வாய் விட்டு சிரிங்க...
1) பேருந்து பயண டிக்கெட் உயர்வு உன்னை பாதிக்கலையா..எப்படி?
டிக்கெட் வாங்கறவங்களைத்தானே அது பாதிக்கும்..
2)கோடீஸ்வரனாய் இருந்த அவன் திடீர்னு லட்சாதிபதியாயிட்டானே எப்படி..
அவன் வீட்டில் பால் உபயோகம் அதிகம்..அதனால்தான்
3)மின் கட்டண உயர்வு 100 விழுக்காடு உயர்ந்தாலும் அது மக்களைப் பாதிக்காதுன்னு முதல்வர் சொல்றாரே..எப்படி?
ஒரு நாளைக்கு 12 மணி நேர மின்வெட்டு அமுலுக்கு வரப்போகுதாம்..அப்படின்னா ஒருத்தர் ஒரு நாளைக்கு பாதிதானே மின்சாரம் உயோகிக்க முடியும்..
4)லஞ்ச ஒழிப்புத் துறை அந்த அரசியல்வாதி வீட்ல சோதனையிட்டாங்களே..அப்புறம் என்ன ஆச்சு..
அரசியல்வாதி சேர்த்ததிலே பாதியை லஞ்சமா கொடுக்க வேண்டி இருந்ததாம்
5)அந்த வழக்கிலே அரசியல்வாதியை விசாரிச்சாங்களே..அப்புறம் ஏன் விட்டுடாங்க....
நீங்கதானே ****** ன்னு நீதிபதி கேட்டதற்கு தெரியாதுன்னு பதில் சொன்னாராம்
6)உடம்பு சரியில்லைன்னு மருத்துவமனைக்குப் போன தலைவர் அங்கே மருத்துவர்கள் கிட்ட ஏன் சண்டை போடறார்..
தினமும் அவர் பெயர் பத்திரிகைலே வரணுமாம்..மருத்துமனையிலே இருக்கறதாலே அறிக்கை வெளியிட முடியாதுன்னு..சண்டை போட்டாதா தன் பெயர் வரட்டும்னு சண்டை போட்டாராம்.
7)அந்த குளோபல் மகப்பேறு மருத்துவ மனையில் வருமானவரித் துறை ஏன் சோதனைப் போட்டது.
உலக ஜனத்தொகை 700 கோடிங்கறதை படிச்ச அதிகாரிங்க..உலகம் ங்கறதை குளோபலோடு குழப்பிட்டாங்களாம்..அதனால அவ்வளவு மருத்துவம் பார்த்த ஆஸ்பத்திரி அதற்கான வரியைக் கட்டவில்லைன்னு சந்தேகப்பட்டங்களாம்...அதுதான்
4 comments:
செய்திகளில் நகைச்சுவையா?
ஹி..ஹி...ஹி...
ha..ha..ha..
TM 3.
Post a Comment