Sunday, November 20, 2011

மகேந்திரனும்..முள்ளும் மலரும்..




சாதாரணமாக நான் அதிகம் டீவி பார்ப்பதில்லை..ஆனால் சென்ற சனிக்கிழமை ரிமோட்டை வைத்துக் கொண்டு இந்தச் சேனல்..அந்தச் சேனல் என நான் தாவிக்கொண்டிருந்த போது..பாலிமெரில் மதியம் இரண்டுமணிக்கு முள்ளும் மலரும் படம் ஒலி/ஒளி பரப்பானது.

பார்த்து நீண்ட நாட்கள் ஆனதால்..அதைப் பார்க்கத் தீர்மானித்தேன்..

அடடா..இன்றும் பார்க்க படம் எவ்வளவு அருமையாக இருக்கிறது..ஃபடாபட், ஷோபா, ரஜினி மூவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்துள்ளார்கள்..என்றால் இளையராஜாவின் இசை மனதை மயிலிறகால் வருடிக் கொடுத்தாற்போல இருந்தது..ராஜா ராஜாதான்.(நித்தம் நித்தம்,ராமன் ஆண்டால் என்ன< அடிப் பெண்ணே..அப்புறம் தி கிரேட்'செந்தாழம் பூவில்)

 கல்கி வெள்ளிவிழா ஆண்டில்..உமாசந்திரன் எழுதி பரிசு பெற்ற நாவல்தான் முள்ளும் மலரும்.அதை அருமையாய் திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருந்தார் மகேந்திரன்.

திரையுலகம் இந்த இயக்குனரை சரியாக உபயோகித்துக் கொள்ள வில்லையோ.

எம்.ஜி.ஆர்., அவர்கள் இவரிடம் தான் பொன்னியின் செல்வன் படம் எடுக்கப் போவதாகக் கூறி அதற்கான திரைக்கதை,வசனம் எழுதச் சொன்னார்.ஆனால் ஏனோ எம்ஜியார் அதை படமாக எடுக்கவில்லை.

பின்னர் மகேந்திரன், நாம் மூவர்,சபாஷ் தம்பி, பணக்காரப் பிள்ளை ஆகிய படங்களுக்குக் கதை எழுதினார்.பின் முக்தா ஃபிலிம்ஸ் சார்பில் எடுக்கப்பட்ட படம் நிறைகுடம்..இதற்கான கதை மகேந்திரன்தான்.திரைக்கதை,வசனம் சோ. மகேந்திரன் பின்னர் சோ விடம் படத்தில் கிளைமாக்ஸ் நாசம் பண்ணிவிட்டீர்கள் என்றார்.மகேந்திரனின் இந்த நேரிடையான பேச்சு சோ வைக் கவர..தனது துக்ளக் பத்திரிகையில் இவரை உதவி ஆசிரியர் ஆக்கினார்.துக்ளக்கில் சினிமா விமரிசனங்களை இவர் எழுதினார்.பின்னர் தங்கப்பதக்கம் இவரது கதை வசனத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது.ஆனாலும் தான் நினைத்த சினிமா இதுவல்ல என்று மகேந்திரன் நினைத்தார்.

இந்நிலையில் வேணு செட்டியார் முள்ளும் மலரும் படத்தை எடுக்க நினைத்தார்.அதற்கு மகேந்திரன் போட்ட ஒரே நிபந்தனை..படத்தை என் இஷ்டத்திற்கு எடுக்க விட வேண்டும் என்றுதான்.செட்டியார் இப்படத்தை இன்னொரு பாசமலர் என நினைத்து இதற்கு,'ரஜினி சரிப்படுவாரா?' என்று கேட்டாராம்.'ரஜினியின் திறமை எனக்குத்தான் தெரியும்' என்றார் மகேந்திரன்.ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் இந்தப் படம் ஓடாது என இதில் அக்கறை காட்டவில்லையாம்.300 அடி காட்சி எடுக்க கமல்தான் உதவினாராம்.

படம் வந்ததும்..முதல் இரண்டுவாரம் சைலண்டாக இருந்தது.தயாரிப்பு தரத்திலும் விளம்பரம் இல்லை.ஆனால் இரண்டு வாரத்தில் பார்த்த மக்கள் நல்ல படம் என விமரிசிக்க படம் மாபெரும் வெற்றி பெற்றது.

பின்னர் மகேந்திரனின் படங்கள், 'உதிரிப் பூக்கள்' பூட்டாத பூட்டுகள்' ஆகியவை வந்து அவருக்கு தமிழ்த் திரையுலகில் அற்புத இயக்குநர்களில் ஒருவர் என்னும் இடத்தை அளித்தது.

முள்ளும் மலரும் பற்றி போட்டு விட்டு படத்தை விமரிசக்கவில்லையே என்கிறீர்களா...

முதல் காரணம் இப்படத்தை நீங்களும் பார்த்திருப்பீர்கள்..

இன்னொரு காரணம் பாதாம் அல்வா நன்றாக இருக்கிறது என்றால்..எப்படி..அதை சுவைத்துப் பார்த்தால் தானே தெரியும்..அதுபோலத்தான் படத்தைப் பார்த்து ரசிக்க வேண்டும்.


5 comments:

பால கணேஷ் said...

அந்த நாவலையும் படித்துவிடடு திரைப்படத்தையும் பார்த்தவர்களுக்கு மகேந்திரன் எவ்வளவு அழகாகக் கொடுத்திருந்தார் என்பது புரியும். நீங்கள் குறிப்பிட்டிருந்தது போல் பாதாம் அல்வா தான்... நன்றாக எழுதியுளளீர்கள். நன்றி.

ஹேமா said...

உங்கள் பதிவால் முள்ளும் மலரும் யூடியூப்பில் பார்க்க முயற்சி செய்கிறேன் !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Online Works For All

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கணேஷ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
ஹேமா