1) இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ரேஷன் பொருள்களை வழங்க 7 கோடி டன் உணவு தானியங்கள் தேவைப்படும்.அது ஒரு போதும் சாத்தியமில்லை..இப்படிப்பட்ட ஒரு பொறுப்பான அறிக்கையை வெளியிட்டவர் மத்திய உணவுத் துறை அமைச்சர் சரத் பவார்.
2)பயம் நம் எதிரே வராதவரை பயந்துக் கொண்டே இரு..அது வந்து விட்டால்..கண்டதுமே அதை சந்தேகப் படாமல் அடித்துத் தொலைத்துவிடு.
3)இலங்கை வன்னிப் பகுதியில் 2008 டிசம்பர் முதல் 2009 மே வரை..கிட்டத்தட்ட ஆறு மாதங்களில் ஒரு லட்சத்து அறுபதாயிரம் தமிழர் வீடுகள் ராணுவ குண்டு வீச்சில் அழிக்கப்பட்டதாக ஐ.நா.,சபை கணக்கிட்டுள்ளது.
4)எம்.ஆர்.ராதாவிற்கு பிறகு நாடகங்களில் கருத்தைச் சொன்னது எஸ்.வி.சேகர் தான் என கலைஞர் கூறியது..ஒரு வேளை..சேகரின் நாடகங்கள் காமெடி என்பதால்..தானும் காமெடியாக பேச வேண்டும் என்பதால் இருக்கும் என்றே தோன்றுகிறது.(கலைஞர் சேகரை வைத்து காமெடி கீமடி பண்னலையே)
சேகரின் நாடகத்திலிருந்து ஒரு அரியக் கருத்து..
டாக்டர் உட்காரர இடத்திலே கட்டி
கொஞ்சம் தள்ளி உட்காருங்க
5)சமீபத்தில் படித்த ஒரு செய்தி..
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வாழ்க்கை வரலாற்றை எழுதணும்னு ஒரு நிருபர் அவர் கிட்டே வந்தாராம்.பட்டுக்கோட்டை அந்த நிருபரை அழைச்சுக்கிட்டு வெளியே நடந்தார்.பின் ரிக்ஷா வில் ஏறி மவுண்ட் ரோடிற்கு வந்தார்.மவுண்ட் ரோடில் இருவரும் பஸ் பிடிச்சு கோடம்பாக்கம் வந்தாங்க.அங்கிருந்து ஒரு டாக்ஸி பிடிச்சு வடபழனியிலிருந்த ஸ்டூடியோவிற்கு வந்தாங்க.
இவ்வளவு நேரம் வாளாயிருந்த நிருபர்..'வாழ்க்கை வரலாறு' என ஞாபகப்படுத்தினார்.
முதல்லே நடையா நடந்தேன்..அப்பறம் பஸ்..பின் ரிக்ஷா..அடுத்தது டாக்ஸி..இதுதான் என் வாழ்க்கை வரலாறு என்றார்.
6)கனவு காணுங்கள்..பிற்படுத்தப்பட்ட என்ற சொல்லுக்கே இடமில்லாத இந்தியா..சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்கும் இந்தியா..குழந்தைகள் அனைவரும் படிக்கும் இந்தியா..விவசாயிகளின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரும் இந்தியா..பசி என யாரும் சொல்லாத இந்தியா..மூட நம்பிக்கைகள் இல்லாத இந்தியா..-( எங்கேயோ யார் சொன்னதையோ படித்தது. )
7)கொசுறு ஒரு ஜோக்..
தயாரிப்பாளர்- நம்ம படத்துல காதாநாயகன் ஒரு டைலரா இருக்கணும்னு ஏன் சொல்றீங்க?
இயக்குநர்-அப்பத்தான் படம் எங்கெங்க தொய்வு விழுதோ..அங்கெல்லாம் இழுத்து தைச்சுடுவார்
டிஸ்கி- நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..தமிழா..தமிழா விற்கு ஒரு வாரம் விடுமுறை..நீங்கள் படிக்க வேண்டும்..பின்னூட்டம் இட வேண்டும் என்னும் நிர்ப்பந்தங்களிலிருந்து ஒரு வாரம் விடுதலை
17 comments:
இன்னும் எத்தனை வருடங்களுக்கு கனவு காண வேண்டும்??
//ஒரு பொறுப்பான அறிக்கையை வெளியிட்டவர் மத்திய உணவுத் துறை //
இந்தியக் கிரிக்கெட் துறைன்னு போடாம போனீங்களே....
கொசுறு :)
அந்த ஒன்னா நம்பரும் டிஸ்கியும் சூப்பர் சார்
மசாலா சுண்டல். ஹேப்பி வெகேஷன் சார்:)
4)எம்.ஆர்.ராதாவிற்கு பிறகு நாடகங்களில் கருத்தைச் சொன்னது எஸ்.வி.சேகர் தான் என கலைஞர் கூறியது..ஒரு வேளை..சேகரின் நாடகங்கள் காமெடி என்பதால்..தானும் காமெடியாக பேச வேண்டும் என்பதால் இருக்கும் என்றே தோன்றுகிறது.(கலைஞர் சேகரை வைத்து காமெடி கீமடி பண்னலையே)
சேகரின் நாடகத்திலிருந்து ஒரு அரியக் கருத்து.
இதை விட காமெடி
குஷ்பு மணியம்மை என்று பாராட்டியது
//டிஸ்கி- நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..தமிழா..தமிழா விற்கு ஒரு வாரம் விடுமுறை..நீங்கள் படிக்க வேண்டும்..பின்னூட்டம் இட வேண்டும் என்னும் நிர்ப்பந்தங்களிலிருந்து ஒரு வாரம் விடுதலை//
சீக்கிரம் வாருங்கள்.
சீக்கிரம் வாங்கய்யா!
எஸ்.வி.சேகர் மேல் இருந்த மரியாதை அம்மா கால்ல விழுந்தப்போ போயிடுச்சி... அய்யாவ அடிவருடறப்போ இன்னும் சுத்தமா போயிடுச்சி!
பிரபாகர்...
:-)
retn soon sir.
நல்ல தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி....
மத்திய உணவுத் துறை அமைச்சர் சரத் பவாரி அறிக்கை புல்லரிக்க வைக்குது!
// அன்புடன் அருணா said...
மத்திய உணவுத் துறை அமைச்சர் சரத் பவாரி அறிக்கை புல்லரிக்க வைக்குது!
//
கூலான அருணாக்காவே டென்ஷன் ஆகுறாங்க :))
வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி
எஸ்.வி.சேகர் ஒரு சந்தர்ப்பவாதி என்பது அனைவரும் அறிந்ததே. (அவருடைய நகைச்சுவை வசனங்களுக்கு நான் தலை வணங்குபவன் என்பது வேறு விஷயம்).
நன்றி பெயர் சொல்ல விருப்பமில்லை
Indha vaara Sundal sila idathulai sariya vegamalum , sila idangalil romba rusiyaagavum irundhadu..
நன்றி கிருஷ்குமார்
Post a Comment