மெர்சர் நிறுவனம்221 நகரங்களில் ஆய்வு நடத்தியது.மக்கள் பாதுகாப்பாக வாழும் நகரங்களில் பெல்ஜியம் நாட்டின் லக்சம்பர்க் நகரம் முதல் இடத்தில் உள்ளது.
உலக அளவில் சென்னை 108 ஆம் இடத்தில் இருந்தாலும் இந்தியாவில் சென்னை மாநகரமே பாதுகாப்பான நகரம் என முதலிடத்தைப் பெற்றுள்ளது.சென்னையில் மக்கள் பாதுகாப்பாக, நிம்மதியாக வாழ முடிகிறதாம்.
இதற்கு அடுத்த இடத்தில் பெங்களூரு உள்ளது அது 117 ஆம் இடத்தையும் டெல்லி, கொல்கத்தா ஆகியவை 127 ஆம் இடத்தையும் பெற்றுள்ளன.மும்பைக்கு 142 ஆம் இடம்.
இதே போல் அமைதியான சுற்றுச்சூழல், செலவு, கட்டமைப்பு, போக்குவரத்து வசதி, மருத்துவ வசதி கொண்ட வாழ்வதற்கு ஏற்ற நல்ல நகரங்கள் எது என்பது பற்றியும் மெர்சர் நிறுவனம் ஆய்வு நடத்தியது.
இதில் ஆஸ்திரியா நாட்டின் தலைநகரம் வியன்னா முதலிடத்தை பிடித்துள்ளது. 2-வது இடத்தை சுவிட்சர்லாந்தின் ஜூகுரிச் நகரம், 3-வது இடத்தை நியூசிலாந்தின்- ஆக்லாந்து நகரம் பெற்றுள்ளது. வழக்கமாக முதலிடத்தில் இருக்கும் சிங்கப்பூர் இந்த ஆண்டு 25-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. பெங்களூருக்கு 141-வது இடம் கிடைத்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் வாழ்வதற்கு ஏற்ற சிறந்த இடங்களில் பெங்களூர் முதலிடத்தை பிடித்துள்ளது. டெல்லி 2-வது இடத்தையும், மும்பை 3-வது இடத்தையும், சென்னை 4-வது இடத்தையும், கொல்கத்தா 5-வது இடத்தையும் பிடித்துள்ளது.
சர்சதேச அளவில் டெல்லி 143-வது இடம், மும்பை 144-வது இடம், சென்னை 150-வது இடம், கொல்கத்தா 151-வது இடத்தில் உள்ளது.
8 comments:
ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரை!
சில வருடங்கள் சென்னையில் வாழ்ந்த அனுபவத்தில்... மனிதர்கள் வாழ தகுதியில்லாத ஒரு இடமாகவே எனக்கு தெரிகிறது!
வெக்கை எரிச்சல்,குப்பை, கூளம், மரியாதை அற்ற பேச்சுகள் என தன்னகத்தே கொண்டது சென்னை
நிஜமாவே சொர்க்கமே என்றாலும் சென்னையைப் போலாகுமா..:)
Swiss/Zürich செலவு - சரியாத்தான் கணக்குப் போட்டிருக்காங்க !
வருகைக்கு நன்றி bandhu
வருகைக்கு நன்றி செந்திலான்
வருகைக்கு நன்றி தேனம்மை லெக்ஷ்மணன்
வருகைக்கு நன்றி ஹேமா
Post a Comment