ஆசியாவின் இரண்டாவது பெரிய நூலகம்.
சென்னை கோட்டூர்புரத்தில் 170 கோடி செலவில், 8 ஏக்கர் நிலப்பரப்பில் ..தரைத் தளத்துடன் 8 மாடிகள் கொண்ட..கிட்டத்தட்ட 4.5 லட்சம் சதுர அடியில் உருவானது.
தரமிக்க நூலகங்களில் காணப்படும் அனைத்து தொழில் நுட்பங்களும் இணைந்த மின் நூலகம்,இதனுடன் யுனெஸ்கோ வும் இணைந்துள்ளது.
இந் நூலகத்திற்காக 24075 தலைப்புகளில் 92440 தமிழ் நூல்கள் வாங்கப்பட்டுள்ளன.அச்சிட்ட நூல்கள் தவிர 50000 மின் நூல்கள், 11000 மின் இதழ்கள் இடம் பெற்றுள்ளன.இந் நூலகத்தில் ஒரே நேரத்தில் 1250 பேர் அமர்ந்து படிக்க முடியும்.தினமும் 3000 பேருக்கு மேல் வந்து செல்கின்றனர்.
இதன் சிறப்பு அம்சங்கள்...
18000 சதுர அடியில் குழந்தைகள் பிரிவு,கதைப் புத்தகங்கள்.. குழந்தைகளுக்கான ஆடியோ, வீடியோ பிரிவு
சூரிய ஒளி புகும் வழியில் கட்டிடத்தின் உள்ளே கண்ணாடி ஜன்னல்கள், வெளிச்சம் காற்று வசதிக்காக உள்ளார்ந்த முற்றம்.
மொத்தம் 12 லட்சம் நூல்கள்..ஆயிரக்கணக்கான இணைய பத்திரிகைகள்.
பிரெய்லி பிரிவு
கலைஞர் ஆட்சியில் உருவான ஒரே காரணத்திற்காக இந் நூலகம் மூடப்பெற்று..அங்கு குழந்தைகள் நல மருத்துவமனை இயங்கும் என ஜெ கூறியுள்ளார்.
திமுக வால் உருவான எதை வேண்டுமானாலும் அவர் அழிக்கட்டும்..அல்லது மாற்றட்டும்..
ஆனால் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள், தமிழ் அறிஞர்கள் ஆகியோர் பயனடையும் வழியில் உருவான நூலகத்தில் கை வைக்க வேண்டாம்.இந்த இடத்திருந்து தானே மாற்றுகிறோம்..என சொல்லலாம்..ஆனால்..நூல் நிலயத்திற்காகவே உருவாக்கப் பட்ட இடத்திருந்து ஏன் மாற்ற வேண்டும்.
குழந்தைகள் நல ஆஸ்பத்திரி வேண்டுமானால்..அதற்கான மையப் பகுதியில் இடமா இல்லை..வேறு இடத்தைத் தேர்ந்தெடுத்து கொள்ளட்டும்.
கலைஞர் கூறியிருப்பது போல தன்மானம் உள்ள தமிழர்கள், தமிழ் அறிஞர்கள் முடிவெடுக்க விட்டு விடுகிறேன் என்ற கூற்றுக்கேற்ப...மக்கள் அனைவரும்..இந்த விஷயத்தில் ஒன்று சேர்ந்து எதிர்க்க துணிய வேண்டும்..மக்கள் சக்தியால் மட்டுமே இதைத் தடுத்து நிறுத்த முடியும்..
வேண்டுமானால்..அந் நூலகத்தில் உள்ள கலைஞர் பெயருள்ள கல்வெட்டுகளை ஜெ அகற்றிக் கொள்ளட்டும்..அவருக்கு வேண்டியது அதுதானே..
13 comments:
கிடைத்த வெற்றியை நம்பிக்கையை இது போல் அவசர முடிவுகளால் இழந்து விடுவார் போலிருக்கிறதே...
கலைஞர் கூறியிருப்பது போல தன்மானம் உள்ள தமிழர்கள், தமிழ் அறிஞர்கள் முடிவெடுக்க விட்டு விடுகிறேன் ...
