Sunday, November 1, 2009

தீபாவளியும் நானும்...

என்னை இந்த தொடர் பதிவிற்கு அழைத்த பழனியிலிருந்து சுரேஷிற்கு நன்றி

1)உங்களைப் பற்றி சிறுகுறிப்பு..
பாவம்ங்க..பசங்க..இப்பவே நிறைய படிக்க வேண்டியிருக்கு..என்னைப் பற்றி வேற எழுதி..தேர்வில் கேள்விகள் வேறு கேட்டால்...என்னால் அவர்களது படிப்பு சுமை ஏற வேண்டாம்.

2)தீபாவளி என்றதும் உங்கள் நினைவிற்கு வரும் சம்பவம்..
கண்ணன் என்கவுன்டரில் நரகாசுரனை போட்டது

3)2009 தீபாவளிக்கு எந்த ஊரில் இருந்தீர்கள்/இருக்கிறீர்கள்
தீபாவளிக்கு இவ்வருஷம் அமெரிக்காவில் இருக்கிறேன்

4)தற்போது இருக்கும் ஊரில் கொண்டாடப்படும் தீபாவளிப் பற்றி ஒரு சில வரிகள்..
இங்கு ஒன்றுமில்லை..தமிழ் அன்பர்கள் அதிகம் உள்ள கம்யூனிட்டியில் ஃபைர் ஒர்க்ஸ் இருந்தது

5)புத்தாடை எங்கு வாங்கினீர்கள்..அல்லது தைத்தீர்கள்
தீபாவளிக்கு புத்தாடை வாங்கும் வழக்கம் பல வருடங்களுக்கு முன்னரே போய் விட்டது

6)உங்கள் வீட்டில் என்ன பலகாரங்கள் செய்ய்யப்பட்டது/வாங்கினீர்கள்
குலாப் ஜாமுனும்..முறுக்கும் செய்தார்கள்.ஆமாம்..எனக்கு ஒன்று புரியவில்லை..இந்த பண்டிகைகளுக்கு கடையில் பலகாரங்கள் (பழைய) வாங்கும் பழக்கம் சரிதானா?

7)உறவினர்களுக்கும்..நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துகளை தெரிவித்தீர்கள் (மின்னஞ்சல்,தொலைபேசி,வாழ்த்து அட்டை)
மின்னஞ்சல் தான்..மற்றபடி தபால்துறையை நம்புவதில்லை..எனெனில்..இப்போது அஞ்சல் துறையை அதிகம் அரசியல்வாதிகள் தான் பயன்படுத்துகின்றனர்..(கடிதம் எழுதுவது,தந்தி அனுப்புவது இப்ப்டி)

8)தீபாவளி அன்று வெளியில் சுற்றுவீர்களா? அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உங்களை தொலைத்து விடுவீர்களா?
தொலைக்காட்சி அதிகம் பார்ப்பதில்லை..ஆகவே வெளியேதான் சுற்றுவது

9)இந்த இனிய நாளில் யாருக்கேனும் ஏதேனும் உதவி செய்வீர்கள் எனில் அதைப் பற்றி சில வரிகள்..தொண்டு நிறுவனங்கள் எனில் அவற்றின் பெயர்,முகவரி,வலைத்தளம்..
தீபாவளிக்கு என்று செய்வதில்லை..மற்றபடி..திருமண நாள்,தாய்..தந்தை நினைவு நாள்..எனக்கே தோன்றும் தினம் ஆகிய நாட்களில்..உதவும் கரங்கள், மயிலையில் உள்ள அன்னை இல்லம் என்ற முதியோர் இல்லம் ஆகியவற்றிற்கு முடிந்த உதவி செய்வதுண்டு.

10)நீங்கள் அழைக்கும் இருவர்..அவர்களின் வலைத்தளங்கள்
கோமா - ஹா..ஹா..ஹாஸ்யம் (மகளிருக்கான 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வேண்டும் என எண்ணுவதால்)
மங்களூர் சிவா -the only 'colourful'blog (அப்படியாவது ஒரு பதிவு போடட்டுமே..என்ற எண்ணத்தில்)

19 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

me the first

ராமலக்ஷ்மி said...

அருமையாகப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.

//கண்ணன் என்கவுன்டரில்..//

:)!

அத்திரி said...

//..(கடிதம் எழுதுவது,தந்தி அனுப்புவது இப்ப்டி)
//

ஹிஹிஹி...................அசத்தல்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
Starjan
ராமலக்ஷ்மி
அத்திரி

கோவி.கண்ணன் said...

:)

தீ(பா)வாளி எண்ணைக் குளியல் பற்றி எதுவும் கேள்விகள் இல்லையா ?

பின்னோக்கி said...

//அஞ்சல் துறையை அதிகம் அரசியல்வாதிகள்

தமிழன்னு உணர்த்திட்டீங்க :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கோவி.கண்ணன் said...
:)

தீ(பா)வாளி எண்ணைக் குளியல் பற்றி எதுவும் கேள்விகள் இல்லையா ?///

என்னது..எண்ணைக் குளியலா? அப்படின்னா...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பின்னோக்கி said...
//அஞ்சல் துறையை அதிகம் அரசியல்வாதிகள்

தமிழன்னு உணர்த்திட்டீங்க :)//


நன்றி பின்னோக்கி

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஓட்டுக்கள் போட்டாச்சு..,

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
ஓட்டுக்கள் போட்டாச்சு..,//

நன்றி SUREஷ்

ப்ரியமுடன் வசந்த் said...

நலம்..பகிர்வில் தங்களைப்பற்றி கொஞ்ச்சூண்டு அறிந்ததில் மகிழ்ச்சி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பிரியமுடன்...வசந்த் said...
நலம்..பகிர்வில் தங்களைப்பற்றி கொஞ்ச்சூண்டு அறிந்ததில் மகிழ்ச்சி//

வருகைக்கு நன்றி வசந்த்

Cable சங்கர் said...

மங்களூர் சிவாவை அழைத்ததற்கான காரணம் அருமை

மங்களூர் சிவா said...

/
மங்களூர் சிவா -the only 'colourful'blog (அப்படியாவது ஒரு பதிவு போடட்டுமே..என்ற எண்ணத்தில்)
/

தூங்கிகிட்டிருக்கிற சிங்கத்தை சுரண்டி பாக்குறீங்க
:)))))))))))))

சிநேகிதன் அக்பர் said...

வெளிப்படையான பதில்கள்

வாழ்த்துக்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Cable Sankar said...
மங்களூர் சிவாவை அழைத்ததற்கான காரணம் அருமை//

நன்றி Sankar

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சிவா said...
தூங்கிகிட்டிருக்கிற சிங்கத்தை சுரண்டி பாக்குறீங்க
:)))))))))))))//

சிங்கத்திற்கு தன் வீரம் தெரியாமல் தூங்கிக் கொண்டிருப்பதால் தான் சீண்ட வேண்டியிருக்கிறது

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்பர் said...
வெளிப்படையான பதில்கள்

வாழ்த்துக்கள்.//

நன்றி அக்பர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ப்ரியமானவள் said...
பெண்களின் முன்னேற்றம் உண்மையா//
அதிலென்ன சந்தேகம் ப்ரியமானவள்