..என்னை பரம்பரைக் குடிகாரான் போல எண்ணி அழ ஆரம்பித்தாள்.
'சீ..வாயை மூடு..'என கன்னத்தில் பளாரென அடித்தது லேசாக ஞாபகம் இருக்கிறது..பின் அவள்..'கார்த்தால உங்களுக்கு வெச்சுக்கிறேன்' என்றாள்..
பாவி அதற்காக இப்படியா செய்வாள்.
ஷவரை திறந்து நின்றேன்..வந்தவர் முகத்தில் எப்படி விழிப்பேன்..ஏதாவது கேட்டால்..கோபம் வந்து எதுவும் சொல்லிவிடக் கூடாது.அது ஒரு பெண்ணின் வாழ்வையே பாதிக்கலாம்.வார்த்தையில் சற்றுக் கடுமையைக் காட்டினால்..வேண்டாம்..வேண்டாம்..என் பர்சனல் மேட்டர்ல தலையிடாதீர்கள் என்றால்...
இப்படி பலவற்றை எண்ணியபடியே..குளித்து முடித்தேன்..உடலில் சற்று தெம்பு வந்தாற் போல இருந்தது.
டைனிங் டேபிள் பக்கம் வந்த நான்..அங்கு தயாராய் அமர்ந்திருந்தவரிடம்..'வாங்க..எப்போ வந்தீங்க? என்ன திடீர்னு?' என்றேன்.
பதிலுக்கு ஒற்றைவரியில் 'நல்லா இருக்கீங்களா" என்று மட்டுமே கேட்டார்.
சூடான பொங்கல்..வழுக்கிக் கொண்டு உள்ளே சென்றது. இறுக்கமான சூழ்நிலை..
அதைக் கலைத்தவராக..'ஒண்ணுமில்ல..நேர்த்திக் கடன் ஒன்னு பாக்கி இருக்கு..அதை முடிச்சுடணும்னு' என்றார்.
'என்ன நேர்த்திக் கடன்..' என்றவாறே கீதாவின் முகம் பார்த்தேன்.முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
'கல்யாணம் முடிந்ததுமே..குலதெய்வம் கோவிலுக்கு போயிட்டு வரணும்னு..அதுதான்..உங்களுக்கு லீவ் கிடைக்கும்னா நாளைக்கே போயிட்டு வந்துடலாம்..நேத்திக்கே அத்தைக் கிட்ட கேட்டேன்..இன்னிக்கு காலைல ஃபோன் பண்ணி..உங்க கிட்ட சொல்லச் சொன்னாங்க..நான் தான் ஞாயிற்றுக் கிழமை ஆச்சேன்னு..நேர்ல வந்தேன்'
'அதனால என்ன மாப்பிள்ள..நல்ல காரியம் நாளைக்கே போகலாம்..'இன்னும் கொஞ்சம் பொங்கல் வைச்சுக்கங்க' என்றபடியே கீதாவை பார்க்க..
அவள் என்னைப் பார்த்து சிரிப்பது போல இருந்தது.
Labels:
சிறுகதை
Subscribe to:
Post Comments (Atom)
25 comments:
நச்...,
ஜார்ஜ் அப்படின்னு படிச்சு வந்தேன்.., அப்புறம் பார்த்தால் லார்ஜ் கதை..,
வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி சுரேஷ்
:)
//'அதனால என்ன மாப்பிள்ள..//
நச்சோ நச்
வருகைக்கு நன்றி
Cable Sankar
சங்கர்
நன்றி No
ஆஹா :)
நாளைக்கு பார்ப்போம் சார்...
அருமைங்க.
//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
ஆஹா :)//
ஓ..ஹோ..
//தண்டோரா ...... said...
நாளைக்கு பார்ப்போம் சார்...//
பார்ப்போம்
//வானம்பாடிகள் said...
அருமைங்க.//
நன்றி வானம்பாடிகள்
ஆஹா ..அருமை ..!
//ஜீவன் said...
ஆஹா ..அருமை ..!//
நன்றி ஜீவன்
அட...எதிர்பார்க்கவே இல்லை முடிவுல.. நச் கதை.
அப்புறம், நான் பின்னூட்டமிடுறத்துக்கு முன்னாடி ஜீவன் ஆஜர் ஆகியிருப்பார்ன்னு நினைச்சேன் :) சரியாப் போச்சு.
//பின்னோக்கி said...
அட...எதிர்பார்க்கவே இல்லை முடிவுல.. நச் கதை.
அப்புறம், நான் பின்னூட்டமிடுறத்துக்கு முன்னாடி ஜீவன் ஆஜர் ஆகியிருப்பார்ன்னு நினைச்சேன் :) சரியாப் போச்சு.//
நான் நீங்க முன்னாலேயே வருவீங்கன்னு எதிர்ப்பார்த்தேன்
கதை நல்லா இருக்கு TVRK. தலைப்பு மட்டும் சரி இல்லை. அஞ்சு லார்ஜ் இல்ல ஆறுன்னு வரணும் :)-
///மணிகண்டன் said...
கதை நல்லா இருக்கு TVRK. தலைப்பு மட்டும் சரி இல்லை. அஞ்சு லார்ஜ் இல்ல ஆறுன்னு வரணும் :)-//
போதையில அஞ்சா..ஆறான்னு சரியா தெரியலை
:-))
முடிவு அருமை, இது போட்டிக்கான சிறுகதையா.
//அக்பர் said...
முடிவு அருமை, இது போட்டிக்கான சிறுகதையா//
நன்றி அக்பர்..போட்டிக்கான கதை அல்ல
கலக்கல் கதை
நன்றி
Starjan
நசரேயன்
ஹா..ஹா..கலக்கல் டிவிஆர்!
:-))
// பா.ராஜாராம் said...
ஹா..ஹா..கலக்கல் டிவிஆர்!
:-))//
நன்றி ராஜாராம்
Post a Comment