அது இருந்தால் ,தமிழர்கள் மட்டுமல்ல ,மொத்த இந்தியர்களும் ,ஏன் இன்னமும் இந்த அரசியல்வாதிகளின் ,அலட்சியப்போக்கு,சுயநலபோக்கு ,எல்லாவற்றையும் கடந்த 64 ஆண்டுகளாகப் பொறுத்துப் போய்க் கொண்டிருப்பார்கள்
பல்வேறு பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பும் முயற்சி, let us see if it is going to backfire
Nothing to do with Tamilan thanmanam.
Library is only being shifted.And the persons using the library is not as stated by you.
Your reaction is very much over the top
எங்கள் யாழ் நூலகம் ஞாபகத்திற்கு வருகிறது !
வருகைக்கு நன்றி ஹேமா
வருகைக்கு நன்றி gOma
வருகைக்கு நன்றி suryajeeva
வருகைக்கு நன்றி Vin Parthi
/////goma said... கிடைத்த வெற்றியை நம்பிக்கையை இது போல் அவசர முடிவுகளால் இழந்து விடுவார் போலிருக்கிறதே.../////
நண்பர் goma அவர்களே...!
அவங்க எங்கே ஜெய்ச்சாங்க...!
ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோபத்தில்...
"This or That"ல்....
That"டை மொத்தமா ஜெயக்கவைச்சாங்க...!
என்னமோ அவங்க கஷ்ட்டப்பட்டு ஜெயச்சாமாதிரி ரொம்ப பீல் பண்றீங்க...!
இதென்ன...!
இன்னமும் இருக்கு...!
இப்பத்தானே ஆரம்பிச்சிருக்காங்க...!
இனி வருங்காலங்களில் தெரியும்...!
தினமணி தன்னுடைய தலையங்கத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறது ( சில பகுதிகள் இங்கே )
"கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டுவது என்ற முடிவு உள்நோக்கம் உடையது என்று நம்புவதற்கு இடமுண்டு. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் அவர் தேர்ந்தெடுத்துப் பூஜை போட்டிருந்த இடத்தில் தலைமைச் செயலகம் கட்டித் தான் கட்டிய தலைமைச் செயலகத்தைச் செயலிழக்க வைத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி அந்த இடத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைக் கட்டினார் என்கிறார்கள். இருக்கலாம். அதற்காக? நூலகம் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கும் வந்த பிறகு, சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களை இன்னொரு கட்டடத்துக்கு இடம் மாற்றி, நூலகத்துக்காகக் கட்டப்பட்ட அமைப்பை மருத்துவமனையாக மாற்றுவது என்பது, நமது இளைஞர்களின் பாஷையில் சொல்வதாக இருந்தால், "ரொம்ப ஓவர்!'"
அண்ணா நூற்றாண்டு நூலகம் ஊழலின் ஒரு மிகப்பெரிய அடையாளச் சின்னம் என்பதை முதல்வருக்கு ஏன் அவரது ஆலோசகர்கள் சுட்டிக்காட்டாமல் விட்டார்கள் என்று தெரியவில்லை. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து இன்னொரு தலைமைச் செயலகத்தை கட்டிவிடக்கூடாது என்பதற்காக மட்டும் அந்த நூலகம் கட்டப்படவில்லை. தனது குடும்பத்தினரும் அமைச்சர்கள் சிலரும் மக்கள் வரிப்பணத்திலிருந்து பல கோடி ரூபாய்களைச் சாப்பிட்டு ஏப்பம் விடுவதற்காகவும் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கட்டப்பட்டது அந்த நூலகம் என்பது விவரம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.
சென்னை கோட்டூர்புரத்தில் ரூ. 170 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் தொடங்கி ஏறத்தாழ ரூ. 230 கோடி ரூபாயை விழுங்கி இருக்கிறது இந்த நூலகம். சுமார் 8 ஏக்கர் நிலப்பரப்பில் 3.75 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டடத்துக்கு இவ்வளவு பணம் செலவாக வேண்டிய அவசியம் என்ன?
சதுர அடிக்கு ரூ. 2,000 என்று கணக்கிட்டாலும், 3.75 லட்சம் சதுர அடி அளவில் கட்டடம் கட்ட அதிகபட்சம் ரூ. 75 கோடிதானே செலவாகி இருக்கும்? இத்தனைக்கும், இடம் இலவசம், கட்டட அனுமதி, குடிநீர் வடிகால் உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு உடனடி அனுமதி, லஞ்சம் கிடையாது எனும்போது இத்தனை கோடி செலவுக்கு என்ன காரணம்?
