Thursday, May 6, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (7-5-10)

ரோமாபுரிச் சக்கரவர்த்தியான ஜூலியஸ் சீசர் தான் முதல் செய்திப் பத்திரிகையின் ஸ்தாபகர்..அக்காலத்தில் ரோம் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைச் சம்பவங்களை ஏட்டில் வரைந்து அருகில் உள்ள ஊர்களுக்கு அனுப்பி வைப்பார்களாம்..செய்திப் பத்திரிகை என்று பார்த்தால் அவற்றைத்தான் முதல் செய்திப் பத்திரிகையாகக் குறிப்பிட வேண்டும்..16 ஆம் நூற்றாண்டு வரை அச்சிட்ட செய்திப் பத்திரிகைகள் ஏதும் வந்ததாகத் தெரியவில்லை.

2)எப்படிப்பட்ட திருமணமாய் இருந்தாலும்..இது முறை ஆகும்..முறை ஆகாது என சாஸ்திரம் சொல்லுமே ஒழிய..எந்த விவாகமும் நடந்து முடிந்த பின்னர் புறக்கணிக்கப் பட மாட்டாது..இது பழைய தரும சாஸ்திரம்.

3)தமிழில் ஒன்று முதல் 899 வரை 'உ' கரத்தில் முடியும் என ஏற்கனவே இப்பகுதியில் குறிப்பிட்டுள்ளேன்..இப்போது இன்னு மொரு விஷயம்..ஒன்று முதல் 999 வரை ஆங்கிலத்தில் எழுதினால் 'A' என்ற எழுத்தே வராது.

4)ரங்கநாதன் கடைத்தெரு ஊழியர்களின் அவலத்தைத் தோலுரித்துக் காட்ட இயக்குநர் வசந்தபாலன் கடந்த ஆறு மாதங்களில் 500 மணி நேரங்கள் அத்தெரு ஊழியர்களுடன் உரையாடி செய்திகளைச் சேகரித்தே படமாக்கினாராம்.

5) திருக்குறளை ஆங்கிலத்தில் முதலில் மொழி பெயர்த்த ஆங்கிலேயர் ஜி.யூ.போப் ஆவார்

6)கலைஞர் சமிபத்தில் டில்லி சென்றிருந்த போது காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவிடம் தமிழகத்திற்கு கூடுதல் அரிசி வேண்டும் என்ற கோரிக்கையை வைக்க..சோனியாவும் ..அது விஷயமாக கவனிப்பதாகக் கூறினாராம்..கலைஞர் சென்னை வருவதற்குள் 2லட்சத்து 50000 டன் அரிசியும்..65 ஆயிரம் டன் கோதுமையும் அனுப்பப்பட்டுவிட்டதாக செய்தி வந்ததாம்...
(அதி புத்திசாலி அண்ணாசாமி கூறுகிறார்..மத்தியில் பிரதமர், உணவுப் பொருள் அமைச்சகம் இதெல்லாம் எதற்கு வீண்..எல்லாப் பொறுப்பையும் சோனியா விடமே ஒப்படைத்தால்..எவ்வளவு விரிவாக செயல் படும் அரசு)

7) ஒரு கொசுறு ஜோக்

குழந்தை- (சிரசாசனம் செய்யும் தந்தையைப் பார்த்துவிட்டு) அம்மா..அம்மா..ஓடி வாயேன்..அப்பாவுக்கு தலை இருக்க வேண்டிய இடத்தில் காலும்..கால் இருக்க வேண்டிய இடத்தில் தலையும் மாறி இருக்கு

8)முகத்தில்

இரண்டு மாத தாடி

கவலையா

வேண்டுதலா

காதல் தோல்வியா

இப்படி பல கேள்விகள்

கேட்டவர்களுக்குத் தெரியாதா

முகம் மழிக்க

தண்ணீர் தேவை என

20 comments:

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

சுவையோ சுவை!

