பக்ரீத் பண்டிகைக்காக குர்பானி வழங்கும் நிகழ்ச்சி தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது.அப்போது விஜய்காந்த் பேசுகையில்..மழை காரணமாக சென்னை நகர் முழுதும் கொசுத்தொல்லை அதகரித்து விட்டது.ஆனால் மாநகராட்சி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
அவர் மேலும் பேசுகையில்..
பால்,பெட்ரோல்,காய்கறி விலை உயர்ந்துள்ளது.இதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் கடந்த ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை மாற்றிக்கொண்டிருக்கிறார்.எத்தனையோ பிரச்னைகள் இருக்கையில் நூலகத்தை மாற்ற வேண்டிய அவசியம் என்ன?
கருணாநிதியை விரட்டவே கூட்டணியில் சேர்ந்தோம்.நாங்கள் எதிர்க்கட்சியாய் இருக்க விரும்புகிறோம்..எதிரிக்கட்சியாய் அல்ல.
நான் சட்டசபைக்கு வரவில்லை என்று கேட்பவர்..கடந்த ஆட்சியில் சட்டப்பேரவைக்குப் போனாரா?
தமிழக மீனவர் பிரச்னையில் கருணாநிதி செய்தது போல இவரும் கடிதம் எழுதிக் கொண்டு இருக்கிறார்..
பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி அரசு கண்டு கொள்ளவில்லை.தமிழகத்திலிருந்து கிடைக்கும் அந்நிய செலவாணி தொகையை தமிழகத்திற்கே மத்திய அரசு கொடுத்தால் பெட்ரோல் விலையை குறைக்க முடியும்.
இன்றைக்கு உரம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.அந்த துறையின் அமைச்சர் மு.க.அழகிரி எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை.உரத்தின் விலையைக் குறைக்க அவர் என்ன செய்யப் போகிறார்.. - என்றுள்ளார்.
4 comments:
//பால்,பெட்ரோல்,காய்கறி விலை உயர்ந்துள்ளது.இதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் கடந்த ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை மாற்றிக்கொண்டிருக்கிறார்.எத்தனையோ பிரச்னைகள் இருக்கையில் நூலகத்தை மாற்ற வேண்டிய அவசியம் என்ன?
//
நியாயமான கேள்வி
உங்களின் இந்த பதிவு இங்கே உள்ள தளத்தில் கோப்பி பேஸ்ட் செய்யப் பட்டுள்ளது... உங்கள் கவனத்திற்கு
http://desiyamdivyam.blogspot.com/2011/11/blog-post_07.html
செய்திகள் அனைவருக்கும் சொந்தம் தானே..மேலும் நான் அச் செய்தியைச் சொல்லியுள்ளேன்..அவர் அந்த செய்தி வந்த இணைய தளத்திலிருந்து அப்படியே எழுதியுள்ளார்.அவ்வளவுதான்.ஆதலால் நான் இதற்கு உரிமை கொண்டாட முடியாது.
வருகைக்கும் தகவலுக்கும் நன்றி சூர்யஜீவா
அந்த துறையின் அமைச்சர் மு.க.அழகிரி ?
சிரிப்பு தான்...
Post a Comment