Sunday, May 9, 2010

கருத்து வேறுபாடுகள்

மனிதன்..ஆறறிவு படைத்தவன். அவனுக்கென்று விருப்பு,வெறுப்புகள் உண்டு.
சாதாரண விஷயங்களையே எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒருவருக்கு இட்லி.காலை உணவிற்கு பிடிக்கும்..ஒருவருக்கு தோசை இப்படி..
எனக்கு வெளியே செல்ல பேண்ட் போட்டு செல்லப் பிடிக்கும்.
ப.சிதம்பரத்துக்கு பொதுக்கூட்டம்..பார்லிமெண்ட் என்றால் வேஷ்டி பிடிக்கும்.,குடும்பத்துடன் வெளியே செல்ல பேண்ட்..சூட்.,
கலைஞருக்கு மஞ்சள் சால்வை.
ஜெயலலிதாவிற்கு..திலகம் இட்டு..அதை சற்றே அழித்து மேலே நீட்டினாற்போன்று இடுதல் பிடிக்கும்.
ஒருவருக்கு சூப்பர் ஸ்டாரை பிடிக்கும்
மற்றவர்க்கு கமலைப் பிடிக்கும்..
ஒவ்வொருவருக்கும் ஒரு மாறுபட்ட ரசனை..
தான் விரும்புபவரை..மற்றவர் விமரிசத்தால் ..அவரை கீழ்த்தரமாக பேசுவது..அவர் மதத்தை இழுப்பது..அவர் ஜாதியை இழுப்பது எல்லாம் இன்று நம்மிடையே சர்வ சாதாரணம்.
நமக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை..அடுத்தவனுக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என எண்ணுபவர்கள்.
இவர்களெல்லாம்..ஏன் புரிந்து கொள்ளமாட்டேன் என்கிறார்கள்.
உனக்கு பிடிப்பது..மற்றவனுக்கு பிடிக்க வேண்டிய அவசியமில்லை.
அவன் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்...அவன் சுதந்திரத்தில்...எண்ணத்தில் தலையிட நாம் யார்.
ஒரு கணம்...மற்றவர்கள் பற்றி பேசும் முன்

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்ற அண்ணாவின் வாசகத்தை நினைவில் கொள்ளுங்கள்.

நமக்கு பிடிக்காததை ஒருத்தர் செய்தால்...அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுங்கள்.

ஒருவன் தவறிழைத்தால்..சாத்வீக முறையில் திருத்தப்பாருங்கள்.

உங்களுக்கு ஒருவன் தவறிழித்தால்..நீங்கள் உடனே பழிக்குப்பழி வாங்க எண்ணாதீர்கள்.

அவனை மன்னியுங்கள்..முடிந்தால் அவனுக்கு நல்லது செய்யுங்கள்.

கோபத்தை அகற்றுங்கள்.

அப்படியும் அவன் திருந்தவில்லையென்றால் உங்களை மலையாக நினையுங்கள்...

22 comments:

Unknown said...

எனக்கு தவறிழைப்பவர்களிடம் இருந்து நான் விலகி விடுவேன்

கோவி.கண்ணன் said...

மீள் பதிவா ?

Chitra said...

///உனக்கு பிடிப்பது..மற்றவனுக்கு பிடிக்க வேண்டிய அவசியமில்லை.////


.....rightly said. :-)

உண்மைத்தமிழன் said...

குட் போஸ்ட் ஸார்..!

Paleo God said...

அருமை!

Sri said...

//அவர் மதத்தை இழுப்பது..அவர் ஜாதியை இழுப்பது எல்லாம் இன்று நம்மிடையே சர்வ சாதாரணம்.

இதற்கும்...

//மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்

இதற்கும்... சம்பந்தம் இல்லை என்று நம்புகிறேன்


-Srini

பிரபாகர் said...

//தான் விரும்புபவரை..மற்றவர் விமரிசத்தால் ..அவரை கீழ்த்தரமாக பேசுவது..அவர் மதத்தை இழுப்பது..அவர் ஜாதியை இழுப்பது //

ஆம் அய்யா இதுதான் இன்றைய நடைமுறையாயிருக்கிறது!

அய்யாவின் இடுகைகளை படிக்க எனக்கு ரொம்ப பிடிக்கும்...

பிரபாகர்...

vasu balaji said...

மீ த செகெண்டேய்! வழிமொழியறதச் சொன்னேன்:))

butterfly Surya said...

உங்கள் கருத்தில் உடன் படுகிறேன்.

பகிர்விற்கு நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

நல்லது நடக்கையிலே கெட்டது தானா விலகும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

இந்த இடுகைக்கும் ஒரு நெகடிவ் ஓட்டா...நடக்கட்டும்...நடக்கட்டும்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி

vaishu said...

பூங்கொத்து!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Vaishu

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Ravi

மங்குனி அமைச்சர் said...

எனக்கு உங்கள திட்றது ரொம்ப புடிக்கும்

சார் , சும்மா தமாசு

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மங்குனி அமைச்சர் said...
எனக்கு உங்கள திட்றது ரொம்ப புடிக்கும்
சார் , சும்மா தமாசு//

நன்றி மங்குனி

நசரேயன் said...

உள்ளேன் ஐயா

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி நசரேயன்

சந்தனமுல்லை said...

ஹ்ம்ம்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி சந்தனமுல்லை

பாரதி .. said...

பஞ்சம் பசி என்று வந்துவிட்டால் போதும் , பசிக்கு கருத்து வேறுபாடு காணமல் போய்விடும்..