கடைசி வரிகள் சிரிப்பு, சிந்திப்பு. :))

வானம்பாடிகள் said...

அந்த 6) சின்ன குசும்பு பிரமாதம்.

/ 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

கடைசி வரிகள் சிரிப்பு, சிந்திப்பு. :))//

தொலைச்சவனுக்குதானே மதிப்பு தெரியும் இல்லையா சங்கர்:))

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

//தொலைச்சவனுக்குதானே மதிப்பு தெரியும் இல்லையா சங்கர்:))//

ஆமா சார்..!

ஹா ஹா,,

I really miss வறட்..வறட்..! :)))

Chitra said...

அறுசுவையும் இருக்குதுங்கோ...... அருமை.....!!!

Chitra said...

அறுசுவையும் இருக்குதுங்கோ...... அருமை.....!!!

LK said...

nalla irukunga

பிரபாகர் said...

//தமிழில் ஒன்று முதல் 899 வரை 'உ' கரத்தில் முடியும் என ஏற்கனவே இப்பகுதியில் குறிப்பிட்டுள்ளேன்..இப்போது இன்னு மொரு விஷயம்..ஒன்று முதல் 999 வரை ஆங்கிலத்தில் எழுதினால் 'A' என்ற எழுத்தே வராது.//

புதிது புதிதாய் தகவல் தந்து அசத்துகிறீர்கள் அய்யா!

//வானம்பாடிகள் said...
அந்த 6) சின்ன குசும்பு பிரமாதம்.

/ 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

கடைசி வரிகள் சிரிப்பு, சிந்திப்பு. :))//

தொலைச்சவனுக்குதானே மதிப்பு தெரியும் இல்லையா சங்கர்:))//

அக்மார்க் அய்யாவின் குறும்பு!

பிரபாகர்...

க.பாலாசி said...

அதி புத்திசாலி சொன்னது சரிதான்....

கடைசில கவிதையும் அருமை.... சிந்திக்கவேண்டியது....

வரதராஜலு .பூ said...

வழக்கம்போல சுவையான தே.மா.ப.சு.

சந்தனமுல்லை said...

கடைசி கவிதை ...அவ்வ்வ்! :-))

கோவி.கண்ணன் said...

//8)முகத்தில்

இரண்டு மாத தாடி

கவலையா

வேண்டுதலா

காதல் தோல்வியா

இப்படி பல கேள்விகள்

கேட்டவர்களுக்குத் தெரியாதா

முகம் மழிக்க

தண்ணீர் தேவை என //

ரொம்ப கஷ்டம்......முகம் மழிக்கவே தண்ணீர் இல்லை என்றால் குளிச்சும் நாளாகி இருக்கும்... பக்கத்துல நிற்க முடியாதே.

:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//
முகம் மழிக்க

தண்ணீர் தேவை என //

neengathaana athu?

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//அக்காலத்தில் ரோம் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைச் சம்பவங்களை ஏட்டில் வரைந்து அருகில் உள்ள ஊர்களுக்கு அனுப்பி வைப்பார்களாம்.//

சென்சார் போர்டு இருந்ததா தல...,

மணிகண்டன் said...

நல்ல சுண்டல் சார். இந்த கவிதை எழுதறதை எப்ப நிறுத்த போறீங்களோ தெரியலை !

ஹேமா said...

கலவை கலக்கல்.
கடைசிச் சிந்தனை நெகிழ்வு.

ஈரோடு கதிர் said...

வசந்தபாலன்

சோனியா

தண்ணீர்

மூன்றும் மூன்றுவித சுவை

இராமசாமி கண்ணண் said...

இந்த வார சுண்டல் நல்லாருக்கு சார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி

"உழவன்" "Uzhavan" said...

நீரின் அவசியக் கவிதை ரொம்ப சூப்பர் சார்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//உழவன்" "Uzhavan" said...
நீரின் அவசியக் கவிதை ரொம்ப சூப்பர் சார்..//

நன்றி Uzhavan