Tuesday, May 25, 2010

சிரிப்போம்...சிரிக்க வைப்போம்...

வாழ்க்கை என்பது ஒரு அற்புதம்..அதை இன்பகரமாக வாழ்ந்து காட்ட வேண்டியது..அவரவர் திறமை..ஏன்..அதை அவரவர் கடமை என்று கூட சொல்வேன்..அதற்கு..இன்றியமையா தேவைகள் பல இருந்தாலும்...குறிப்பாக நகைச்சுவை உணர்ச்சி முக்கியம்..

பல முக்கியச் செய்திகள்..நகைச்சுவையோடு கலந்து கொடுத்தால் தான்..நாம் எதிர்பார்த்தபடி..எதிர்ப்பார்த்த நபர்களை சென்று அடையும்.

ஆகவேதான்..திரைப்படங்களிலும்..கலைவாணர் அவர்களின் நகைச்சுவை..சில சீரிய..கருத்துக்களுடன் இருக்கும்.நகைச்சுவையாக சொல்லும்போது..முதலில் சிரித்தாலும்..பின்னர் அதில் பொதிந்திருக்கும் செய்தியை உணர்வோம்.

சிலர்...என்னதான் சிரிப்பான செய்தியைக் கேள்விப்பட்டாலும்...சிரிக்காமல்..எதையோ பறிகொடுத்தது போல் ..முகத்தை..சீரியஸ் ஆக வைத்திருப்பார்கள்.

நம்மை சிரிக்க வைத்த காமெடியன்கள் பலர் வாழ்க்கை..சோகமயமானது.உதாரணத்திற்கு..நடிகர் சந்திரபாபுவை சொல்லலாம்..அவர்கள் தங்கள் சோகத்தை மறந்து..தண்ணீருக்குள் மீன் அழுதால்..அதன் கண்ணீரை யார் அறிவார்..என்பதற்கேற்ப..அவர் தனிப்பட்ட சோகத்தை மறைத்து நம்மை மகிழ வைத்தார்.

பணத்தை பெரியதாக நினைப்பவர்கள்...சிரிப்பை மறந்தவர்கள்..

எந்திர மயமான வாழ்வில்..காலையில் கடற்கரையில்..நின்று ..உடல் நலனுக்காக..வலுக்கட்டாயமாக..சிரிக்க வேண்டியிருக்கிறது இன்று.. சிரிப்பு..அரு மருந்து என்பதால்..

சிரிப்பு...மனிதனுக்கு மட்டுமே..ஆண்டவன் கொடுத்த வரப்பிரசாதம்

சிரிப்போம்..வாய் விட்டு சிரிப்போம்...

வன்மத்தை விட்டு...எதிரியையும் சிரிக்க வைப்போம்..

சாதிக்க முடியாத விஷயங்களையும்..முக மலர்ச்சியுடன், எதிர் கொண்டால்..சாதிக்கமுடியும்..



(மீள்பதிவு)

16 comments:

goma said...

சின்னசின்ன விஷயங்களுக்காகச் சிரிக்கத் தெரிந்தவர்கள்தான் அதிர்ஷ்டசாலிகள்

மங்குனி அமைச்சர் said...

ஹஹா, ஹஹா, ஹஹஹா ஹஹஹா

க.பாலாசி said...

கண்டிப்பா சிரிக்கணும்ங்க... நல்ல இடுகை...

Chitra said...

பணத்தை பெரியதாக நினைப்பவர்கள்...சிரிப்பை மறந்தவர்கள்..


...... சரிதானோ? நல்ல இடுகை.... சிரிப்பின் சிறப்பையும் அவசியத்தையும் நல்லா சொல்லி இருக்கீங்க...

Starjan (ஸ்டார்ஜன்) said...

டிவிஆர் சார் நலமா.. ரொம்ப நாளா பதிவே எழுதலியே.. நாடகமெல்லாம் எப்படி போகுது?..

அடுத்த நிமிசம் என்ன நடக்குன்னு தெரியாத நாம் இந்த நிமிசம் சந்தோசமா இருக்கலாமே..

நல்ல பகிர்வு டிவிஆர் சார்.

மதன்செந்தில் said...

சிரிக்க வைப்பவர்களே சில நேரம் சிரிப்பதில்லை.. கவுண்டமணி சிரித்து பார்த்திருக்கிறீர்கலா??


வாழ்த்துக்கள்..

www.narumugai.com

vasu balaji said...

வாங்க சார்:)

இராகவன் நைஜிரியா said...

சரியாகச் சொன்னீர்கள்.

சிரித்து வாழ வேண்டும்.. பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே...

வாத்தியார் பாட்டுதான் ஞாபகத்துக்கு வருது.

ஹேமா said...

சிரிக்க வைப்பது என்பது மிகக் கஸ்டமான வேலைதான் !

ராமலக்ஷ்மி said...

நல்ல இடுகை.

மாதேவி said...

சிரி..சிரி..சிரி...

Unknown said...

சிரிப்பு சிரிப்பா வருது ஐயா ..

சிநேகிதன் அக்பர் said...

மீள் பதிவு. மனதை மீள வைக்கும் பதிவு :)

"உழவன்" "Uzhavan" said...

ஹா ஹா ஹா

மங்களூர் சிவா said...

நல்ல இடுகை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி