Sunday, May 30, 2010

இந்த இடுகை யாரையும் குறிப்பிட்டதல்ல

சில குறள்களும்..விளக்கமும்..

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டுந் தம்மோடு
கொள்ளாத கொள்ளா துலகு

(தம்முடைய நிலைமைக்கு மாறான செயல்களை உயர்ந்தோர் பாராட்டமாட்டார்கள் என்பதால்..அவர்கள் பழித்துரைக்காத செயல்களையே செய்திடல் வேண்டும்)

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்

(தன்னைப் பற்றி அதிகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு..எல்லை மீறிப்போகும் ஒருவர்..நுனிக்கிளையில் ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி செய்தால் என்ன ஆவாரோ அந்தக் கதிக்கு ஆளாவார்)

அழிவதூம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமுஞ் சூழ்ந்து செயல்

(எந்த அளவிற்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறகே ஒரு செயலில் இறங்க வேண்டும்)

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பா டஞ்சு பவர்

(களங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள்)

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்

(ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்கும் என்று அறிவுடையவர்கள் சிந்திப்பார்கள்.மற்றவர்கள் மாட்டார்கள்)

பிழைத்துணர்ந்தும் பேதமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்

(எதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள், சிலவற்றைப் பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும் முறையின்றி பேச மாட்டார்கள்)

23 comments:

வானம்பாடிகள் said...

ம்ம்:(

Robin said...

நன்றி ஐயா!

goma said...

பழரசம் போல் வடித்து தந்திருக்கிறீர்கள்.

நல்ல ருசி

Anonymous said...

செய்தக்க வல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்

Anonymous said...

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தமது
கருமமே கட்டக்ளைக் கல்

அக்பர் said...

குறள்களும் விளக்கமும் அருமை.

தலைப்பு ஏன் இப்படி?

மங்களூர் சிவா said...

வினை வலியும், தன் வலியும் மாற்றான் வலியும், துனை வலியும் அப்புறம் என்ன மறந்து போச்சே!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

"நச்" என்று இருக்கிறது ஐயா..!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்தவர்களுக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மங்களூர் சிவா said...
வினை வலியும், தன் வலியும் மாற்றான் வலியும், துனை வலியும் அப்புறம் என்ன மறந்து போச்சே!//
வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியுந் தூக்கிச் செயல்
(செயலின் வலிமை,தன் வலிமை,பகைவரின் வலிமை,இரு சாராருக்கும் துணையாய் இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்து பின்னரே அச் செயலில் ஈடுபட வேண்டும்)

LK said...

:((

மங்குனி அமைச்சர் said...

சார் ,உள்குத்து அருமை , தயவுசெய்து யாருன்னு சொல்லுங்க நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன்

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மங்குனி அமைச்சர் said...
சார் ,உள்குத்து அருமை , தயவுசெய்து யாருன்னு சொல்லுங்க நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன்//

:-))))

புருனோ Bruno said...

நீங்கள் கூறாமல் விட்ட குறள்

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

--

அதே நேரம் உங்களுக்கு சில குறள்கள்

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

--

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

--

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

புருனோ Bruno said...

தவறிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்

ஷர்புதீன் said...

தீதும் நன்றும் பிறர் தர வாரா.....

புருனோ Bruno said...

//
தீதும் நன்றும் பிறர் தர வாரா..//

ஆகா

இப்பவே கோவை மூட் வருதே

T.V.ராதாகிருஷ்ணன் said...

//புருனோ Bruno said...
தவறிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்//

மருத்துவர் ஐயா..இடுகையை சரியாக படிக்கவில்லை என்றே தோன்றுகிறது..
அறிவுரை யார் சொன்னாலும்..ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி தலைவன் குழுமம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// LK said...
:((//

நன்றி LK

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஷர்புதீன் said...
தீதும் நன்றும் பிறர் தர வாரா.....//

நன்றி ஷர்புதீன்