தூத்துக்குடியில் அரசு பெண் டாக்டர் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, அரசு மருத்துவர்கள் 15000 க்கு மேற்பட்டவர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.இதனால் 8 லட்சத்திற்கு மேல் நோயாளிகள் பாதிப்பு அடைந்தனர்.1500 அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டன.
தூத்துக்குடியில் டாக்டர் சேதுலட்சுமி என்பவர் ஈஎஸ்ஐ தலைமை மருத்துவர்.இவர் தனியாகவும் கிளீனிக் நடத்தி வந்தார்.கடந்த திங்கள் அன்று இரவு கிளீனிக்கில் இருந்தவரை மகேஷ் என்னும் வாலிபர் வெட்டி கொலை செய்தார்.இவரது கிளினிக்கில் நித்யா என்பவர் கர்ப்பமாய் இருந்ததால் இவரிடம் சிகிச்சை பெற்று வந்தார்.பின்னர் நித்யா வேறு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.நித்யா இறந்ததற்கு மருத்துவர் சேதுலட்சுமிதான் காரணம் என மகேஷ் அவரை வெட்டிக் கொன்றார்.
மருத்துவர் சேதுலட்சுமியைக் கொலை செய்ததற்குக் கண்டித்தும், அரசு மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் தமிழகம் முழுதும் அரசு மருத்துவமனை,மாவட்ட மருத்துவமனை,ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை, மற்றும் ஈஎஸ்ஐ மருத்துவர்கள் திடீரென வேலை நிறுத்தம் செய்தனர்.
இதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகள்...முக்கியமாக கடைசி தட்டு நோயாளிகள் எவ்வளவு அவதிப் பட்டிருப்பார்கள்?
இன்று தனியார் மருத்துவமனைகளில் வேலை நிறுத்தம் தொடர்கிறது.இப்போராட்டம் தொடர்ந்தால்..வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுப்பதைக் குறித்து யோசிக்கலாம் என்றுள்ளார் உயர்ந்தி மன்ற தலைமை நீதிபதி..
எல்லாத் துறையையும் விட மருத்துவத் துறை புனிதமான ஒன்று..
ஒரு வக்கீலிடம் கூட கட்சிக்காரர் நம்பிக்கைதான் வைப்பார்..
ஆனால்..மருத்துவர்களிடம் நோயாளிகள் ..பல நேரங்களில் இறை பக்தியே வைப்பர்..
கடும் நோயிலிருந்து விடுபட்ட நோயாளியும்..அவர் குடும்பமும் மருத்துவரை..'டாக்டர்..எங்க கடவுள் நீங்க' என்று தங்கள் நன்றியைத் தெரிவிப்பர்.
அப்படிப்பட்ட தொழிலைச் செய்பவர்கள்..நோயாளிகளைப் புறக்கணித்து வேலை நிறுத்தம் செய்யலாமா..இயற்கை வேலை நிறுத்தம் செய்து..பூமி சுழலாமல் இருந்தால் என்னவாகும்...
மருத்துவ பட்டம் வாங்கும் போது இவர்கள் எடுக்கும் உறுதிமொழி என்ன?
ஆகவே எந்த நிலையிலும்..மருத்துவர்களின் இந்த போராட்டம் கண்டிக்கத்தக்கதே..
அதற்காக பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்த வில்லை..மருத்துவர்களுக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க எவ்வளவோ வழிகள் உள்ளன.
(டிஸ்கி -ஆட்டோ டிரைவரால் வெட்டிக் கொல்லப்பட்ட பெண் டாக்டர் சேதுலட்சுமி வெறும் மயக்க மருந்து நிபுணர் தான். ஆனால் அவர் ஒரு கர்ப்பிணிக்கு ஆபரேஷன் செய்துள்ளார். இது தற்போது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.)
4 comments:
நிலத்தில் வண்டி ஓட்டுவதை விட மேம்பட்ட தொழில்,சலுகைகள் என்பதாலேயே விமானிகள் பைலட்களாகிறார்கள்.ஆனால் அவர்களும் வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.ஒரு நாள் ரெயிலோ விமானமோ ஓடவில்லையென்றால் ஒன்றும் குடி முழுகிப்போயிடாது என்ற மனோபாவம் வளர்த்துக்கொண்டொம்.சகித்துக்கொள்ளக்கூடிய ஒன்றே.ஆனால் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் என்பது சட்ட விரோதம் மட்டுமல்ல,மனித உரிமை,மனித உயிர் விரோதமானது கூட.
குவைத் மீதான சதாம் ஹுசைனின் போர் ஆக்கிரமிப்பிலும் கூட மருந்து,உணவுப்பற்றாக் குறையில் மருத்துவமனைகள் செயல்பட்டதெல்லாம் வரலாற்றில் பதிவு செய்யப்ப்டாத செய்தி.
மருத்துவ துறை சார்ந்தவர்களின் கருத்தை அறிய விரும்புகிறேன்.நன்றி.
அறிந்துகொண்டேன்.
பகிர்வுக்கு நன்றி.
but when doctors are attacked, howmany times common man has supported doctors? anesthetic doctors can operate if they are skilled because only after passing MBBS in which training to operate is given.
அதற்காக பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்த வில்லை..மருத்துவர்களுக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க எவ்வளவோ வழிகள் உள்ளன.
Post a Comment