Monday, November 23, 2009

பார்த்துப் போ!!


இப்போதெல்லாம்

பொறுமையாய் இருக்கிறேன்

கோபம் வருவதில்லை

நா எனக்கு அடங்குகிறது

யாரைக் கண்டாலும் மகிழ்கிறேன்

பணத்தை

தலையிலா கொண்டு போகப்போறோம் - என

தாராளமாய் இருக்கிறேன்

ஏன் இப்படி ஒரு மாற்றம்?

பெரிசு பார்த்துப்போ என்கிறான்

துவி சக்கர இளைஞன்

14 comments:

பூங்குன்றன்.வே said...

காலம் கடந்த ஞானம் அந்த பெரிசுக்கு.நமக்கு?

க.பாலாசி said...

பக்குவம் வந்திடுச்சோ.....

நல்ல கவிதை...

vasu balaji said...

/ஏன் இப்படி ஒரு மாற்றம்?

பெரிசு பார்த்துப்போ என்கிறான்/

ஆஹா.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
பூங்குன்றன்.வே
பாலாசி
வானம்பாடிகள்

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல அருமையான கவிதை

இராகவன் நைஜிரியா said...

வயதானாலும் சிலருக்கு இந்த அளவுக்கு ஞானம் வரவில்லையே...

அவங்களை என்னா செய்வது?

கோவி.கண்ணன் said...

//பெரிசு பார்த்துப்போ என்கிறான்

துவி சக்கர இளைஞன்//

பெரிசுபடுத்த வேண்டாம் !
:)

கோவி.கண்ணன் said...

/இராகவன் நைஜிரியா said...
வயதானாலும் சிலருக்கு இந்த அளவுக்கு ஞானம் வரவில்லையே...

அவங்களை என்னா செய்வது?
//

யாருக்கு ஞானவந்தாலும் பெரிசு... 'அந்த காலத்து ஆளு'ன்னு தான் சொல்லுவாங்க :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Starjan

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இராகவன் நைஜிரியா said...
வயதானாலும் சிலருக்கு இந்த அளவுக்கு ஞானம் வரவில்லையே...

அவங்களை என்னா செய்வது?//

எல்லோரும் கோவி போல் இருப்பதில்லை:-))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கோவி.கண்ணன் said...
//பெரிசு பார்த்துப்போ என்கிறான்

துவி சக்கர இளைஞன்//

பெரிசுபடுத்த வேண்டாம் !
:)//

சம்மந்தப்பட்ட நீங்களே பெரிசு படுத்தாத போது எனக்கு என்ன
:-))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கோவி.கண்ணன் said...யாருக்கு ஞானவந்தாலும் பெரிசு... 'அந்த காலத்து ஆளு'ன்னு தான் சொல்லுவாங்க :)//

:-))

நசரேயன் said...

இன்னும் கொஞ்ச நாள் ஆகும் கடை பிடிக்க

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
நசரேயன்