Sunday, May 2, 2010

தமிழக உளவுத் துறையும்..மாநில பிரச்னைகளும்..

சமீபத்தில் சிகிச்சைக்கு வந்த பிரபாகரனின் தாயாரை திருப்பி அனுப்பியதைப் பற்றி..தி.மு.க., மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளதே..என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் நிருபர்கள் கேள்வி கேட்ட போது ..

"அவர்களுக்குத் தெரியாமல் திருப்பி அனுப்பினார்கள் என்பது எல்லாம் எப்படி முடியும்? விமான நிலையத்தில் தமிழக அரசின் உளவுத் துறை ஆட்கள் எப்போதும் இருப்பார்கள்..யார் வந்தாலும் போனாலும் உடனடியாக தமிழக அரசுக்குத் தெரிந்துவிடும்.அதுவும் பிரபாகரன் தாயார் வந்து..அவரைத் திருப்பி அனுப்பிய விவகாரம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நடந்திருக்கிறது.அப்படி இருக்க தமிழக அரசுக்குத் தெரியாமல் நடந்தது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அப்படி என்றால் இவர்களின் உளவுத் துறை என்ன அத்தனை திறமையற்றதா? '" என்றுள்ளார்..

இந்நிலையில்..

நேற்று தில்லியில் பெரியார் மையத்தைத் திறந்து வைத்து கலைஞர் பேசுகையில்..

'அண்டை மாநிலங்களில் இருந்து தண்ணீர் பெற்றுத்தான் தமிழகம் வாழவேண்டியுள்ளது.அண்டை மாநிலங்களுக்கோ தண்ணீர் தரும் மனப்பான்மையில்லை.இந்திய ஒருமைப்பாடு என்பது ஒரு வழிப்பாதையாக இருக்கக்கூடாது..தமிழகத்தை பட்டினி போட்டு விட்டு, பக்கத்து மாநிலம் வேடிக்கைக் காட்டுவதையும்..வேடிக்கையை ரசித்துக் கொண்டிருப்பதும் தவறு..அவர்கள் அடித்துக் கொண்டு வரட்டும் என மத்திய அரசு இருக்கக்கூடாது.தலைநகர் டெல்லியில் இருந்து சொல்லுகிறேன்..இனியாவது பிரச்னைகளை, தகராறுகளை உன்னிப்பாக கவனித்து நமக்கும் பொறுப்பு உண்டு என்று மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றுள்ளார்.

இதுநாள் வரை மத்திய அரசை விமரிசிக்க வேண்டிய நேரங்களிலும் மௌனியாய் இருந்தவர் ..இப்போது இப்படிப் பேச வேண்டிய அவசியம் என்ன?

கீழ்கண்ட செய்திகள் காரணமாய் இருக்காது என நம்புவோம்..

நாடாளுமன்றத்தில் தி.மு.க.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராஜா மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டும்..அவர் பதவி விலகக் கூறி எழுப்பப்பட்டுவரும் பிரச்னையும்

மத்திய அமைச்சர் அழகிரி அவரது துறை சம்பந்தப்பட்ட எந்தக் கேள்விக்கும் பதில் அளிப்பது இல்லை ..மற்றும் சபாநாயகர் அழைப்பையும் அவர் புறக்கணித்துவிட்டார் என்று சொல்லப்படும் குற்றச்சாட்டும்.

11 comments:

cheena (சீனா) said...

அன்பின் டிவிஆர்

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ - யாருக்குத் தெரியும்

நட்புடன் சீனா

*இயற்கை ராஜி* said...

mmm

ஈரோடு கதிர் said...

இதெல்லாம்... சும்மா டகால்டி வேலைங்க....

புலி வராது

vasu balaji said...

நம்பீட்டம்:))

ஈரோடு கதிர் said...

/இதெல்லாம்... சும்மா டகால்டி வேலைங்க..../

ங்கார்ரா:). ஒழுங்கு மருவாதியா டகால்டின்னா என்னான்னு ஒரு இடுகை வரணும்:))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//cheena (சீனா) said...
அன்பின் டிவிஆர்

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ - யாருக்குத் தெரியும்

நட்புடன் சீனா//

வருகைக்கு நன்றி சீனா Sir

T.V.ராதாகிருஷ்ணன் said...

// *இயற்கை ராஜி* said...
mmm//

MMM

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஈரோடு கதிர் said...
இதெல்லாம்... சும்மா டகால்டி வேலைங்க....

புலி வராது//

அப்படியா சொல்றீங்க...எனக்கென்னவோ புலி வந்திடும்னுதான் தோணுது

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
நம்பீட்டம்:))

ஈரோடு கதிர் said...//

வருகைக்கு நன்றி Bala

இராகவன் நைஜிரியா said...

இன்னுமா இதையெல்லாம் நம்பிகிட்டு இருக்கீங்க.

மாநில சுயாட்சி அடுத்து எதிர்பார்க்கலாமா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி இராகவன் நைஜிரியா

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி thalaivan