Sunday, May 16, 2010

ஜெயா டிவியின் ஜாக்பாட் நிகழ்ச்சியிலிருந்து குஷ்பு அதிரடி நீக்கம்


திடீரென திமுகவில் சேர்ந்து விட்டதால், குஷ்பு நடத்தி வந்த ஜாக்பாட் நிகழ்ச்சியிலிருந்து அவரை தூக்கி விட்டதாம் ஜெயா டிவி .

கடந்த 2001ம் ஆண்டு முதல் ஜாக்பாட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அதை குஷ்புதான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் திடீரென முதல்வர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் குஷ்பு.

இதனால் ஜெயா டிவி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது. இதைத் தொடர்ந்து தற்போது குஷ்புவை அந்த நிகழ்ச்சியிலிருந்து தூக்கி விட்டனராம்.

இதுகுறித்து ஜாக்பாட் நிகழ்ச்சித் தயாரிப்புக் குழுத் தரப்பில் கூறுகையில், தொழில் வேறு, அரசியல் வேறு என்ற கண்ணோட்டத்தில் குஷ்பு திமுகவில் இணைந்த போது தெரிவித்துள்ளார். ஆனால் நாங்கள் அப்படி பார்க்க முடியாது. ஜெயா டிவியும் அப்படி பார்க்காது.



திமுகவில் சேருவதற்கு சில நாட்களுக்கு முன்பு கூட ஜாக்பாக்ட் நிகழ்ச்சி சம்பந்தமாக மீட்டிங் நடந்தது. அப்போது கூட அவர் அரசியல் ஆசை பற்றி தெரிவிக்கவில்லை. கட்சியில் சேரும் போது தெரிவிக்கவில்லை. தொழில் வேறு அரசியல் வேறு என்று நினைப்பதால் அப்படி செய்திருக்கலாம்.

ஆனால் நாங்கள், இனி ஜாக்பாக்ட் நிகழ்ச்சியில் குஷ்பு பங்கேற்கக்கூடாது என்பதில் தெளிவான முடிவு எடுத்துள்ளோம். அவரை இந்நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாய் நீக்கியுள்ளோம்.

அவர் பங்கேற்ற 15 எபிசோடு ஒளிபரப்பாகும் நிலையில் தயாராக இருக்கிறது. அதையும் ஒளிபரப்பப்போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.


(நன்றி - தட்ஸ்தமிழ்)

10 comments:

ராஜ நடராஜன் said...

எதிர்பார்த்த ஒன்று.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

புற முதுகிட்டுவிட்டாரே..,

King Viswa said...

ரொம்ப லேட்டான ரியாக்ஷன்

இராகவன் நைஜிரியா said...

எதிர் பார்த்த ஒன்றுதாங்க

சிநேகிதன் அக்பர் said...

ஒளிபரப்பினால்தான் ஆச்சரியம்.

goma said...

அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா

Starjan (ஸ்டார்ஜன்) said...

அட்ராசக்கை அப்போ குஷ்பூவுக்கு எம்எல்ஏ பதவி நிச்சயம்.

goma said...

இரட்டை இலை ஜாக்பாட் போனால் என்ன ?
உதய சூரியன் ஜாக்பாட் தட்டியாச்சே...

அடுத்து, குஷ்பு எம் எல் ஏ ஆவார்.
எல்லோரும் சட்டசபைக்கு தவறாமல் வந்து குஷ்புவின் ஜாக்பாட் பிளவுஸ் கண்டு மகிழ்வார்கள்

மங்குனி அமைச்சர் said...

ஏன்னா ஒரு ஆங்கிள்ள யோசிச்சு இப்படி ஒரு பதிவு போட்ருகிங்க ??

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி