Thursday, November 10, 2011

டி ஐ ஜி ஒரு மெண்டலா..!!!???




அரசாளும் கட்சிகளிடம் பணிபுரியும் அதிகாரிகள் படும் அவஸ்தை சொல்லில் அடங்காது.

இதற்கான ஒரு உதாரணம்..

உத்தரபிரதேசத்தில் ஒரு ஐ பி எஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதியைப் பாருங்கள்.இவர் மாநில தீயணைப்பு படையின் தலைவராக இருந்தவர் டி.டி.மிஸ்ரா இப்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.மிஸ்ராவை சந்திக்க மஃப்டியில் வெளியே நிற்கும் போலீசார் யாரையும் அனுமதிப்பதில்லை.

காரணம்....

தீயணைப்புத் துறைக்கு சாதனங்கள் வாங்க அனுமதி கோரும்  ஃபைல் ஒன்று சென்ற வாரம் மிஸ்ராவின் ஒப்புதல் கையெழுத்துக்கு வந்தது.படித்துப் பார்த்தவர்,'இந்தத் துறையில் எல்லாமே ஊழல்.கருவிகள் தரமாக இல்லை.அநியாய விலைக்கு வாங்கப்படுகிறது.தாறுமாறாக லஞ்சம் புரள்கிறது' என எழுதினார்.

மேலதிகாரிக்கு தகவல் போனதும் குறிப்பை திருத்தி எழுத உத்தரவு வந்தது.மறுத்துவிட்ட மிஸ்ரா,'என் இருபது வருட சர்வீஸில் இந்த மாதிரி ஊழல் அரசை நான் பார்த்ததில்லை.எங்கு திரும்பினாலும் லஞ்சம்.தவறை சுட்டிக்காட்டினால் உயிருக்கு ஆபத்து' என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

செய்தியாளர்கள் சென்றதும், அரைமணி நேரத்தில். போலீஸ்காரர்கள் வந்து அவரை கட்டயப்படுத்தி அழைத்துச் சென்று மனநல மருத்துவ மனையில் சேர்த்துவிட்டனர்.

'மிஸ்ராவிற்கு மனநலம் பாதித்துள்ளது, ஆகவே கண்டபடி உளறுகிறார்.அவருக்கு சிகிச்சை அளிக்கப் படுகிரது' என மாயாவதி அரசு அறிவித்தது.

தவிர்த்து, 'அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் தான்' என குடும்பத்தினரிடம் எழுதி வாங்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்தது அரசு.

எந்த மாநிலமானால்..என்ன..ஆளும் கட்சிக்கு சாத்கமாக அதிகாரிகள் செயல் பட்டால்..ஓகே..இல்லவிட்டால் மிஸ்ரா கதிதான்.

ஆனால் அதே சமயம் சாதகமாக செயல்படும் அதிகாரிகள்..மாநிலத்தில் அரசு மாறினால்..அவஸ்தை பட நேரிடும்..

இந்தியாவில் அரசு அதிகாரிகளாய் இருப்பவர்கள் ..ஐயோ பாவம்..என்ற நிலைதான்.

எதிர்காலத்தில் ஜனநாயகம் என்னவாகுமோ என கவலைப்படுபவர்கள் இதைப் பற்றியும் கவலைப்பட்டால் நல்லது.

4 comments:

cheena (சீனா) said...

அன்பின் உ.த - உண்மை உண்மை - இந்தியாவில் இன்றைய நிலைஅமை இது தான். என்ன செய்வது ..... நட்புடன் சீனா

SURYAJEEVA said...

ஏற்கனவே இது போல் நம் தமிழகத்தில் தூசி என்ற ஊரில் உள்ள உதவி ஆய்வாளருக்கு நடந்தது தான் நினைவில் வந்தது

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Cheena sir

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி suryajeeva