அண்ணா, கலைஞர்,எம்.ஜி.ஆர்.,ஜெ இந்த நான்கு திராவிடக் கட்சி முதல்வர்களில் ஐந்து ஆண்டுகள் முழுமையும் முதல்வராய் இருந்த முதல் முதல்வர் யார் தெரியுமா?ஜெ தான்.கலைஞர் நான்காவது,ஐந்தாவது முறையே முதல்வாராக ஐந்து வருடங்களும் இருந்தார்.
2)அமெரிக்க குடிமகன்களுக்கு அளிக்கப்படும் மிக உயரிய விருது காங்கிரஷனல் தங்கப்பதக்கம்.இந்த பதக்கத்தைப் பெற்றவர் மதர் தெரசா..அவரின் தன்னலமற்ற சேவைக்காக வழங்கப்பட்டது.
3)13000 கோடி ரூபாயில் உருவாகியுள்ளது கூடங்குளம் இந்திய அணுமின் நிலையம்
4)இந்திய மொழிகளிலேயே முதன் முதலில் பைபிள் தமிழில்தான் (1718) மொழிபெயர்க்கப்பட்டது.
5)ஈழம் தொடர்பாகவும்,தமிழனின் வீரம் தொடர்பாகவும் இடம் பெறும் வசனங்களை நீக்கினால்தான் படத்தை வெளியிடமுடியும் என இலங்கை கூறியதால்..அவ்வசனங்கள் படத்திலிருந்து நீக்கப்பட்டன இலங்கையில்.உலகத்திற்கு உரக்கச் சொல்ல வேண்டிய வசனங்கள் நீக்கப்பட்டதில் எங்களுக்கு மிகுந்த வருத்தம் என்றுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
6)எவ்வளவு லாபத்தை இழந்தாலும் இனி நான் எடுக்கப்போகும் படங்களுக்கு எஃப்,எம்.எஸ்., உரிமையை இலங்கைக்குக் கொடுக்கமாட்டேன் என்றுள்ளார் நடிகரும் தயாரிப்பாளருமான சசிகுமார்
7)டாப் 10 பணக்காரர் இந்தியர்கள் லிஸ்டில் முதன்முறையாக ஒரு பெண் 47 ஆயிரத்து 500 கோடி சொத்து மதிப்போடு ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளார்.அவர் ஜிண்டால் ஸ்டீல் நிறுவனத்தின் தலைவர் சாவித்ரி ஜிண்டால்.
8)வயல் வரப்பில் நடந்து..வரப்பு ஒத்தையடி பாதை ஆகிறது.அந்த பாதையில் ஆங்காங்கு வெண்பனி..அது எப்படியிருக்கிறது..ஒரு புலவனின் பார்வையில் தெரியுமா? இதோ படியுங்கள்.
'சில ஆளுங்களுக்கு நடு மண்டை கழிஞ்சு ஓரஞ்சாரம் மட்டும் கொத்துக் கொத்தாய் முடியிருக்கும் பாருங்க..அப்படி நடந்து நடந்து நடுவிலே வழுக்கையாகிப் போன வரப்போரமா தை மாசப் பனித்துளிக மூட்டை மூட்டையா படுத்து கெடக்குது"
விகடனில் வைரமுத்து எழுதிவரும் மூன்றாம் உலகப் போர் தொடரில்.வைரமுத்துவின் தமிழுக்கு ஒரு வணக்கம்.
4 comments:
அனைத்தும் அருமையான தகவல்கள்
வசனங்கள் நீக்கி இலங்கையில் திரையிடப்பட்ட படம் எதுவென்று சொல்லவில்லையே ஐயா.அப்படி தமிழ்பேசும் வசனங்கள் நீக்கி சிங்கள தேசத்தில் அந்தப் படத்தை வியாபாரம் செய்யவேணுமா.
விளங்கிப் பார்ப்பவர்கள் தமிழர்கள்தானே.
ஓ...படத்தைச் சிங்களவனுக்கு விற்பவரும் ஒரு தமிழரோ !
வருகைக்கு நன்றி..
உதயநிதி ஸ்டாலின் என்று சொன்ன பின் படம் பெயரையும் சொல்ல வேண்டுமா ஹேமா
வருகைக்கு நன்றி..suryajeeva
Post a Comment