2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி ராஜா கடந்த 10 மாதங்களாக திகார் சிறையில் உள்ளார்.
இந்நிலையில் அவர் வெள்ளியன்று நீதி மன்றத்திற்கு வந்த போது பத்திரிகையாளர்களிடம் பேசினார்..
அவர் கூறுகையில்..
திகார் சிறை வாழ்க்கை என்னை செம்மையாக்கியுள்ளது.
12 ஆண்டுகள் எம்.பி.ஆக இருந்து விட்டேன்.சிறை வாழ்க்கையும் அனுபவித்து விட்டேன்.இவற்றில் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன.
நான் தற்காலிக விடுதலையை விரும்பவில்லை.இவ்வழக்கிலிருந்து முழுமையாக வெளியேற வேண்டும்.ஆகவே நான் ஜாமீன் கெட்டு மனு தாக்கல் செய்யவில்லை.ஒவ்வொரு விஷயத்தையும் கூர்ந்து கவனித்து வருகிறேன்.நான் நிரந்தரமாக ஜெயிலில் இருந்து விடுவேன் என நினைக்கக் கூடாது.கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்த பின் நான் ஜாமீன் மனு தாக்குவது குறித்து யோசிப்பேன்..' என்றுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், 'நான் வாயைத் திறக்கும் போது, பலர் ஜெயிலுக்கு போக வேண்டியிருக்கும்' என்றும் கூறியுள்ளார்.
அவர யாரை மனதில் நிறுத்தி..இதைக் கூறியுள்ளார் என்பது சம்பந்தப் பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும் எனத் தோன்றுகிறது.
1 comment:
அப்போ யாரோ தப்பு பண்ணியிருக்காங்க என்பதும், அது இவருக்குத் தெரியும் என்பதும் உறுதியாகிறது!! தவறு செய்தவர்களைப் பற்றித் தெரிந்தும் அதை சட்டத்தின் முன் தெரியப் படுத்தாமல் இருப்பதும் குற்றமே அல்லவா?
Post a Comment