சுமார் ஆறு லட்சம் புத்தகங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். இதில் ஏறத்தாழ 4 லட்சம் புத்தகங்கள் பல்வேறு பல்கலைக் கழகங்கள் மற்றும் அமைப்புகள் மூலம் பெறப்பெற்றவை. தமிழ்நாட்டிலுள்ள ஒட்டுமொத்தப் பதிப்பாளர்களிடம் உள்ள அத்தனை புத்தகங்களையும் வாங்கினால்கூட ரூ. 5 கோடிக்குமேல் தேவையில்லையே... வெளிநாட்டுப் புத்தகங்களை ரூ. 5 கோடிக்குமேல் வாங்கினாலும்கூட ரூ. 10 கோடிதானே செலவாகி இருக்கும்? எல்லா செலவும் சேர்த்து அதிகபட்சம் ரூ. 100 கோடியைத் தாண்ட வாய்ப்பில்லையே, எங்கே போயிற்று மீதம் செலவாகியிருக்கும் ரூ. 130 கோடி?
உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட்டு, நூலகத்தின் பெயரால் நடந்த மோசடியை வெளிச்சம்போட்டுக் காட்டியிருந்தால், அரசைப் பாராட்டி இருக்கலாம். அதைவிட்டுவிட்டு, மக்கள் வரிப்பணத்தில் கட்டி முடிக்கப்பட்டு, செயல்பட்டுக் கொண்டிருக்கும் நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவமனையாக்குகிறோம் என்று கிளம்பினால், மக்களின் அதிருப்தியை வலியப்போய் விலை கொடுத்து வாங்குகிறது அரசு என்றுதானே பொருள்?
நூலகத்துக்காகக் கட்டப்பட்ட இடம் நூலகமாகவே தொடரட்டும். அறிவுசார் பூங்காவில் இன்னொரு நூலகம் அமைவதாக இருந்தால் அமையட்டும், அதில் தவறொன்றுமில்லை. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை முழுக் கவனமும் செலுத்தப்பட்டு, சர்வதேசத் தரத்தில் செயல்படட்டும். மக்கள் வரிப்பணத்தை நூலகம் என்ற பெயரில் கபளீகரம் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்பதைப் பற்றியும் அரசு யோசிக்கட்டும். அதுதான் ராஜதந்திரமான முடிவாக இருக்கும்!
http://idlyvadai.blogspot.com/2011/11/blog-post_04.html
நடுநிலை குபீர்கள் ஏதோ கருணாநிதி, ஜெயலலிதா புதிய தலைமை செயலகதிற்காக கோட்டூர்புரத்தில் அடிக்கல் நாட்டிய இடத்தில் அண்ணா நுற்றாண்டு நூலகம் காட்டிவிட்டார் , அதினால் தான், இப்போது ஜெயா அதை மாற்ற முயல்கிறார் என்று ஜல்லி அடிகிறார்கள்...
ஜெயா புதிய தலைமை செயலகதிற்காக கோட்டூர்புரத்தில் அடிக்கல் நாட்டி பூஜை போட்டது 2003ல், அதிலிருந்து 2006 மே வரை ஜெயா என்ன செய்துகொண்டிருந்தார் ....
ராணிமேரி கல்லூரி இடத்தில் கட்ட தான் , கடற்கரை அருகாமை என்று கூறி மதிய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி மறுத்தது....கோட்டூர்புரத்தில் 2003ல் அடிகல் நாட்டியவர் 2006 வரை எதையும் கட்டாமல் இருந்தது ஏன்....
http://www.hindu.com/2003/10/31/stories/2003103105750100.htm
ஞானியின் கண்டனம் – ஓ பக்கங்கள் (கல்கி)
=========================================
கருணாநிதி கட்டினார் என்பதற்காக அண்ணா நூற்றாண்டு நூலகத்தை, கோட்டூர்புரத்திலிருந்து இடம் மாற்றும் ஜெயலலிதாவின் அராஜகத்துக்குக் கண்டனம். அடுத்த தேர்தலுக்கு கருணாநிதிக்கு வோட்டு சேகரித்துக் கொடுக்க ஆரம்பித்து விட்டார் ஜெ.
Post a Comment