Wednesday, November 11, 2009

நினைவில் நிற்க வேண்டியவை

மனிதர்களில் ஒவ்வொருவரும் ஒரு ரகம்..

ஒருவருக்கு..தனக்கே எல்லாம் தெரியும் என நினைப்பு..மற்றவருக்கோ தனக்குத் தெரிந்தவை சரிதானா..அதை சபையில் சொல்ல முடியுமா..அப்படியே சொன்னாலும் எதிர்ப்பு இல்லாமல் இருக்குமா என்று பயம்.வேறு ஒருவருக்கோ..தான் சத்யசந்தன்..என்றும் மற்றவர்கள் தவறிழைப்பவர்கள்..ஏதும் அறியாதவர்கள் என்றெல்லாம் எண்ணம்.

ஒரு சிறுகதை..

ஒரு பிரபல தொழிலதிபர் இருந்தார்..அவருக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம்..ஊர் உலகும்..இவ்வளவு சின்ன வயதில்..பெரிய தொழிலதிபர் ஆகிவிட்டாரே..அவர் புத்திசாலிதான் என்று புகழாரம் சூட்டின.ஒருநாள்..முக்கிய கருத்தரங்கிற்குச் செல்ல தன் காரில் விரைந்தார்..தனிமையான பகுதி ஒன்றில் கார் நின்றுவிட்டது.எவ்வளவோ முயற்சித்தும் வண்டி கிளம்பவில்லை.குறித்த நேரத்தில் கருத்தரங்கிற்குச் செல்லவேண்டும்..இல்லாவிடின்..பல அறிஞர்கள் கூடும் இடத்தில் இவருக்கு கெட்ட பெயர் ஏற்படலாம்..பண நஷ்டம் ஏற்படலாம்..என்ன செய்வது எனத் தெரியவில்லை..அப்போது ஒருவன் சைக்கிளில் வந்தான்..அவரைப் பார்த்துவிட்டு..என்ன சார் கார் ரிப்பேரா? என வினவ..அவரும் தன் நிலையை விளக்கினார்.உடன் அவன் காரின் பானட்டைத் திறந்து..பரிசோதித்தான்..ஒரு இடத்தில் நாலு தட்டு தட்டினான்.கார் ஸ்டார்ட் ஆனது.

தொழிலதிபர் 50 ரூபாயை எடுத்து நீட்டினார்.அவனோ ஆயிரம் ரூபாய் கேட்டான்..'என்னப்பா..இரண்டு தட்டு தானே தட்டின..அதுக்கு ஆயிரமா?'என்றார் அதிபர்.

அவன் சொன்னான்..'ஐயா..நான் தட்டிய இரு தட்டுக்கு ரேட் 50 ரூபாய்தான்..ஆனா..எந்த இடத்தில் தட்டணும்னு தெரிஞ்சு தட்டினதற்கு ரேட் 950 என்றான்.

எல்லாம் தெரிந்த அதிபருக்கு..கார் ரிப்பேர் தெரியவில்லை..அப்போதுதான் அவர் உணர்ந்தார்..'கற்றது கை மண் அளவு..கல்லாதது உலகளவு' என்று.

மேலும் ஒரு காரியத்தை எல்லோராலும் செய்துவிட முடியாது...ஒவ்வொரு வேலையை ஒவ்வொருவர் திறமையாய் செய்வர்..இதைத்தான் வள்ளுவர்..

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
ததனை அவன்கண் விடல்

என்றார்.ஒரு காரியத்தை இவரால் செய்து முடிக்க முடியும் என்பதை ஆராய்ந்து பார்த்து..அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.


வேறு சிலர் உள்ளனர்..திறமைசாலிகளாய் இருந்தும்..வேலை எதற்கும் செல்லாமல் ..என்னைவிட திறமை குறைந்தவர்கள் நிறைய சம்பாதிக்கிறார்கள்..எனக்கு அதிர்ஷ்டமில்லை என வீட்டினுள் இருந்து புலம்பிக்கொண்டே இருப்பார்கள்.இவர்களுக்காக திருவள்ளுவர் சொல்கிறார்..

இலமென் ரசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்

எனக்கு வாழ வழியில்லை..அதிர்ஷ்டம் இல்லை என்றெல்லாம் புலம்பியவாறு விட்டிற்குள்ளேயே சோம்பி இருப்பாரைக் காணின் பூமித்தாயானவள் கேலி செய்து சிரிப்பாளாம்.

18 comments:

வானம்பாடிகள் said...

அருமையான குறள், நல்ல உதாரணம். :)

velji said...

நினைவில் கொள்ளவேண்டிய சிந்தனை.நன்றி.

தமிழ் பூக்கள் said...

அருமை, தாங்கள் விரும்பினால் தங்கள் படைப்புகளை எமது தமிழ்த்தோட்டத்தில் வெளியிட ஆவலாக இருக்கிறோம்... http://tamilparks.50webs.com

கோவி.கண்ணன் said...

நன்றாக இருக்கிறது.

நினைவில் நிற்க வேண்டியது மட்டுமல்ல நன்றாக சம்மணமிட்டு மனதில் உட்கார வேண்டிய தகவலும் கூட.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமையான கருத்துக்கள்

அடுத்தப் பதிவிற்காக காத்திருக்கும் உங்கள் ஸ்டார்ஜன்

T.V.Radhakrishnan said...

//வானம்பாடிகள் said...
அருமையான குறள், நல்ல உதாரணம். :)//


வருகைக்கு நன்றி
வானம்பாடிகள்

T.V.Radhakrishnan said...

//velji said...
நினைவில் கொள்ளவேண்டிய சிந்தனை.நன்றி.//

நன்றி velji

T.V.Radhakrishnan said...

நன்றி தமிழ் பூக்கள்

T.V.Radhakrishnan said...

//கோவி.கண்ணன் said...
நன்றாக இருக்கிறது.

நினைவில் நிற்க வேண்டியது மட்டுமல்ல நன்றாக சம்மணமிட்டு மனதில் உட்கார வேண்டிய தகவலும் கூட.//

நன்றி கோவி :-)

T.V.Radhakrishnan said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமையான கருத்துக்கள்

அடுத்தப் பதிவிற்காக காத்திருக்கும் உங்கள் ஸ்டார்ஜன்//

நன்றி ஸ்டார்ஜன்..காத்திருப்பதிலும் ஒரு சுகம் உண்டு

மங்களூர் சிவா said...

இரண்டு குறள்களும் விளக்கமும் நன்று. நன்றி.

T.V.Radhakrishnan said...

//மங்களூர் சிவா said...
இரண்டு குறள்களும் விளக்கமும் நன்று. நன்றி.//


வருகைக்கு நன்றி சிவா

அக்பர் said...

வள்ளுவர் வள்ளுவர்தான்.
ரொம்ப தேவையான பதிவு

நசரேயன் said...

மனசிலே வச்சிக்கிறேன்

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி அக்பர்

T.V.Radhakrishnan said...

//நசரேயன் said...
மனசிலே வச்சிக்கிறேன்//

நன்றி நசரேயன்

மதிபாலா said...

நினைவில் நானும் வச்சிக்கிறேன்.

:)

T.V.Radhakrishnan said...

நன்றி மதிபாலா